Monday, 30 November 2015

அணையா விளக்குகள்எவ்வித எரிபொருளும் இல்லாமலே தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன! உடனே இது இக்கால அறிவியல் கண்டுபிடிப்பு என்று எண்ணிவிடாதீர்கள்! ஐந்தாம் நூற்றாண்டு காலகட்டத்திலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
இவை எங்கு பயன்படுத்தப்பட்டது தெரியுமா? இறந்தவர்களின் கல்லறையில் தான். அவர்கள் இறந்தபின்பு மோட்சத்திற்கான வழி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த விளக்கினையும் அவர்களுடன் சேர்த்து அடக்கம் செய்துள்ளனர். இதில் பெரும்பாலான விளக்குகள் சேர்த்து புதைக்கப்பட்டிருந்தாலும், ஒரு சில விளக்குகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவை இன்னும் எரிந்துகொண்டே இருக்கின்றன என்பதுதான். மூட நம்பிக்கை உடையவர்கள் இறந்தவர்கள் பாவம் செய்தவர்கள் போன்ற பல காரணங்களைக் கூறினாலும் அறிவியல் வழியாகப் பார்க்கும்போது இது ஒரு விந்தையான செயலே.
ஹீப்ரு சமுகத்தினர் இதில் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். அவர்கள் எதைக் கண்டறிந்து பாதுகாத்து வந்தனரோ அதைத்தான் நாம் தற்போது மின்சாரம் என்று பயன்படுத்தி வருகின்றோம். யூதச் சட்டங்களைப் படித்தவரான ஜெச்சில்லி கண்டறிந்த விளக்கானது எந்தவித தூண்டுதலும் இல்லாமலே, ஏன் எரிபொருளும், திரியும் கூட இல்லாமலே எரியத் தொடங்குமாம் என்ற கதைகளும் உள்ளன.
இன்றைய காலகட்டத்தில் கூட இது போன்ற அணையா விளக்குகள் கண்டுபிடிக்க முடியாமல் போன நிலையில் அந்தக் காலத்திலேயே எப்படி கண்டறிந்திருப்பார்கள்?

10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்


10 most extremely bizarre phobiasஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அச்ச உணர்வுகள் உண்டு. அதிலும் சிலரின் அச்சங்கள் மற்றவர்களையும் அச்சம் கொள்ளச் செய்யும். அந்த வகையில் இன்று உங்களுக்கு 10 வகையான வித்தியாசமான அச்சங்கள் பற்றி அறியத் தருகின்றேன், படிக்கின்றீர்களா?
1. சாலையினைக் கடப்பதற்கான அச்சம் (அகைரோபோபியா, Agyrophobia) – சாலையினைக் கடப்பது, குறுக்குச் சந்திப்புகளைக் கடப்பது போன்ற இடங்களில் பயம் கொள்வது அகைரோபோபியா ஆகும். கைரஸ் எனும் கிரேக்க வார்த்தையில் இருந்து இந்த வார்த்தை எடுக்கப்பட்டது. இதில் பலவகைகள் உள்ளன. இதுபோன்ற பயம் இருப்பவர்கள் அதிக போக்குவரத்து வாய்ந்த நகரங்களில் வசிப்பது மிகவும் கடினம்.
2. சமையல் செய்வதற்கான பயம் (மஜைரோபோபியா, Mageirocophobia) – இது பெரும்பாலும் தனியாக சமைத்து சாப்பிடும் சிலருக்கு வரும் வாய்ப்புள்ளது. நன்றாக சமைக்கும் சிலரை பார்த்தால்கூட இவர்களுக்கு பயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
3. பொம்மைகளைப் பார்த்தால் பயம் (பேடியோபோபியா, Pediophobia) – இது சில பயமுறுத்தும் வகையிலான பொம்மைகள் மட்டுமல்ல எந்த பொம்மையினைப் பார்த்தாலும் ஏற்படும் ஒருவிதமான பயம். இதனால் வெளியிடங்களில் பொருட்களை வாங்கச் செல்லும்போது பல பிரச்சினைகள் ஏற்படும். இதுபோல் குழந்தைகளை பார்த்தும் பயம்கொள்வோருக்கு பேடோபோபியா என்று பெயர்.
4. சாப்பிடும்போது பேசுவதற்கு பயம் (டெயிப்னோபோபியா, Deipnophobia) – சிலர் சாப்பிடும்போது பேசுவதற்கு பயம் கொள்கின்றனர். சில சமுதாய ஒழுங்குமுறை கொண்ட மதிப்புமிக்க இடங்களில் சாப்பிடும்போது பேசும் பழக்கத்தினைத் தவிர்க்கின்றனர். பிற சாதாரண இடங்களில் இவர்களின் நிலை சிறிது கடினமானதுதான்.
5. கண்ணாடியினைப் பார்த்து பயம் (எயிசோப்ட்ரோபோபியா, Eisoptrophobia) – இதுபோன்ற பய உணர்வுகள் பகுத்தறிவற்றது என்று தெரிந்திருந்தும், சிலர் கண்ணாடியினை பார்த்தவுடன் பதட்டம் கொள்வர். சிலர் கண்ணாடி உடைந்தால் அது கெட்ட சகுணம் என்றும், சிலர் கண்ணாடிக்குள்ளும் ஒரு உலகம் உள்ளது என்றும் நினைக்கின்றனர்.
6. சாத்தான்களைப் பற்றிய பயம் (டெமனோபோபியா, Demonophobia) – இயற்கையின் தீய படைப்புகளாக சாத்தான்களை நினைப்பவர்கள் இதுபோன்ற பயத்தினைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கூட்டமாக இருக்கும்போது பேசிய சாத்தான் பற்றிய சிந்தனைகளை, அவர்கள் தனியாக இருக்கும்போது சிந்தித்து பயம் கொள்வர்.
7. மாமியாரைப் பற்றிய பயம் (பேந்தெரபோபியா, Pentheraphobia) – இது பெரும்பாலான திருமணமானவர்களுக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மூளையில் தேவையில்லாத எண்ணங்கள் வரும், அதன் விளைவாக விவகாரத்துகூட ஏற்படலாம்.
8. வேர்க்கடலை வெண்ணெய் வாயின் உட்புற தாடையின் மேல்புறத்தில் ஒட்டிக்கொள்ளும் என்ற பயம் (அராகிபியூடைரோபோபியா, Arachibutyrophobia) – சிலர் நாம் வெண்ணெய் அல்லது ஜெல்லி போன்ற பதார்த்தங்கள் வாங்கும்போது வேண்டாம் என்று கூறுவார்கள். அவர்களிடம்தான், இதுபோன்ற பயம் இருக்கும். அவை வாயில் ஒட்டிக்கொள்ளுமோ என்ற பயம் அவர்களிடம் இருக்கும்.
9. உட்காருவதற்கான பயம் (கேதிசோபோபியா, Cathisophobia) – மூலம் சம்பந்தப்பட்ட நோய் பிரச்சினைகள் உடையவர்களுக்கு இதுபோன்ற பயம் எப்போதும் ஏற்படும். பள்ளி நாட்களில் உட்காருவது குறித்த தண்டனைகள் பெற்றவர்கள் இதுபோன்ற பயங்களுக்கு உள்ளாக வாய்ப்புண்டு.
10. வாயசைக்கும் பொம்மையினைப் பற்றிய பயம் (ஆட்டோமடோனோபோபியா, Automatonophobia) – இதுவும் பொம்மை போன்றதுதான். சிலர் தனது கைகளின் மூலம் பொம்மையின் வாயினை மட்டும் அசைப்பார்கள், பின்னர் அதற்குத் தகுந்த குரலை எழுப்புவார்கள். இதற்கென்று தனியென எந்தவொரு சிகிச்சை முறைகளும் கிடையாது

மேரி கியூரி


மரியா ஸ்லொடஸ்கா-கியூரி
Marie Curie c1920.png
மேரி கியூரி, கி.பி. 1920
பிறப்புநவம்பர் 71867
பிறப்பிடம்வார்சாபோலந்து
இறப்புஜூலை 41934 (அகவை 66)
இறப்பிடம்பாரிஸ், பிரான்ஸ்
குடியுரிமைரஷ்யர், பின்னர் பிரான்சியர்
தேசியம்போலந்து
துறைஇயற்பியல்வேதியியல்
பணி நிறுவனம்பாரிஸ் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பாரிஸ் பல்கலைக்கழகம்
ESPCI
ஆய்வு நெறியாளர்  என்றி பெக்கெரல்
குறிப்பிடத்தக்க
மாணவர்கள்  
André-Louis Debierne
Óscar Moreno
Marguerite Catherine Perey
அறியப்படுவதுகதிரியக்கம்பொலோனியம்ரேடியம்
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1903)
டேவி பதக்கம் (1903)
Matteucci Medal (1904)
வேதியியலுக்கான நோபல் பரிசு (1911)
துணைவர்பியேர் கியூரி (1859–1906)
சமயம்கடவுளை என்றுமே முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என நம்புபவர்
ஒப்பம்மேரி கியூரி's signature
பிற குறிப்புஇருவேறு விஞ்ஞானத் துறைகளில் நோபல் பரிசு பெற்ற இரு நபர்களில் ஒருவர்.
இவர் பியரி கியூரியின் மனைவியும், ஐரீன் ஜோலியட் கியூரி மற்றும் ஈவா கியூரியின்தாயும் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை


மரியா ஸ்க்லடவ்ஸ்கா போலாந்தின் வார்சாவில், 7 நவம்பர் 1867இல் பிறந்தார். இவரது பெற்றோர் பிரபலமான ஆசிரியர்களான பிரோநிஸ்லாவா மற்றும் வ்லேடிஸ்லாவா ஸ்க்லடவ்ஸ்கி ஆவர்.
போலாந்தின் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் மரியாவின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டதனால் மரியா மற்றும் அவரது மூத்த சகோதர சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை வாழ மிகவும் சிரமப்பட்டனர்.
மரியாவின் தந்தை வ்லேடிஸ்லாவா ஸ்க்லடவ்ஸ்கி கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை கற்பித்தார். அவர் இரண்டு வார்சா பள்ளிகளுக்கு இயக்குனராக இருந்தார். ரஷ்ய அதிகாரிகள் செயல்முறை கற்பித்தலை பள்ளிகளிலிருந்து நீக்கியபின் தனது ஆய்வுக்கூடத்தின் கருவிகளை வீட்டிற்கு எடுத்துவந்து தனது குழந்தைகளுக்கு அவைகளின் செயல்பாட்டை விளக்கினார். மரியாவின் தாயார் பிரோநிஸ்லாவா ஒரு உறைவிடப் பள்ளியை நடத்தி வந்தார். ஆனால் மரியா பிறந்தவுடன் அவர் தனது இப்பணியை கைவிட்டார். மரியாவின் பன்னிரெண்டாவது அகவையில் காசநோயால் அவர் இறந்தார்
தனது பத்தாவது அகவையில் மரியா ஜே.சிகொர்ச்கா என்னும் உறைவிட பள்ளியில் சேர்ந்தார். அதிலிருந்து ஜூன் 12, 1883இல் தங்கப்பதக்கத்தோடு வெளியேறினார். அடுத்த ஆண்டை தனது தந்தையின் குடும்பத்தினருடன் கிராமத்தில் கழித்தார். பிறகு வார்சாவில் தனது தந்தையுடன் வாழ்ந்தார். அப்போது சிறிதாக பயிற்சி வகுப்பு நடத்தினார். பெண் என்பதால் மேற்படிப்பிற்கு அங்குள்ள நிறுவனங்களில் சேர்த்துக்கொள்ளப்படாததால் பிளையிங் பல்கலைகழகம் என்னும் போலிஷ் பாடத்திட்டம் நடத்தும், ரஷ்ய அதிகாரிகளை எதிர்க்கும் மற்றும் பெண்களை சேர்த்துக்கொள்ளும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
மரியா தனது அக்கா பிரோநிஸ்லாவாவுடன் ஒரு உடன்படிக்கை போட்டுக்கொண்டார். அதன்படி பிரோநிஸ்லாவாவின் மருத்துவப் படிப்பிற்கு தன்னால் முடிந்த அளவிற்கு மரியா பணம் கொடுப்பார். மாறாக பிரோநிஸ்லாவா இரு வருடங்களுக்கு பிறகு மரியாவிற்கு பண உதவி அளிப்பார். இதற்காக மரியா வார்சாவில் ஒரு வீட்டு ஆசிரியராக பணிபுரிந்தார்.
1890இன் தொடக்கத்தில், திருமணமடைந்த பிரோநிஸ்லாவா, மரியாவை தன்னோடு பாரிசில் வந்து இணைந்துகொள்ள அழைத்தார். ஆனால் அப்போது பல்கலைகழகத்திற்கு பணம் செலுத்த தன்னோடு போதிய பணம் இல்லாததால் மரியா அங்கு செல்லவில்லை. இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மரியாவிற்கு போதிய பணம் திரட்ட தேவைப்பட்டன. இக்காலத்தில் மரியாவின் தந்தை அவருக்கு உதவி செய்து வந்தார். இந்த காலங்களில் எல்லாம் மரியா நிறைய படித்தார், கற்றார். 1891 வரை தனது அப்பாவுடன் மரியா இருந்தார். இக்காலங்களில் மரியா பயிற்சி வகுப்பு நடத்தினார், பிளையிங் பல்கலைகழகத்தில் படித்தார் மற்றும் தனது செயல்முறை அறிவியல் பயிற்சியை அங்குள்ள தொழிற்சாலை மற்றும் விவசாய அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு வேதியியல் ஆய்வுக்கூடத்தில் தொடங்கினார். இந்த ஆய்வுக்கூடம் மரியாவின் அத்தை மகன் ஜோசெப்பால் நடத்தப்பட்டது. ஜோசப் புகழ்பெற்ற ரஷ்ய வேதியியலாளர் மேண்டெலீவின் கீழ் பணிபுரிந்தவராவார்.

பாரிசில் புதிய வாழ்க்கை

மேரி தனது முதல் அறிவியல் வேலையை செய்த ஒரு வார்சா ஆய்வுக்கூடம்
1891 முடிவில் மரியா (அல்லது பிரான்சில் பரவலாக அழைக்கப்படுவதுபோல் மேரீ) போலாந்தை விட்டு பிரான்சிற்கு சென்றார். பாரிசில் சிறிது காலம் தன் அக்காவின் வீட்டில் தங்கினார். பின்பு பல்கலைகழகத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கினார். சோர்போன் பல்கலைகழகத்தில் அவர் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பயின்றார். அங்கு தனக்கு கிடைக்கும் சிறிதளவு பணத்தோடு அவர் குளிர்காலத்தில் குளிரில் வாழ்ந்தார். மேலும் சில நேரங்களில் அவர் மயங்கியும் விழுந்தார்.
மேரீ காலையில் படித்து மாலைகளில் பயிற்சி வகுப்பு எடுத்தார். 1893இல் அவர் இயற்பியலில் ஒரு பட்டம் பெற்றார். அதன்பின் பேராசிரியர் காப்ரியலின் ஆய்வுக்கூடத்தில் அவர் வேலை பார்த்தார்.[4] இந்த சமயத்தில் அவர் சோர்போனில் தனது படிப்பைத் தொடர்ந்தார். தனது இரண்டாவது பட்டத்தை 1894இல் பெற்றார்.
மேரீ தனது ஆய்வுகளை பாரிசில் தொடங்கினார், முதன்முதலில் ஈயத்தின் காந்த சக்தி பற்றி ஆய்வு மேற்கொண்டார். அதே வருடம் பியரி குயுரி மேரீயின் வாழ்க்கையில் வந்தார். இருவருக்கும் ஒத்தாக உள்ள அறிவியல் ஆர்வமே இருவரையும் ஒன்று சேர்த்தது. ஒரு இயற்பியல் மற்றும் வேதியியல் பள்ளியில் பியரி ஓர் ஆசிரியராக இருந்தார். பேராசிரியர் ஜோசப் கொவால்ஸ்கி இவர்கள் இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் மேரீ ஒரு பெரிய ஆய்வுக்கூடத்தை வேண்டுவதை அறிந்திருந்ததாலும் பியரி அத்தகைய ஓர் ஆய்வுக்கூடத்தை அணுகக்கூடிய வாய்ப்பு பெற்றிருந்தவர் என்பதை அறிந்திருந்ததாலும் இவ்வாறு செய்தார்.
இருவருக்கும் இடையே இருந்த அறிவியல் மீதான அதீத ஆர்வம், இருவரையும் நெருக்கமாக கொண்டுவந்தது. பியரி மேரீயிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளக்கேட்டுக்கொண்டார். மேரீயோ தான் தன் தாய்நாட்டிற்கு திரும்பிவிடத் திட்டமிட்டிருப்பதாக கூறினார். பியரி தானும் அவருடன் போலாந்து வரத் தயாராக உள்ளதாக கூறினார். இச்சமயத்தில் மேரீ வார்சாவிற்கு வந்து தன் குடும்பத்தை பார்வையிட்டார். அதுவரை அவர் தனது துறையில் போலாந்தில் வேலை பார்க்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். ஆனால் அப்போதுதான் அது ஒரு மாயை என்று அறிந்தார். ஏனெனில் க்ரோகௌ பல்கலைகழகத்தில் தான் ஒரு பெண் என்பதால் அவருக்கு அங்கு வேலை தரப்படவில்லை.[5] பியரியிடமிருந்து மேரீக்கு இச்சமயத்தில் ஒரு கடிதம் வந்தது. அது அவரை பாரிசிற்கு திரும்பத் தூண்டியது. மேரீயின் தூண்டுதலால் பியரி காந்தவியலில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அது அவருக்கு ஒரு முனைவர் பட்டத்தை அளித்தது. மேலும் அது அவரை தனது பள்ளியில் ஒரு பேராசிரியராக உயர்த்தியது. 26 ஜூலையில் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் இரண்டு பொழுதுபோக்கு கொண்டிருந்தனர்-நெடிய மிதிவண்டி பயணங்கள், வெளிநாட்டு பயணங்கள். இவை இருவரையும் மேலும் நெருக்கமாக கொண்டு வந்தது.

புதிய தனிமங்கள் கண்டுபிடித்தல்

ஆய்வுக்கூடத்தில் பியரி மற்றும் மேரி
1895இல் ரோஎன்ட்ஜென் எக்ஸ்-கதிர்களை கண்டுபிடித்தார். ஆனால் அது எப்படி உருவாகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை. 1896இல் பெக்கிவிரல் யுரேனியம் உப்புகளும் எக்ஸ்-ரே கதிர்கள் போன்ற கதிர்களை வெளியிடுகின்றன என்று கண்டார். மேலும் அவர் இக்கதிர்கள் வெளியிலிருந்து வரும் ஆற்றலால் அல்லாமல் யுரேனியத்திலிருந்தே வருவதை கண்டார். மேரீ ஒரு ஆய்வுக்கட்டுரைக்காக எக்ஸ்-ரே கதிர்களை ஆராய்ந்தார். மேரீ ஒரு புத்தாக்கமான திறமையை பயன்படுத்தி யுரேனியத்தை ஆராய்ந்தார். 15 ஆண்டுகளுக்கு முன்பு பியரியும் அவரது சகோதரரும் எலேக்ட்ரோமீட்டர் என்னும் ஒரு கருவியை மேம்படுத்தியிருந்தனர். இது மின்சாரத்தை மிக நன்றாக கண்டறியும். இதனை பயன்படுத்தி யுரேனியக்கதிர்கள் சுற்றியுள்ள காற்றில் மின்சாரத்தை உண்டாக்குகின்றன என்று மேரி கண்டார். இதை பயன்படுத்தி யுரேனியத்தின் அளவைப் பொறுத்தே அதன் கதிர் வெளிப்பாடு இருப்பதாக மேரீ கண்டறிந்தார். மேலும் அவர் இக்கதிரியக்கம் அனுக்களிலிருந்தே வரவேண்டும் என்ற ஹைபாதசிசின் கீழ் செயல்பட்டார்
1897இல் மேரீக்கு ஐரீநே என்னும் மகள் பிறந்தாள்.[9] குயுரிகள் ஒரு நல்ல ஆய்வுக்கூடத்தை கொண்டிருக்கவில்லை. இவர்கள் தங்கள் ஆய்வுகளை பெரும்பாலும் இயற்பியல் மற்றும் வேதியியல் பள்ளிக்கு அருகில் இருந்த ஒரு கூடத்தில் நடத்தினர். அக்கூடம் நன்றாக காற்றோட்டமோ அல்லது நீர்புகா அமைப்போ கொண்டிருக்கவில்லை. அவர்கள் கதிரியக்கத்தை கையாளுவதால் வரும் ஆபத்துக்களை அறிந்திருக்கவில்லை. ஆதலால் பிற்காலத்தில் தங்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகளை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அப்பள்ளி அவர்களுக்கு எந்த நிதியும் அளிக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு சுரங்க நிறுவனங்கள் மற்றும் மற்ற பிற நிறுவனங்கள் சிலவும் பண உதவி அளித்தன.
மேரீயின் கதிரியக்க ஆய்வுகள் இரண்டு யுரேனிய மினெரல்களைக் கொண்டிருந்தன-பிட்ச்பிளென்ட் மற்றும் சாள்கோலைட். அவரது எலேக்ட்ரோமீட்டர் ஆய்வுகள் மூலம் பிட்ச்பிளென்ட் யுரேனியத்தைவிட நான்கு மடங்கும், சாள்கோலைட் இரண்டு மடங்கும் அதிக கதிரியக்க செயல்பாடு கொண்டிருப்பதை மேரீ கண்டார். இதன் மூலம் இவ்விரு மிநேரல்களும் யுரேனியம் அல்லாத வேறொரு தனிமத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதை கண்டறிந்தார். இதனால் அவர் கதிரியக்க ஆற்றல் கொண்ட பிற தனிமங்களை கண்டுபிடிக்க முயற்சிகள் செய்தார். 1898இல் தோரியமும் கதிரியக்க ஆற்றல் கொண்டிருப்பதை கண்டார்.
மேரீக்கு அவரது கண்டுபிடிப்பை ஒரு கட்டுரையாக பதிப்பிக்க வேண்டிய தேவை தெரிந்திருந்தது. ஆதலால் அவரது கண்டுபிடிப்புகள் பற்றிய கட்டுரையை அவரது பேராசிரியர் லிப்மான் 12 ஏப்ரல் 1898இல் ‘அகாடமி’க்கு அளித்தார்.
அச்சமயத்தில் மேரீ அவரது கட்டுரையில் எவ்வளவு முக்கியமான ஒரு வாக்கியத்தை பதிவு செய்திருந்தார் என்பதை எவரும் கவனிக்கவில்லை. அது என்னவெனில் பிட்ச்பிளென்ட் மற்றும் சாள்கோலைட் ஆகியவற்றின் கதிரியக்க செயல்பாடு மிகவும் அதிகமாக இருக்கிறது என்பதாகும். இது அவை யுரேனியம் அல்லாத வேறொரு தனிமத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டின. ஜூலை 1898இல் மேரீயும் அவரது கணவரும் ஒரு கட்டுரை வெளியிட்டனர். அதில் அவர்கள் ஒரு புதிய தனிமத்தை கண்டுபிடித்ததை தெரிவித்தனர். அதற்கு மேரீ ‘பொலோனியம்’ என்று தன் தாய்நாட்டை பெருமைப்படுத்துவதற்காக பெயரிட்டார். 26 டிசெம்பர் 1898இல் இன்னொரு தனிமத்தை கண்டுபிடித்து அதற்கு ரேடியம் என பெயரிட்டனர். மேலும் radioactivity என்ற சொல்லை கதிரியக்கத்திற்கு பெயராக இட்டனர். தங்கள் கண்டுபிடிப்பை எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபிக்க பொலோனியம் மற்றும் ரேடியத்தை முழுமையாக பரிசுத்தமாக பிரித்தெடுக்க மேரீகள் களமிறங்கினர். பிட்ச்பிளென்ட் நிறைய தனிமங்களை கொண்ட ஒரு மினெரலாகும். போலோனியத்தை கண்டுபிடிப்பது சிறிது சுலபமாக இருந்தது. ஏனெனில் வேதியியல் ரீதியாக அது பிஸ்மத்தை ஒத்திருந்தது. மேலும் பிஸ்மத்தை ஒத்த தனிமமாக பிட்ச்பிளென்டில் இது மட்டுமே இருந்தது. ஆனால் ரேடியத்தை கண்டுபிடிப்பதோ கடினமாக இருந்தது. ஏனெனில் அது பேரியத்தை ஒத்திருந்தது. மேலும் பிட்ச்பிளென்டில் பேரியமே இருக்கிறது. இறுதியாக 1902இல் ஒரு டன் பிட்ச்பிளென்டில் இருந்து 0.1 கிராம் ரேடியம் குலோரைடை பிரித்தெடுத்தனர். 1900இல் மேரீ ‘‘இகோலே நார்மொலே சுபீரியூரீ’’யில் முதல் பெண் பேராசிரியரானார். ஜூன் 1903இல் மேரீ தனது முனைவர் பட்டத்தை பாரிஸ் பல்கலைகழகத்திலிருந்து பெற்றார். இதற்கிடையில் ஒரு புதிய தொழிற்சாலை ரேடியத்தை மேம்படுத்தி எடுக்க ஆரம்பித்தது. குயுரிகள் இதை பேடேன்ட் செய்யாததால் இந்த வணிகத்தில் எந்த லாபத்தையும் ஈட்டிக்கொள்ளவில்லை.

நோபல் பரிசுகள்

1911 நோபல் பரிசு
டிசெம்பர் 1903இல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் ச்சிஎன்செஸ் மேரீ,பியரி மற்றும் பெக்குறேல் ஆகியோருக்கு இயற்பியல் நோபெல் பரிசை, அவர்கள் கதிரியக்கத்தின் மீது நடத்திய மிக முக்கியமான ஆராய்ச்சிகளுக்காக அளித்தது. மேரீதான் நோபெல் பரிசு பெற்ற முதல் பெண்ணாவார். குயுரிகள் ச்டாக்ஹோமிற்கு நோபெல் பரிசை பெற்றுக்கொள்ள செல்லவில்லை. ஏனெனில் அவர்களுக்கு வேலை பளு அத்கமாக இருந்தது. நோபெல் பரிசு பெறுபவர்கள் தங்கள் ஆராய்ச்சி பற்றி ஒரு வகுப்பு எடுக்க வேண்டும் என்பதால் குயுரிகள் 1905இல் ச்டோக்க்ஹோல்மிற்கு சென்றனர். நோபெல் பரிசு பணம் குயுரிகளை தங்கள் ஆய்வுக்கூடத்திற்கு ஒரு வேலையாளை எடுக்கு அனுமதித்தது.
டிசெம்பர் 1904இல் மேரீ தனது இரண்டாவது மகளை பெற்றெடுத்தார். பிறகு தன் மகள்களுக்கு தாய்மொழி கற்றுத்தர போலாந்திலிருந்து ஆசிரியர்களை தன் இல்லத்திற்கு வரவழைத்தார்.
19 ஏப்ரல் 1906இல் பியரி ஒரு சாலை விபத்தால் மரணமடைந்தார். இது மேரீக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. 13 மே 1906இல் சொர்போன் பல்கலைகழக இயற்பியல் கழகம் பியரி அங்கு கொண்டிருந்த பதவியை மேரீக்கு வழங்கியது. ஒரு உலகத்தரமான ஆய்வுக்கூடத்தை பியரியின் ஞாபகத்தில் உருவாக்கலாம் என்று மேரீ அப்பதவியை ஏற்றுக்கொண்டார். மேரீ சோர்போன் பல்கலைகழகத்தின் முதல் பெண் பேராசிரியரானார்.
பிற்காலத்தில் மேரீ ரேடியம் நிறுவனத்தை இயக்கினார். இது அவருக்கென பாஸ்டியர் நிருவனமும் பாரிஸ் பல்கலைகழகமும் சேர்ந்து செய்த ஒரு கதிரியக்க ஆய்வுக்கூடமாகும். 1910இல் மேரீ ரேடியத்தை பிரிப்பதில் சாதித்தார். மேலும் அவர் கதிரியக்கத்திற்கு ஒரு உலகளாவிய அளவை வைத்தார். அது அவர் மற்றும் தன் கணவர் ஞாபகமாக ‘குயிரி’ என்ற பெயரைக் கொண்டிருந்தது. பிரெஞ்சு அகாடமி ஆப் சயின்செஸ் தேர்தல்களில், ரைட் விங் பத்திரிக்கையால் மேரீ ஒரு அயல்நாட்டுக்காரர் மற்றும் நாத்திகர் என்ற வாதங்களால் அமுத்தப்பட்டார்.
மேரீயின் மகள் பின்னாளில், பிரெஞ்சு பத்திரிகைகள் மேரீயை தேர்தல்களில் போட்டியிடும்போது அவரை ஒரு தகுதியில்லாத அயல்நாட்டுக்காரராகவும் ஆனால் அந்நிய பரிசுகள் (நோபெல் பரிசு போன்ற) பெறும்போது ஒரு பிரெஞ்சு கதாநாயகியாகவும் காட்டியதை கூறினார்.
1911இல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்சஸ் மேரீக்கு இரண்டாம் நோபெல் பரிசை, இம்முறை வேதியியலில் வழங்கியது. இப்பரிசு மேரீ ரேடியம், பொலோனியம் ஆகிய தனிமங்களை கண்டுபிடித்து, ரேடியத்தை பிரித்தெடுத்து, அதன் பண்புகளை ஆராய்ந்ததை அங்கீகரிப்பதற்காக வழங்கப்பட்டது. மேரீயின் இரண்டாம் நோபெல் பரிசு அவரை பிரெஞ்சு அரசு தன் ரேடியம் நிறுவனத்தை ஆதரிக்க வைக்க நன்கு பயன்பட்டது. இந்நிறுவனத்தின் முன்னேற்றம் முதல் உலகப் போரால் சிறிது முடக்கப்பட்டது. ஏனெனில் அதிக ஆராய்ச்சியாளர்கள் போரிற்காக இழுத்துக்கொள்ளப்பட்டனர். இதன்பின் 1919இல் இந்நிறுவனம் தன் வேலைகளை திரும்பத்தொடங்கியது.

ஆராய்ச்சிகள்

முதல் உலக போர்

முதல் உலகப்போரின்போது மேரீ ரேடியாலசி மூலம் காயப்பட்ட வீரர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க மையங்கள் அமைத்தார். எக்ஸ்-ரே கருவிகள், வாகனங்கள் வாங்கி நடமாடும் ரய்டியாலசி யூனிட்களை சின்ன குயிரிகள் என்ற பெயரில் உருவாக்கினார். பின்னர் மேரீ செங்சிலுவை ரேடியாலசி சேவையின் இயக்குனரானார். மேலும் பிரான்சின் முதல் இராணுவ மையத்தை 1914இல் நிறுவினார். 17 வயது மகள் இரேனேவா தனது தாய்க்கு இச்செயல்களில் துணைபுரிந்தார்.

மரணம்

மேரி 1934 இன் முற்பகுதியில் கடைசி முறையாக போலந்து சென்றார். ஒரு சில மாதங்கள் கழித்து, ஜூலை 4,1934இல் மேரி பச்சியில் உள்ள சன்செல்லிமொஸ் சானடோரியத்தில் ஆண்டாண்டு காலமாக கதிரியக்க வெளிப்பாடோடு பழகியதால் வந்த அப்பிலாச்டிக் இரத்த சோகையால் உயிரிழந்தார். அவர் பையில் கதிரியக்க ஓரிடத்தான்கள் கொண்ட சோதனை குழாய்களை வைத்திருக்கிறார். மேலும் அவைகளை தனது மேசையிலும் வைத்திருக்கிறார். யுத்தத்தின் போது மருத்துவமனைகளில் ஒரு கதிரியக்கராக பணியாற்றியபோது ஒழுங்கான உபகரணங்கள் அணிந்திருக்கவில்லை. அதனாலும் அவருக்கு ஆபத்து நேர்ந்தது.
மேரீ தனது கணவர் பியரியுடன் ச்கேயுக்ஸில் புதைக்கப்பட்டார். அறுபது வருடங்களுக்கு பிறகு, 1995 ஆம் ஆண்டில், தங்கள் சாதனைகளின் நினைவாக, பாரிஸ் பாந்தியனுக்கு இருவரின் கல்லறைகளும் மாற்றப்பட்டன. இதுவரை இப்படி மரியாதைபடுத்தப்பட்டிருக்கும் ஒரே பெண் மேரீதான்.
1890 காலத்து அவரது ஆவணங்கள் கையாள மிகவும் ஆபத்தானவையாக கருதப்படுகின்றன. ஏனெனில் அவைகள் கதிரியக்க வெளிப்பாடு கொண்டிருக்கின்றன. அவரது சமையல் புத்தகம்கூட அதிக கதிரியக்க வெளிப்பாடு கொண்டதாகும்

Thursday, 26 November 2015

இந்தியாவின் பால்காரருக்கு இன்று பிறந்தநாள்
பால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்று திகழ வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட  டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்த நாளை கூகுள் தனது முகப்புப் பக்கத்தில் அழகான டூடுளாக வெளியிட்டுள்ளது.

கூட்டுறவு பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தை நவீனப்படுத்தி இந்தியாவின் வெண்மை புரட்சிக்கு வழி நடத்தினார். இதன் மூலம் உலகிலேயே கூடுதலாக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை முன்னேற்றினார்.
இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் வர்கீஸ் குரியன் இந்தியாவின் பால்காரர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
இந்த நிலையில் இன்று (26.11.15)வர்கீஸ் குரியனின் 94வது பிறந்தநாளை  முன்னிட்டு தனது முகப்புப் பக்கத்தில் அழகான டூடுளாக வெளியிட்டுள்ளது கூகுள்.
இவரை கவுரவுக்கும் வகையில் கூகுள் நிறுவனம் அழகான பால் கேன்கள், பசு ஒன்றுடன் வர்கீஸ் குரியன் அமர்ந்திருப்பது போன்ற டூடுள் வெளியிட்டுள்ளது .  இந்தியாவின் பால்காரர் என்று அழைக்கப்படும் வர்கீஸ் குரியன் கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தனது 90வது வயதில் மறைந்தார்.
வானிலையை கணிப்பது எளிது:
ரூ.1000 செலவழித்தால் பாமரனும் 'ரமணண்' ஆகலாம்!

வானிலையை ரமணன் மட்டுமல்ல சாதாரண பாமரனும் கணிக்கலாம் அந்த அளவுக்கு இன்றைய விஞ்ஞான வளர்ச்சி மேலோங்கி இருக்கிறது. இது உங்கள் மொபைல் மற்றும் கணினியில் இணையத்தில் இயங்கும் செயலி அல்ல இந்த கணிப்பு முறை .நேரடியாக செயற்கைக்கோள் வாயிலாக கிடைக்கப்பெறும் படங்களால் என்பதால் கணிப்பும் தவறாக இருக்காது.இதை பெறுவதற்கு சாதாரண கணினி அறிவு போதுமானதே.
ஆயிரம் ரூபாயில் ஒரு கருவி
RTL-SDR எனப்படும் ஒரு USB DONGLE மற்றும் ஒரு  QHF (Quadrifilar Helix Antennas) ஆன்ட்டனா இரண்டையும் இணைக்க கொஞ்சம் கேபிள் வயர் என மொத்தமே ஆயிரம் ரூபாய்க்குள் தான் செலவாகும். இந்த கருவியானது வெளிநாடுகளில்  மிகப்பிரபலம்.இது வானிலைக்கு மட்டுமல்ல உங்கள் அலுவலக கதவை தொட்டால் உங்க ஸ்மார்ட் போனுக்கு தகவலை சொல்லும் கையில் ஒரு ட்ரில் இயந்திரத்தை இயக்கினால் அதன் வேகம் என்ன? என்பதை சொல்லும் இன்னும் பல பயன்கள் குறித்தும்  ஆராய்சிகளும் நடந்துகொண்டு இருக்கின்றன. 
 
ஜெர்மனியில் உள்ள பேருந்துநிறுத்தங்களில் இந்த RTL-SDR கொண்டு எந்த பேருந்து எங்கு வந்து கொண்டு இருக்கிறது.இன்னும் எவ்வளவு நேரத்தில் இந்த பேருந்துநிலையத்தை அடையும் என்பதுவரை கணித்துக்கொண்டு இருக்கிறது.இதில் ஆர்.டி.எல். என்பது அந்த கருவியில் பயன்படுத்தப்படும் பிராஸசர்.  எஸ்.டி.ஆர் என்றால் software defined radio  ஆகும்.
சாதாரண ரேடியோ போல செயல்பாடு 
இப்ப வானிலைக்கு வருவோம் .பொதுவாக நீங்க ரேடியோ பயன்படுத்தி இருப்பீர்கள் ஏன் செல்போன் எப்படி வேலை செய்கிறதோஅதே தொழில்நுட்பம் தான் இது.  செல்போன் கோபுரத்தில் இருந்து வரும் ஒலிஅலைகள் எப்படி உங்கள் போன் வாயிலாக  செவிகளுக்கு கேட்க்கிறதோஅதே போல நம் பூமியை சுற்றிவரும் இந்த வானிலை செயற்கைக்கோள்கள்(WXsat)அனுப்பும் ஒலிஅலைகளை QHF ஆன்ட்டனா
ஒயர் வாயிலாக RTL SDR கருவியை அடையும் .அந்த ஒலி அலையை SDR SHARP என்ற செயலி வாயிலாக நீங்கள் நேரடியாக பார்க்கவும் கேட்கவும் செய்யலாம்.வெறும் இரைச்சல் சத்தம் மட்டுமே கேட்க்கும்அந்த ஒலியை VIRTUAL CABLE வாயிலாக WXtoImg என்ற செயலிஒலியை நேரடியாக படமாக மாற்றித்தரும்WX என்பது WEATHER FAX என்பதை குறிக்கும்அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் லியோசர் செயற்கைக்கோள்களை (Low-Earth Orbiting Search And Rescue)அனுப்பியுள்ளனர்.
இந்த லியோசர் என்றால் பூமியை சுற்றிகொண்டே இருக்கும் செயற்கைக்கோள் அதனால் உலகின் எந்த ஒரு நாட்டின் வானிலையையும் இதன் மூலம் அறியலாம்.Gpredict என்ற செயலி உதவியோட இந்த நொடியில் செயற்கைக்கோள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை பார்த்து தரவுகளை பெறலாம்.NOAA,Meteor,போன்றவை பிரபலமான லியோசர் வானிலை செயற்கைக்கோள்கள்இந்த செயற்கைக்கோள்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
அலைவரிசை எண் தகவல்கள்
NOAA 15 – 137.6200 MHz
NOAA 18 – 137.9125 MHz
NOAA 19 – 137.1000 MHz
Meteor - 137.100 or 137.900 MHz
இந்தியாவில் கல்பனா 1,இன்சாட் 3D போன்ற ஜியோசர் செயற்கைக்கோள்கள். (Geostationary Earth Orbit Search And Rescue)ஜியோசர் என்றால் பூமி எந்த வேகத்தில் சுற்றுகிறதோ அதே வேகத்தில் இந்த செயற்கைக்கோள்களும் சுற்றும் அதனால்இந்த நொடி நம் நாட்டின் வானிலைவானிலை நிலை என்ன? என்பதை உடனடியாக தெரிந்துகொள்ள முடியும்இவை வானிலை ஆய்வு மையம் மட்டுமே பயன்படுத்த முடியும். மக்களுக்கு அனுமதி கிடையாது.
சென்னை பள்ளிகரணையில் செயல்பட்டுவரும்  தென் இந்திய தன்னார்வ வானொலி சமூகம் (Siars) இது குறித்த  விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் சில பேராசிரியர்கள் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 
-கவின் [thanks to VIKATAN]

உண்மை

விளக்கம்
வாய்வழி வருவது வாய்மை.
மெய்யால் (உடலால்) செயற்படுவது மெய்ம்மை

Wednesday, 25 November 2015

தீபத்திருவிழா

இன்று தீபத்திருவிழா: 

உழவர்களுக்கு உதவும் உன்னத கார்த்திகை தீபம்


திருக்கார்த்திகை தீபங்கள் உழவர்களுக்கு உதவும் உன்னத விளக்கு பொறியாக இருப்பதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 'அன்று செய்தவை அர்த்தமுள்ளவை' என்பதற்கு திருக்கார்த்திகை தீபத்திருவிழா ஒரு எடுத்துக்காட்டு என்றும் சொல்கிறார்கள்.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வீடுகள்தோறும் விளக்கேற்றும் பண்பாடு நம்முடையது. பல ஆண்டுகளுக்கு முன் வரை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமப்புறங்களில், இம்மாதத்தில் கார்த்திகை விளக்குகள் எரியாத வீடுகளை காணமுடியாது. இப்போது அது வழக்கொழிந்து வருகிறது. கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் பெயரளவுக்கே தீபவிளக்குகளை வைக்கிறார்கள்.

ஆனால், கார்த்திகை மாதத்தில் விளக்குகளை வீடுகளில் வைப்பது விவசாயத்துக்கு உதவியாக இருந்திருக்கிறது. மேலும் வீடுகளுக்குள் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் சஞ்சரிப்பதையும் தடுத்திருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ளபடி கொசு விரட்டிகளை பயன்படுத்தவில்லை. மின்சார விளக்குகளும் இருக்கவில்லை. இதனால் வீடுகளுக்கு வெளிச்சம் அளிக்க விளக்குகளை ஏற்றிவைத்திருக்கிறார்கள். அத்துடன் விவசாயத்துக்கு இழப்பை ஏற்படுத்தும் பூச்சிகளை விரட்டவும் இந்த நடைமுறை உதவியிருக்கிறது.

வேளாண் அதிகாரி தகவல்:

இதுகுறித்து சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:

உழவர் பெருமக்களுக்கு இந்த சமுதாயம் நன்றி தெரிவித்து, சிறிய உதவி செய்யும் சீரிய விழாதான் தீபத் திருவிழா. வழக்கமாக பனியும், மழையும் மிகுந்த ராபிப் பருவம் என்கிற பின்பருவம்தான் (பிசானம், தாளடி, சம்பா பருவம் என பல்வேறு பெயர்கள் இதற்கு உண்டு) பயிர்களில் பூச்சிதாக்குதல் மிகுந்த பருவம்.

பூச்சி ஒழிப்பு:

அதுவும் வடகிழக்குப்பருவ மழையைத்தொடர்ந்து கூட்டுப்புழுக்களில் இருந்து தாய் அந்துப்பூச்சிகள் வெளிவரும். இவை முட்டையிட்டு, அவற்றில் இருந்து வெளிவரும் புழுக்களும், குஞ்சுகளும்தான் பயிர்களைத் தாக்கிச் சேதப்படுத்தும். பூச்சி தாக்குதலுக்கு மூல காரணமான தாய்ப்பூச்சிகளை விளக்கு வெளிச்சத்தால் கவர்ந்து அழித்து விட்டால், பூச்சி தாக்குதல் வெகுவாகக் குறைந்து விடும். இதைத்தான் திருக்கார்த்திகை தீபம் மூலம் சமுதாயம் செய்கிறது.

அதிலும் முன்னிரவு நேரத்தில்தான் பயிருக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். எனவே ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பின் ஒரு பகுதியாக, உழவர்களுக்கு உதவும் விதமாக ஒட்டுமொத்த சமுதாயமே கார்த்திகை மாதத்தில் வீடுதோறும் வாயில்களில் விளக்கு வைக்கிறது.

சொக்கப்பனையின் நன்மை:

அதுவும் திருக்கார்த்திகை திருநாளிலும், அதையடுத்த 2-ம் , 3-ம் கார்த்திகை நாட்களிலும் அதிக விளக்குகளை அலங்கரித்து வைப்பதால், விளக்கு வெளிச்சத்தில் முன்னிரவு நேரத்தில் இயங்கும் தீமைசெய்யும் பூச்சிகள் கவர்ந்து அழிக்கப்படுகின்றன. பெரிய அளவில் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க, திருக்கார்த்திகையன்று கோயில்களில் சொக்கப்பனைகள் கொளுத்தப்படுகின்றன. விடுபட்ட பூச்சிகளையும் கவர்ந்து அழிக்க சிவன் கோயிலில் ஒருநாள், பெருமாள் கோயிலில் மறுநாள் என வெவ்வேறு நாட்களில் சொக்கப்பனைகள் கொளுத்தப்படுகின்றன.

தன்னலம் கருதாது, மண்ணுலுகம் முழுமைக்கும் உணவளிக்கும் உழவர்களுக்கு திருக்கார்த்திகைத் தீபத்திருநாள் மூலம் உதவி செய்து சமுதாயம் உவகை கொள்கிறது என்றார் அவர்.

CCE REFRESHER TRAINING

CCE REFRESHER TRAINING FOR RESOURCE PERSONS AT DIET, VADALUR
Monday, 23 November 2015

                    LOW DEPRESSION VIEW USING INSAT-3D IMG METHOD


மண்டல வானிலை முன்னறிவிப்பு

மண்டல வானிலை முன்னறிவிப்பு
23-11-2015
முன்னறிவிப்பு (மழை அல்லது இடியுடன் கூடிய மழை)
வானிலை உட்பிரிவு
பெரும்பாலான இடங்களில்
இலட்சத்தீவு.
அனேக இடங்களில்
தமிழகம் மற்றும் புதுச்சேரி,
 கேரளா, தெற்கு உள் கர்நாடகா. 
ஒரு சில இடங்களில்
கடலோர கர்நாடகா, ராயலசீமா.  
ஓரிரு  இடங்களில்
கடலோர ஆந்திரா, தெலுங்கானா, 
வடக்கு உள் கர்நாடகா.
வறண்ட வானிலை
----------