Thursday, 10 November 2016

பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவின் பேரில் ...

பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவின் பேரில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளனர். இந்த சுற்றறிக்கை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 
அதில் ஆசிரியர்களுக்கு என்று தனியாக சில விதிகளும், மாணவ மாணவியருக்கு என்று தனியாக சில விதிகளும் கூறப்பட்டுள்ளன.

ஆசிரியர்களுக்கான விதிகள்:

  
பள்ளி ஆசிரியர்கள் யாரும் வகுப்பறையில் செல்போன் உபயோகிக்கக் கூடாது. எக்காரணம் கொண்டும் வகுப்பறையில் செல்போனில் பேசக் கூடாது. பாடம் நடத்தும் போது உட்கார்ந்து கொண்டு பாடம் நடத்தாமல் நின்று கொண்டு பாடம் நடத்த வேண்டும். அதனால் வகுப்பறையில் உள்ள நாற்காலிகள் அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான விதிகள்: 

*
மாணவர்கள் காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும்.

*
லோ ஹிப், டைட்பிட் பேண்ட், சட்டைகள் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும்.

*
தலைமுடியை ஒட்ட வெட்டியபடி இருக்க வேண்டும். கை, கால்களில் நீண்ட நகங்கள் இல்லாமல் வெட்டியபடி இருக்கவேண்டும்.

*
மீசை வைக்கும் போது மேல் உதட்தை தாண்டி மீசை வெளியில் வராதபடி ஒட்ட வெட்டிய நிலையில் இருப்பதுடன், முறுக்கு மீசை வைக்க கூடாது என்பது உள்பட பல விதிகள் கூறப்பட்டுள்ளன
.

TET JUDGEMENT

தமிழக அரசு கொண்டு வந்த TET அரசாணை செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஆசிரியர் தேர்வுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை உறுதி செய்தது.

இரு நீதிமன்றங்களும் இருவேறு தீர்ப்பை அளித்ததால், ஆசிரியர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும் என்று இன்று தீர்ப்பளித்துள்ளது.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 % மதிப்பெண் தளர்வு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 % மதிப்பெண் தளர்வு அரசாணையினை ரத்து செய்த மதுரை உயர்நீதீமன்றத்தின் தீர்ப்பும் ரத்தாகிறது.

இந்த வழக்கு காரணமாக கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் கையில் வைத்திருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவை அல்ல, அவை அதன் முழு மதிப்போடு திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறையில்,


1.
கள்ளநோட்டு மற்றும் கருப்புப் பணத்தை புழக்கத்தில் இருந்து நீக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் கள்ள நோட்டுகளை இந்தியாவில் பயங்கரவாதம் வேரூன்ற பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கவே 500 மற்றும் 2000 ரூபாய் புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 8ம் தேதியோடு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தைக் கொண்டு இனி எந்த பரிவர்த்தனையும் நடைபெறாது. ஆனால், அதனை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து முழு மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

3.
பழைய நோட்டுக்களின் மதிப்பு என்ன?
பழைய நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து அதன் முழு மதிப்பிலான புதிய நோட்டுக்களை பெற்றுக் கொள்ள ரிசர்வ் வங்கி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

4.
அனைத்து ரூபாய் நோட்டுக்களையும் மாற்றிக் கொள்ள முடியுமா?
தற்போதைய சூழ்நிலையில் தனி ஒரு நபர் ரூ.4,000 மட்டுமே வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும். மீதத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.

5.
முழுத் தொகையையும் புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொள்ள முடியாதா?
தற்போதைய திட்டப்படி, முழு தொகையையும் புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொள்ள முடியாது. மத்திய அரசு அதனை அனுமதிக்கவில்லை.

6. 4
ஆயிரம் ரூபாய் எனக்குப் போதாது என்றால் நான் என்ன செய்வது?
உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைத்து, அதனை காசோலை, டிடி, நெட் பேங்கில் டிரான்சாக்ஷன்களின் மூலம் பணப் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம்.

7.
வங்கிக் கணக்கு இல்லை என்றால்?
வங்கியில் கணக்கு இல்லாதவர்கள் பணத்தை மாற்றிக் கொள்ள முடியாது. வங்கியில் கணக்குத் தொடங்கிய பிறகே பணத்தை மாற்ற முடியும்.

8.
ஜன்-தன் யோஜனா கணக்கு மட்டும் வைத்திருப்போர், வங்கிகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.


ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்



500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கையில் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் குறித்து தெரிந்து கொள்வோம்..
*
நாடுமுழுவதும் இன்று வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளதால் தங்கள் கைகளில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை நாளை முதலே மக்கள் வங்கிகள் அல்லது அஞ்சல் நிலையங்களில் மூலம் மாற்ற முடியும்.

* 500, 1000
ரூபாய் நோட்டுகள் எவ்வளவு மதிப்பில் இருந்தாலும் வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் அவற்றைக்கொடுத்து அதே மதிப்புள்ள வேறு ரூபாய் நோட்டுகளைப் பெறலாம். ஆனால் 4,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை மாற்ற முயன்றால், 4,000 ரூபாய் ரொக்கமாகவும், மீதமுள்ளவை வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும்.

*
நோட்டை மாற்றும்போது புதிய 500 மற்றும் 2000 நோட்டுக்களாகவும் பெறலாம். 500, 1000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட்டும் செய்யலாம். பணத்தை மாற்றும்போதோ, டெபாசிட் செய்யும்போதோ அடையாள அட்டைகளில் ஒன்று அ‌‌வசிய‌ம். அடையாள அட்டை விவரங்களை வங்கி பதிவு செய்யும். இதற்காக வங்கிகளில் கூடுதல் கவுன்ட்டர்கள்செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* 500, 1000
ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெற கூடுதல் வேலை நேரம் செயல்படவும் வங்கிகள் ஒப்புக் கொண்டிருக்கின்றன. 4,000 ரூபாய் என்பது போதாது என்றால், அதற்கு மேற்பட்ட தொகையை காசோலை, இணைய தள வங்கிச் சேவை, டெபிட் கார்டு ஆகிய வழிகளில் செலவிட‌லாம். வங்கிக் கணக்கு இல்லாதவர்களிடம் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தால், புதிய வங்கிக்கணக்கு தொடங்கி மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும்.

*
ரிசர்வ் வங்கிக் கிளைகள், தனியார், பொதுத் துறை மற்றும் கூட்டுறவு வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். 4,000 ரூபாய் வரை மாற்ற, எந்த வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தையும் அணுகலாம். அதற்கு மேல் தொகையை மாற்ற, கணக்கு வைத்துள்ள வங்கியை மட்டுமே அணுக வேண்டும்.

*
கணக்கு வைத்துள்ள வங்கியின் எந்தக் கிளையிலும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். வங்கிக்கு நேரடியாக செல்ல இயலாதவர்கள்‌ பிரதிநிதியை அனுப்பி அத்தாட்சிக் கடிதம் தர வேண்டும். பணத்தை செலுத்துபவர் தனது அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.

*
புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்மில் வழங்குவதற்கான தொழில்நுட்பம் வர சில நாட்கள் ஆகலாம். அதன் பிறகு 18-ம் தேதி வரை நாளொன்றுக்கு அதிகபட்சம் 2,000 ரூபாயும், 19-ம் தேதி முதல் 4,000 ரூபாயும் எடுக்க அனுமதிக்கப்படும். அதன் பிறகு இந்த உச்ச வரம்பு 10,000அதிகரிக்கப்படும்.

*
அதேபோல, வரும் 24-ம் தேதி வரை வங்கிகளில் பணமெடுக்கும் விண்ணப்பத்தில் 10,000 ரூபாய் வரையும், காசோலையில் 20,000ரூபாய் வரையும் மட்டுமேபணம் பெற முடியும். அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பு வரை வழக்கம்போல ஏடிஎம்களில் பணம் டெபாசிட் செய்யலாம்.

*
ரொக்கம் தவிர்த்து, மொபைல் பேங்க்கிங், இன்டர்நெட் பேங்க்கிங், ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் ஆகிய மின்னணு பரிமாற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. டிசம்பர் 30-ம் தேதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ரயில்நிலையங்கள், விமா‌ன டிக்கெட் ஆகியவை 11-ம் தேதி வரை 500, 1000 ரூபாய் ஏற்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு ரிசர்வ் வங்கி இணைய தளத்தில் தகவல்கள் உள்ளன. சந்தேகங்கள் இருந்தால் ரிசர்வ் வங்கியின் மும்பை அலுவலக எண்களான 02 -22602201, 22602944 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்
.