Monday, 31 August 2015

புத்தரின் போதனைகள்

புத்தரின் போதனைகள்

கரணிய மெத்த சுத்தங்
௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே,
எல்லா உயிர்களிடமும் எல்லையற்ற அன்பைக்காட்ட ஒருவர் பழகிக்கொள்ள வேண்டும்

02.தவறான கருத்துகளில் வீழ்ந்துவிடாமல், சீலத்தையும் உள்ளுரு நோக்கையும் கொண்டவராய், புலனாசையை அகற்றுகின்ற ஒருவர் மீண்டும் கருப்பைக்குள் பிறப்பெடுப்பதில்லை.

குத்தக பாட - மங்கள சுத்தங்
01.அறிவிலிகளை அகற்றுதலும், அறிஞர்களுடன் கூடுதலும், மரியாதைக்குரிய இடத்தில் மரியாதை தருவதுமான இதுவே மிகவுயர்ந்த அருள் வாழ்த்தாகும்

02.தீமையை நீறுத்தலும் விலக்கலும், போதையுட்டுவனவற்றைத் தவிர்த்தலும், தம்மத்தில் விழிப்பாகவிருத்தலும் ஆகிய இதுவே மிக உயர்வான அருட்பேறு ஆகும்.

மகாவக்கபாலி, 365 கிளாவத்துகதா
எனக்கு சேவை செய்ய விரும்புவோர், நோயாளிகளுக்குச் சேவை செய்யட்டும்
வசல சுத்தங் -1
01.கோபம், பழியுணர்வு, தீய எண்ணம், பொறமை, தவறான கண்ணோட்டம் மற்றும் ஏமாற்றும் போக்கு ஆகியவற்றை உடைய ஒருவனே தீண்டத்தகாதவன் ஆவான்.

02.தாவரங்களுக்கிடையே பல வகைகளும் இனங்களும் உள்ளன
விலங்குகளுக்கிடையே பல வகைகளும் இனங்களும் உள்ளன
பறவைகளுக்கிடையே பல வகைகளும் இனங்களும் உள்ளன
மீன்கள், பூச்சிகள், பாலுட்டிகள் ஆகியவற்றினிடையே
பல வகைகளும் இனங்களும் உள்ளன ஆனால் 

மனிதரிடையே - வேறுபாடே இல்லை

ஆளவக சுத்தம்
செல்வவளம் பெற உழைப்பாளியாய் இருங்கள்
செய்யத்தக்கன செய்யுங்கள்
புகழ்பெற - வாய்மையுடையோ ராயிருங்கள்
நண்பர்களை பெற - தாராளமாயிருங்கள்
மெய்யறிவு பெற - அறிவுற்று தம்மத்தை கேளுங்கள்
வேதனையுறாதிருக்க -தன்னடக்கத்தோடு செயல்படுங்கள்
ஈகை, வாய்மை, பொறாமையுடைமை
ஆகியவற்றைக் கைக்கொள்ளுங்கள் தேரா காதை  

01.தவத்திலும் பிரம்மச்சரியத்தினாலும், புலனடக்கத்தினாலும், மனக்கட்டுபாட்டினாலும் தான் ஒருவர் உன்னதமானவராவார்.

02.அலங்கரிக்கப்பட்ட இந்த உடலை பாரீர்
இது புண்களின் குவியல்
மெலிந்து தளர்ந்து உறுதி யிழந்த ஒரு கட்டி
சிந்தையை வெகுவாய் ஆட்கொள்ளும் இதனில்
இல்லை எதுவும் நீடிப்பதாக!
இல்லை எதுவும் நீடித்திருப்ப தாக


சம்யுத்த நிகாயம் 

01 தொடக்கத்திலும் நடுவிலும் முடிவிலும் - தத்துவ வடிவிலும், பயிற்சி வடிவிலும் நன்மை அளிப்பது  தம்மமே.  தங்கள் கண்களுக்கு முன்னே அறியாமையின் ஒரு சிறு திரையே உள்ள உயரினங்கள் தம்மத்தின் தொடர்பில் வரவில்லை என்றால் அவர்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டுவிடும். 

02.தற்செயல்தாமோ தீச்செயல்தாமோ
நடத்துகின்றானொரு மானுடன் இங்கெனில்
உற்றசொத்தென அவனுக்குள்ளது
உடனவன்கொண்டு செல்வது இவையே

03.நன்னெறி யாண்டுளதோ ஆங்கு மெய்யறிவு உள்ளது
மெய்யறிவு யாண்டுளதோ ஆங்கு நன்னெறி உள்ளது
மீண்டும் மீண்டும் பிறப்பதோ இறப்பதோ
மீண்டும் மீண்டும் சவக்குழி புகுவதோ
தெள்ளிய பார்வையும் தேறிய பாதையும்
நிப்பானம் உய்விக்கும் பிறப்பினை அறுக்கும்

04அறிவுடையோன் எப்போதும் இன்புறுகின்றான்
தனக்குள் முழுமையாய்ச் சுதந்திரம் அடைகின்றான்
புலனாசைகளால் அவன் கறைப்படுவதில்லை
பற்றற்றவனவன் பாதிப்புறுவதில்லை


தீக நிகாய, மகாபரிநிப்பன சுத்தங்
"தோன்றியவை யாவும் மறையும் தன்மை கொண்டதே;
சோர்வுறாது தொடர்ந்து முயற்சி செய்தவண்ணம் இருங்கள்"
          இதுவே புத்தரின் இறுதி வார்த்தைகள் ஆகும்.

மஜ்ஜிமநிகாயம் 140 ஆவது சூத்திரம்
உண்மைகளை உணர்ந்துக்கொள்ள போதனைகள் புத்தரிடமிருந்து வருகிறதா அல்லது வேறு ஒருவரிடமிருந்து வருகிறதா என்று பார்க்கக் கூடாது. அப்போதனைகளில் உண்மை இருக்கிறதா என்று மட்டுமே பார்க்க வேண்டும்

அந்த்தாலக்கண சுத்த
பிணியுறும் போதோ முதுமையுறும் போதோ 
உடல் உம்சொல்லைக் கேட்கிறதோ?
"இல்லை இல்லை - அது கேட்பதில்லை"

ஆணையிட்டுப் பிணியை ஒருவன் அகற்றவியலாது
ஆணையிட்டுப் முதுமையினைக் தடுக்கவியலாது
ஆணையிட்டுப் மரணத்தை நிறுத்தவியலாது

ஓவ்வொரு கணமும் மாறும் இவ்வுலகம்
மாறா ஆன்மாவை பெற்றிருப்பதெங்ஙனம்?
அதனால் இயலாது

சுத்த நிபாதம் 4 .6
உண்மையில் வாழ்க்கை மிகச் சிறிய தேயாம்
ஒருவர் நூற்றண்டுக்குள் மடிவது திண்ணம்
உடமைகள் யாவும் விட்டே செல்வார்
எனினும் எண்ணுவர் ' இது எனதென்றே"


ரோசிதச்ச சுத்தம் 
நான் போதிப்பன யாவும் 

துன்பமும் அவற்றின் துடைப்புமே


மகாமங்கள சுத்தம்
தந்தை தாயாரைப் பெணிடுதலும்
மனைவி மக்களை காத்திடுதலும்
அமைதியான தொழில்கள் யாவிலும்
ஈடுபட்டு வாழ்தலுமான வாழ்வே
பேறுகள் யாவிலும் நற்பேறாகும்

தம்ம பதம்

01.அவன் என்னை கடுமையாக பேசினான், என்னை  அடித்தான்
என்னை  தோற்கடித்தான், என்னிடமிருந்து எல்லாவற்றையும்
எடுத்துக்கொண்டான் என்பன போன்ற சிந்தனைகளுக்கு
அடைக்களம் தரும் ஒருவரிடம் வெறுப்பு தணிவதில்லை. (3) 

02.இந்த உலகத்தில், வெறுப்பை வெறுப்பால்
ஒருபோதும் அணைக்க முடியாது.
வெறுப்பின்மையால் (அன்பு) தான்
அதை அணைக்க முடியும்.
இதுவே நிலையான தர்மமாகும். (5)

03.இல்லனவற்றை உள்ளனவென்றும்
உள்ளனவற்றை இல்லனவென்றும்
தவறிய கருத்தை பேணிடுவோர்கள்

உண்மையை என்றும் அடைவதேயில்லை (11)

04.குறைபட வேய்ந்த கூரைவீட் டுள்ளே
ஊடுருவிப் பெய்யும் மழையினைப் போலே
முறைப்பட மேம்பா டுற்றிடா நெஞ்சில் 
ஊடுருவிக் காமம் உட்புகுந் திடுமே. (13)

05.இங்கும் துன்புறுகிறான் பின்பும் துன்புறுகிறான்
இம்மை மறுமை இரண்டிலும் தீயவன் 

துன்பம் உறுகிறான் துன்புற்று அழிகிறான்
தன்னுடைய மாசுறு செயல்களைக் கண்டே (15)

06.மனத்தை கட்டுப்படுத்துவது நன்று
மகிழ்ச்சியை அளிப்பது கட்டுடை மனமே (35)

07.புரிந்து கொள்வதே கடினமாம் மனம்,
மிகு நுட்பமானதால், விரும்புமிடம் அதுதாவும்,
அறிவோர் மனம் அடக்குவோ ராக.;
அடங்கிய மனது மகிழ்ச்சியை கொணரும். (36 )

08.மக்களென் உடைமை வளங்களென் உடைமை
முட்டாள் மனிதன் முழங்குவான் இங்ஙனம்
அவனே அவனுக்குரியவன் என்றேனில்
மக்களா உடைமைகள்? வளங்களா உடைமைகள்? (62 )

09.செல்வவள மாற்றத்தால் சிதைவுறா
உள்ளமே வாழ்விற்சிறந்த பேறாகும்
அசைவிலாமல் புயலைத் தாங்கும்
உறுதியான பறைபோல்
அசைவிலாமல் உறுதிகொள்வர்
அறிஞர் போற்றல் தூற்றலில் (81 )

10.ஆயிரம் யுத்தங்களில் ஆயிரக்கணக்கான மனிதர்களை வெல்பவனை விட
தம்மைத் தாமே வெல்பவன் தான்  மேன்மை வாய்ந்த போர் வீரனாவான். (103)


11.தமது மூத்தோரை இடைவிடாமல்
மதிக்கும் பக்தி இயல்புடையவர்களுக்கு
நீண்ட ஆயுள், அழகு, மகிழ்ச்சி, வலிமை
என்னும் நான்கு பண்புகளும் வளர்கின்றன (109 )
12.நல்லுரை தம்மால் நமக்கென்ன லாபம் 
என்றொரு போதும் எண்ணுதல் வேண்டாம்
துளித்துளி நீரால் குவளை நிரம்பும் 

துறவியோ தன்மை மதிப்பால் நிறைகிறார்
சிறுகச் சிறுக தான் என்றால் கூட (122)

13.அனைவரும் தண்டனையைக் கண்டு பயப்படுகிறார்கள்,
அனைவரும் மரணத்தைக் கண்டு பயப்படுகிறார்கள்.
ஆதலால், அனைவரையும் தம்மை போல் கருதி,
கொலை செய்யாமலிருப்பீர்களாக!
கொலை செய்வதையும் ஊக்குவிக்காமலிருப்பீர்களாக! (129 )
14.எவரிடமும் கடுங்சொற்களைப் பயன்படுத்தாதீர்கள்.
அவ்வாறு கடுங்சொற்களுடன் பேசினால் மற்றவர்களும் உங்களிடம்
அப்படியே பேசுவார்கள். கோபமும் விவாதமும் உள்ள சொற்கள் துன்பமே. அதன் விளைவாக உங்களுக்கு தண்டனைதான் கிடைக்கும். (133)

15.தனக்கெந்த நன்மையும்
செய்யாத செயலினையும்,
தீமைமிகு செயலினையும்
செய்வது மிக எளிதே;
அனால்
நன்மை பயப்பதையும்
நல்லதையும் செய்வதற்கு
உண்மையில் மிக கடினம் (163)


16.பசியே பெரும் பிணி (203)
உடல் நலமே பெரும் வரவு,
நம்பிக்கை உரியவர்களே உத்தம உறவினர்கள்  (204)

17.பற்றி லிருந்தே துக்கம் உதிக்கிறது
பற்றிலிருந்தே அச்சம் உதிக்கிறது
பற்றினை முற்றும் விட்டவற்கில்லை
துக்கம்; அச்சம்  அதைவிடக் குறைவே (216)

18.சீலம் உள்நோக்கில் நிறைநிலை உற்றவர்,
எவரவர் தம்மத்தில் நிலைத்து நிற்பவர்
உண்மை உணர்ந்தவர் தன்கடன் கழித்தவர்,
இவரே மக்கட் இனிவராம். (217 )

19.வாய்மைகளில் சிறந்தவை - நான்கு உன்னத வாய்மைகளே
வழிகளில் சிறந்தவை - உன்னத எண் வழிப்பாதைகளே
நிலைகளில் சிறந்தது - நிப்பான நிலையே 

மனிதரில் சிறந்தவர் - இவற்றை காண்பவரே (273)

20.புத்தர்கள் வழியை மட்டுமே காட்டுவார்கள் (276)

21." கூட்டுப்பொருட்கள் யாவும் நிலையற்றதே ஆகும்"
உண்மையான ஆழ்நோக்குடன் இதை உணர்ந்தறியும்
ஒருவர் துன்பத்திலிருந்து விடுபட்டவர் ஆகிறார்.

இதுவே தூய்மையடைவதர்க்கான வழி. (277)

22.உண்மையாகவே, தியானத்தினால் தெள்ளறிவு (ஞானம்) உதிக்கிறது. தியனமில்லை என்றால், ஞானம் தேய்கிறது.
பெறுவதும் இழப்பதுமாகிய இந்த இருவழிப் பாதையை அறிந்துக்கொண்டு, ஞானத்தை அதிகரிக்கும் வழியில் ஒருவர் தன்னையே வழிநடத்திக் கொள்ளவேண்டும். (282)

23.தம்மத்தின் தானம் அனைத்து தானங்களையும்  வெல்லக்கூடியது
தம்மத்தின்  சுவை அனைத்து சுவைகளையும் வெல்லக்கூடியது
தம்மத்தின் மகிழ்ச்சி அனைத்து இன்பங்களையும் வெல்லக்கூடியது
விருப்பின் (ஆசை யின்) அழிவு அனைத்து   துன்பங்களையும் வெல்லக்கூடியது(354) 

24.பகைவர் இடத்திலும் நட்புடனிருத்தல்
வன்முறைக் கிடையிலும் அமைதியாயிருத்தல்
பற்றுள்ளோர் இடையிலும் பற்றற்றிருத்தல் 
உற்றவ உன்னத மனிதர் என்பேனே (406)

Sunday, 30 August 2015

விவேகானந்தர்

நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் - விவேகானந்தர்


இந்த உலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக்கூடம். இங்கு நாம் நம்மை வலிமை உடையவர்கள் ஆக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சொந்த வளர்ச்சிக்காக தானே வேலை செய்தாக வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை. தனி மனிதனுக்குப் பொருந்தும் இந்த உண்மை நாடுகளுக்கும் பொருந்தும். தனி மனிதர்களின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்.த அற்ப இதயமுடைய மனிதர் களிடமிருந்து எந்த உருப்படியான வேலையை நீ எதிர்பார்க்க முடியும்? நீ கடலைக் கடக்க விரும்பினால் இரும்பைப் போன்ற மனவுறுதி உன்னிடம் இருந்தாக வேண்டும். மலைகளைத் துளைத்துச் செல்வதற்கு போதுமான வலிமை உனக்கு இருக்க வேண்டும்.
* சிந்தனையின் 90 சதவீத ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ, மனமோ ஒருபோதும்தவறு செய்வதில்லை.
* எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத் தான் வேறு திசைக்கு நாம் திருப்பிவிட முடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருகசக்தியாக இருப்பதற்கு பதிலாக, ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய்ய வேண்டும்.
* ஒரு கருத்தை எடுத்துக் கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை
மயமாக்கு. அதையே கனவு காண். அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள், நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தையே நிரப்பு. அந்த நிலையில் மற்ற எல்லா கருத்துக்களையும் தவிர்த்துவிடு. வெற்றிக்கு இது தான் வழி. நாம் உண்மையிலேயே பாக்கியவானாக விரும்பினால் நம்முள் நாம் மேலும் ஆழ்ந்து சென்றாக வேண்டும்.
* இவனை நம்பு. அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன்- முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. <உன்னைப் பற்றி முதலில் அறிந்து கொள். எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து நீஅந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ சாதிக்கப் பிறந்திருக்கிறாய். உறுதியுடன் எதையும் பொருட்படுத்தாமல் போராடினால், பாம்பின் விஷம் கூட சக்தி அற்றதாகிவிடும்.
* உலகம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே! உன் மனமே உனக்கு நீதிபதி. நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உன் காலடியில் பணிந்து கிடக்கும்.
* நம்பிக்கையை இழந்து விடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பது போல மிகவும் கடின மானது தான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடையவேண்டிய உனதுலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.
* எதிலும் கவனம் வேண்டும்
பேச்சு பேச்சாக இருந்தாலும், நாம் செய்து கொண்டிருக்கும் பணியில் இருந்து கவனம் சிதறிவிடக்கூடாது என்று பெரியவர்கள் சிறுவர்களுக்கு அறிவுரை சொல்வது வழக்கம். இது விவேகானந்தரின் விஷயத்தில் நூறு சதவீதம் சரியாக இருந்தது. அவரது நிஜப்பெயர் நரேந்திரன் என்னும் நரேன். இவரது தாயார் புவனேஸ்வரி ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இருந்து கதைகளையும், நீதிகளையும் மகனுக்கு எடுத்துச் சொல்வது வழக்கம். இதனால் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்பதில் சிறுவனாக இருந்தபோதே நரேன் உறுதியாக இருந்தார். ஒருநாள் பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் ஆர்வத்துடன் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு பாடத்தைக் கவனிக்கவில்லை. கோபம் கொண்ட ஆசிரியர் நரேனை எழுப்பி, நடத்திய பாடத்திலிருந்து கேள்விக்கணைகளைத் தொடுத்தார். ஆனால், சற்றும் தயங்காமல் அத்தனை கேள்விகளுக்கும் சரியான பதிலளித்தான் சிறுவன் நரேன்.
""நீ பேசிக் கொண்டிருந்தாய் என்று தவறாக எண்ணி விட்டேனே! உண்மையில் இவ்வளவு நேரம் வகுப்பில் பேசிக் கொண்டிருந்தது யார்?'' என்று கேட்டு மற்ற மாணவர்களைப் பார்த்தார் ஆசிரியர்.
நரேன் ஆசிரியரிடம், ""ஐயா! இவ்வளவு நேரம் பேசியது நான் தான்! இருப்பினும், பாடத்தில் இருந்தும் என் கவனம் விலகவில்லை'' என்று உண்மையைச் சொன்னார். ஒரு பணியில் கவனம் செலுத்தும்போது, மற்றொன்றைக் கேட்கும் நிலை வந்தால், அதிலும் கவனம் இருக்க வேண்டும், புரிகிறதா?
* துணிச்சலும் வேண்டும் கருணையும் வேண்டும்
விவேகானந்தரின் வீடு அருகில் உடற் பயிற்சிக் கூடம் ஒன்று இருந்தது. அங்கே நண்பர்களுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்தார். அங்கிருந்த பெரிய கனமான மரக்கட்டையை சிறுவர்கள் அனைவரும் சேர்ந்து உயரமான இடத்தில் இருந்து எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களால் அக்கட்டையை அசைக்கக் கூட முடியவில்லை. இதைக் கவனித்த மாலுமி ஒருவர் சிறுவர்களுக்கு உதவ முன்வந்தார். ஆனால், மரக்கட்டை நழுவி மாலுமியின் தலையில் விழுந்து விட்டது. ரத்தம் அதிகமாக வெளியேறியதால் அவர் மயக்கமடைந்தார். அவர் இறந்து விட்டதாக கருதி சிறுவர்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தனர். விவேகானந்தர் தன்னுடைய வேட்டியைக் கிழித்து காயத்தில் கட்டுப் போட்டதோடு அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து தெளிய வைத்தார். பெரியவர்களை உதவிக்கு அழைத்து மருத்துவரிடம் காண்பிக்க ஏற்பாடு செய்தார். ஆபத்தான நேரத்தில் துணிவோடும், கருணையோடும் செயல்படவேண்டும் என்பது நரேனின் இயல்பான சுபாவமாக இருந்தது
* வெளிநாட்டு சகோதரன்
பேராசிரியர் ரைட் என்பவர் சுவாமி விவேகானந்தருக்காக, சிகாகோவில் நடந்த சர்வ மத மகாசபை மாநாட்டில் பேச அனுமதிக்கும் சிபாரிசு கடிதம் ஒன்றினைக் கொடுத்திருந்தார். சிகாகோவுக்குச் சென்றதும், தன்னிடம் இருந்த சிபாரிசு கடிதம், சர்வமத மகாசபை இருக்குமிடம், செலவுக்கு இருந்த பணம் உட்பட அனைத்தையும் விவேகானந்தர் தொலைத்து விட்டார். குளிரும் பசியும் விவேகானந்தரை வாட்டியது. எங்கு செல்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். செல்வந்தர்கள் வாழும் சிகாகோவில் ரோட்டோரத்தில் அமர்ந்து விட்டார். அவரைக் கண்ட ஆங்கிலேயப் பெண்மணி மிசஸ் ஹேல் விவேகானந்தரிடம் வந்து விஷயங்களை அறிந்து கொண்டு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தன் கணவர் ஜார்ஜ் ஹேல் உதவியுடன் சர்வ மத மகாசபையில் பேசும் சொற்பொழிவாளர்கள் பட்டியலில் இடம் பெறச் செய்தார். ஜார்ஜ் ஹேல் குடும்பம், தனக்கு ஒரு சகோதரனைப்போல அன்பு பாராட்டி உதவி செய்ததாக விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.

Saturday, 29 August 2015

Set operations

Set operations illustrated with Venn diagrams


Lord Buddha

Beautifully answered by Lord Buddha :
“Master, What’s the
difference between
“like” n “love”?
Lord Buddha’s answer was so simple:
“When u like a flower, u just pluck it. But when u love a flower, u water it daily..!
புத்தரிடம் கேட்கிறார்கள்.
” ஆசைப்படுவதற்கும் நேசிப்பதற்கும் என்ன வித்தியாசம்?”
"புத்தரின் பதில் மிகவும் எளிமையானது."“ஒரு பூவைப் பிடித்திருந்தால், நீங்கள் அதைப் பறித்துவிடுவீர்கள்.ஆனால், அதை நேசித்தால், தினமும் நீரூற்றுவீர்கள்!”

Friday, 28 August 2015

சமூக அறிவியல் - பொது அறிவுக் களஞ்சியம்

தொகுப்பு: வீ.ராஜீவ்காந்தி, பட்டதாரி ஆசிரியர்
எண் வினா விடை
1.பூமியின் மேற்பரப்புக் குளிர்ந்த்தால் உருவாகியவை எது?நிலப்பகுதிகள்
2. மழையினால் பூமியில் உள்ள பள்ளங்கள் நிரம்பியதால் ______________ தோன்றின? பெருங்கடல்கள் 
3. நெபுலாக்கள் என்று எவை அழைக்கப்பட்டன? விண்துகள் 
4. ஆசியக் கண்ட்த்தில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு எது? சிந்து 
5. நட்சத்திர மண்டலங்களும் சூரியக் குடும்பமும் எங்கிருந்து தோன்றின? நெபுலா 
6. வேதகாலம் மற்றும் இதிகாச காலங்களில் குடும்பம் எதன் அடிப்படையில் காணப்பட்டது? சமூக வாழ்க்கை 
7. பலதார மணத்தை வன்மையாகக் கண்டிப்பது எது? தர்ம சாஸ்திரம் 
8. 4-ம் சவனம் என்ற சடங்கு எதற்காக வேண்டிச் செய்யும் சடங்கு? ஆண் மகவு வேண்டி 
9. நான் கவிஞனாகவும், என் தந்தை மருத்துவராகவும், என் தாய் தானியம் அரைப்பவளாகவும் இருக்கின்றோம் என்ற ரிக்வேத வரிகள் எதனை உணர்த்துகின்றன? சாதி நிலை இல்லாத சமுதாயம் 
10. மெளரிய ஆட்சியின் முற்பகுதியில் ___________ சமய வளர்ச்சியும், பிற்பகுதியில் ___________ சமய வளர்ச்சியும் நடைப்பெற்றது? சமண, புத்த 
11. மெளரியர் காலத்தில் எவை சிறப்பாகக் கருதப்பட்டது? தாய் தந்தையர்க்குப் பணி செய்தல், அஹிம்சையைக் கடைப்பிடித்தல் 
12. மெளரியர் காலத்தில் எவை எவை தடை செய்யப்பட்டன? விலங்குகளைப் பலியிடுதல், பொருட்செலவு மிக்கச் சடங்கு 
13. சங்க காலத்தில் நில அமைப்பிற்கு ஏற்றவாறு மக்களின் _____________ முறை அமைந்திருந்தன? வாழ்க்கை 
14. குப்தர் கால பேரரசில் எது கடுமையாகப் பின்பற்றப்பட்டது? சாதி முறை 
15. பல்லவர் காலத்தில் எவை எவை வீழ்ச்சியடைந்தன? புத்த மற்றும் சமண சமயம் 
16. நிலையான நிலவரி யார் ஆட்சியில் தொடங்கப்பட்டது? ஆங்கிலேயர் ஆட்சியில் 
17. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் எவை எவை மேம்படுத்தப்பட்டன? சாலைகள் 
18. அடையாள அட்டை வெளியிட்டவர் மற்றும் விவசாயிகளுக்கு கடன் அளித்தவர் யார்? முகமது பின் துக்ளக் 
19. உளவுத்துறையை ஏற்படுத்தியவர் யார்? பிரோஷ்ஷா துக்ளக் 
20. நிலப்பகுதி உயரமாகவும், மேல்பகுதி தட்டையாகவும் இருந்தால் அது ________ எனப்படும்? பீடபூமி 

அறிவியல் - பொது அறிவுக் களஞ்சியம்

தொகுப்பு: இரா.மணிகண்டன், பட்டதாரி ஆசிரியர்
எண் வினா விடை
1.மலேரியாவைப் பரப்பும் உயிரினம் எது? அனோபிலஸ் பெண் கொசு 
2. பைலோரியாசஸ் பரப்பும் வைரஸ் எது? ஊச்சரேரியா பிரங்கிராப்டி 
3. நோய் பரப்பிகள் உயிரியல் வழி எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன? கம்பூசியா மீன்களை வளர்ப்பதன் மூலமாக 
4. பன்றிக் காய்ச்சலை உருவாக்கும் தீங்குயிரி எது? H1 N1 வைரஸ் 
5. திண்மப் பொருள் திரவப் பொருளுடன் எவ்வாறு வேறுபடுகிறது? பாயும் தன்மை இருப்பதால் 
6. உமியோடு மண்புழுக்கள் சேர்த்து தயாரிக்கப்படும் உரம் எது? வெர்மி கம்போஸ்ட் 
7. நெல் பயிரிடும் நிலத்திலிருந்து வெளியாகும் வாயு எது? மீத்தேன் 
8. புரதச்சத்துள்ள உணவுப் பொருளுக்கு எடுத்துக்காட்டு? பருப்பு 
9. பாஸ்டியர் முறையில் பால் எந்த வெப்ப நிலையில் காய்ச்சப்படுகிறது? 60 டிகிரி செல்சியஸ் 
10. உணவுப் பொருள்களை நுண்ணுயிரியின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப் பயன்படும் இயற்கையான பதப்படுத்தி எது? சாதாரண உப்பு 
11. மனித உடலில் உள்ள எலும்புகளில் மிகச் சிறியது எது? ஸ்டேபஸ் 
12. சிறு மூளையின் வேலை எது? உடல் சம நிலைமை கட்டுப்படுத்துதல் 
13. உயிர் முடிச்சு என அழைக்கப்படுவது எது? முகுளம் 
14. கண் பார்வைக்குத் தேவையானது எது? வைட்டமின் ஏ 
15.மண்டை ஓட்டில் உள்ள அசையா மூட்டுகளின் எண்ணிக்கை?8
16. காற்றின் வாயிலாக விதை பரவுதலுக்கு எடுத்துக்காட்டு? எருக்கு 
17. வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சியை வரிசைப்படுத்துக? முட்டை, புழு, கூட்டுப்புழு, வண்ணத்துப்பூச்சி 
18. நுண்ணுயிரியின் தந்தை என்று அழைக்கப்படுபவர்? லூயி பாஸ்டியர் 
19. மூன்றாம் வகை நெம்புகோலுக்கு எடுத்துக்காட்டு தருக?ஆய்வகத்தில் பயன்படும் இடுக்கி 
20. உணவில் இருப்பது எவ்வகை ஆற்றல்? வேதி ஆற்றல் 

கணிதம் - பொது அறிவுக் களஞ்சியம்

கணிதம் - பொது அறிவுக் களஞ்சியம்: 
தொகுப்பு. அ.அக்பர், எம்.எஸ்சி., எம்.எட்., 
பட்டதாரி ஆசிரியர், 
அரசு உயர்நிலைப் பள்ளி, 
எடச்சித்தூர்,
கடலூர் மாவட்டம்
எண் வினா விடை
1.ஒரு கோணம் அதன் மிகை நிரப்புக் கோணத்தைப் போல் மூன்று மடங்கு எனில் அந்த கோணத்தின் அளவு?135 டிகிரி
2. அரை வட்டத்தில் அமையும் கோணம்? நேர்கோணம் 
3. சிறிய வட்டத்துண்டில் அமையும் கோணம்? விரி கோணம் 
4. பெரிய வட்டத்துண்டில் அமையும் கோணம்? குறுங்கோணம் 
5. ஆறு சம சதுரங்களை முகங்களாகக் கொண்ட உருவம்? கனசதுரம் 
6. ஒரு பொருளால் புறவெளியில் அடைபடும் பகுதியானது அதன் ____________? கன அளவு 
7. முதல் 10 இயல் எண்களின் சராசரி? 5.5 
8. -5 முதல் 5 முடிய உள்ள முழுக்களின் கூட்டுச்சராசரி? 0 
9.5 எண்களின் கூட்டுச்சராசரி 20. அவற்றிலிருந்து ஒரு எண்ணை நீக்கினால் அவற்றின் கூட்டுச்சராசரி 15 எனில் நீக்கப்பட்ட எண்? 40 
10. எதிர் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் ___________ ஆகும்? சாய்சதுரம் 
11. π-ன் தோராய மதிப்பினைக் கொடுத்தவர்? பிரம்ம புத்திரா 
12. வடிவியலின் அடிப்படைக் கருத்து ____________ ஆகும்? புள்ளி 
13. சூத்திரங்களைப் பயன்படுத்தி பரப்பளவு காண இயலாதவை? கூம்பு 
14. ஒரு தளத்தில் அமைக்க இயலாத வடிவியல் உருவங்கள் ____________ ஆகும்? ஐங்கோணம் 
15. முக்கோணத்தின் வகைகள் எத்தனை? 
16. பல கோணத்தின் அனைத்துப் பக்கங்களின் நீளங்களும் சமமாக இருப்பின் ___________ என்கிறோம்? வில் 
17. நீளம், அகலம், உயரம் போன்றவை இல்லாத ஒன்று கணிதத்தில் _____________ ஆகும்? வட்டம் 
18. வடிவியலின் தந்தை என்று போற்றப்படுபவர்? ரிண்ட் பாப்பிதரஸ் 
19. அரைக்கோணத்தின் புறப்பரப்பு? 3πr2 
 20.360 டிகிரி என்பது ______________ ரேடியன்கள்? 2 π 

ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி?

ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி?


பேச்சு ஆங்கிலத்தை ( Spoken English ) வளர்த்துக் கொள்வதற்கான எளிய குறிப்புகள்:
TIPS BY: R.VASANTHAKUMAR, BT ASST[ E]ஆங்கிலம்
  
 * 30 நாட்களில் ஆங்கிலம் பேச்சுRepidex, விவேகானந்தா கல்வி நிலையம் போன்றவற்றை நாடாதீர்கள். முறைப்படி இலக்கண விதிகளை நினைவு வைத்துப் பேச வேண்டி இருப்பது, உங்களை மனம் தளரச் செய்யலாம். நீங்கள் பேசிப் பழகப் பழக நாளடைவில் இலக்கணம் தானாக வரும்.
* பேச முற்படும் முன் நிறைய ஆங்கிலப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டே இருங்கள். எடுத்துக்காட்டுக்கு, கிரிக்கெட் வர்ணனை, தொலைக்காட்சிச் செய்திகள். பொருள் புரியாவிட்டாலும் ஓசைகள், சொற்களுக்குப் பழக்கப்பட உதவும்.
* உங்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாவிட்டால், விளம்பர வாசகங்கள், கடைகளின் தட்டிகள், படம் போட்ட சிறுவர் கதை நூல்கள் போன்றவற்றை வாசிக்கத் தொடங்கலாம். HINDU போன்ற உயர் தர ஆங்கில இதழ்கள், அகரமுதலிகளை எடுத்த எடுப்பிலேயே புரட்டுவது மட்டும் ஆங்கிலம் பேச உதவாது.
* தமிழ் தெரியாத பிற மொழி நண்பர்களிடம் பேச்சு கொடுத்துப் பழகுங்கள். இந்தச் சூழ்நிலைகளில் உங்கள் பேச்சுப் பிழைகளைப் பொருட்படுத்த மாட்டார்கள். நீங்கள் பேசுவது அவருக்குப் புரிந்தாலே வெற்றி தான்.
* சரியோ தவறோ பேசத் தொடங்குங்கள். பேசவே தொடங்காமல் ஆங்கிலம் தெரியவில்லையே என்று வருந்துவதில் பயனில்லை. நீங்கள் எவ்வளவு கூடுதலாகவும் அடிக்கடியும் வெவ்வேறு விசயங்களைப் பேசிப் பழகுகிறீர்களோ அவ்வளவு விரைவில் பேச்சு ஆங்கிலம் கைக்கூடும்.
* நன்கு தெரிந்தவர்களிடம் குறை ஆங்கிலத்தில் பேசக் கூச்சமாக இருந்தால், முன் பின் தெரியாத இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டுக்கு, ஒரு வாடிக்கையாளர் சேவையைத் தொலைபேசியில் அழைக்கும் போது ஆங்கிலத்தில் பேச வாய்ப்பு இருந்தால் பேசிப் பாருங்கள்.
ஆங்கிலம் மட்டுமல்ல எந்த ஒரு மொழிக்கும் இந்தக் குறிப்புகள் பொருந்தும். உங்களுக்கு வேறு ஏதும் குறிப்புகள் தெரிந்தால் சொல்லுங்கள்.

திருக்குறள்


பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களை தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும்வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.

7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.

  அறத்துப்பால்

  பாயிரவியல்

 1. கடவுள் வாழ்த்து
 2. வான்சிறப்பு
 3. நீத்தார் பெருமை
 4. அறன் வலியுறுத்தல்
 5. இல்லறவியல்

 6. இல்வாழ்க்கை
 7. வாழ்க்கைத் துணைநலம்
 8. புதல்வரைப் பெறுதல்
 9. அன்புடைமை
 10. விருந்தோம்பல்
 11. இனியவைகூறல்
 12. செய்ந்நன்றி அறிதல்
 13. நடுவு நிலைமை
 14. அடக்கமுடைமை
 15. ஒழுக்கமுடைமை
 16. பிறனில் விழையாமை
 17. பொறையுடைமை
 18. அழுக்காறாமை
 19. வெஃகாமை
 20. புறங்கூறாமை
 21. பயனில சொல்லாமை
 22. தீவினையச்சம்
 23. ஒப்புரவறிதல்
 24. ஈகை
 25. புகழ்
 26. துறவறவியல்

 27. அருளுடைமை
 28. புலான்மறுத்தல்
 29. தவம்
 30. கூடாவொழுக்கம்
 31. கள்ளாமை
 32. வாய்மை
 33. வெகுளாமை
 34. இன்னாசெய்யாமை
 35. கொல்லாமை
 36. நிலையாமை
 37. துறவு
 38. மெய்யுணர்தல்
 39. அவாவறுத்தல்
 40. ஊழியல்

 41. ஊழ்
 42. பொருட்பால்

  அரசியல்

 43. இறைமாட்சி
 44. கல்வி
 45. கல்லாமை
 46. கேள்வி
 47. அறிவுடைமை
 48. குற்றங்கடிதல்
 49. பெரியாரைத் துணைக்கோடல்
 50. சிற்றினஞ்சேராமை
 51. தெரிந்துசெயல்வகை
 52. வலியறிதல்
 53. காலமறிதல்
 54. இடனறிதல்
 55. தெரிந்துதௌiதல்
 56. தெரிந்துவினையாடல்
 57. சுற்றந்தழால்
 58. பொச்சாவாமை
 59. செங்கோன்மை
 60. கொடுங்கோன்மை
 61. வெருவந்தசெய்யாமை
 62. கண்ணோட்டம்
 63. ஒற்றாடல்
 64. ஊக்கமுடைமை
 65. மடியின்மை
 66. ஆள்வினையுடைமை
 67. இடுக்கண் அழியாமை
 68. அமைச்சியல்

 69. அமைச்சு
 70. சொல்வன்மை
 71. வினைத்தூய்மை
 72. வினைத்திட்பம்
 73. வினைசெயல்வகை
 74. தூது
 75. மன்னரைச் சேர்ந்தொழுதல்
 76. குறிப்பறிதல்
 77. அவையறிதல்
 78. அவையஞ்சாமை
 79. அங்கவியல்

 80. நாடு
 81. அரண்
 82. பொருள்செயல்வகை
 83. படைமாட்சி
 84. படைச்செருக்கு
 85. நட்பு
 86. நட்பாராய்தல்
 87. பழைமை
 88. தீ நட்பு
 89. கூடாநட்பு
 90. பேதைமை
 91. புல்லறிவாண்மை
 92. இகல்
 93. பகைமாட்சி
 94. பகைத்திறந்தெரிதல்
 95. உட்பகை
 96. பெரியாரைப் பிழையாமை
 97. பெண்வழிச்சேறல்
 98. வரைவின்மகளiர்
 99. கள்ளுண்ணாமை
 100. சூது
 101. மருந்து
 102. ஒழிபியல்

 103. குடிமை
 104. மானம்
 105. பெருமை
 106. சான்றாண்மை
 107. பண்புடைமை
 108. நன்றியில்செல்வம்
 109. நாணுடைமை
 110. குடிசெயல்வகை
 111. உழவு
 112. நல்குரவு
 113. இரவு
 114. இரவச்சம்
 115. கயமை
 116. காமத்துப்பால்

  களவியல்

 117. தகையணங்குறுத்தல்
 118. குறிப்பறிதல்
 119. புணர்ச்சிமகிழ்தல்
 120. நலம்புனைந்துரைத்தல்
 121. காதற்சிறப்புரைத்தல்
 122. நாணுத்துறவுரைத்தல்
 123. அலரறிவுறுத்தல்
 124. கற்பியல்

 125. பிரிவாற்றாமை
 126. படர்மெலிந்திரங்கல்
 127. கண்விதுப்பழிதல்
 128. பசப்பறுபருவரல்
 129. தனிப்படர்மிகுதி
 130. நினைந்தவர்புலம்பல்
 131. கனவுநிலையுரைத்தல்
 132. பொழுதுகண்டிரங்கல்
 133. உறுப்புநலனழிதல்
 134. நெஞ்சொடுகிளத்தல்
 135. நிறையழிதல்
 136. அவர்வயின்விதும்பல்
 137. குறிப்பறிவுறுத்தல்
 138. புணர்ச்சிவிதும்பல்
 139. நெஞ்சொடுபுலத்தல்
 140. புலவி
 141. புலவி நுணுக்கம்
 142. ஊடலுவகை