Thursday, 10 November 2016

TET JUDGEMENT

தமிழக அரசு கொண்டு வந்த TET அரசாணை செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஆசிரியர் தேர்வுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை உறுதி செய்தது.

இரு நீதிமன்றங்களும் இருவேறு தீர்ப்பை அளித்ததால், ஆசிரியர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும் என்று இன்று தீர்ப்பளித்துள்ளது.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 % மதிப்பெண் தளர்வு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 % மதிப்பெண் தளர்வு அரசாணையினை ரத்து செய்த மதுரை உயர்நீதீமன்றத்தின் தீர்ப்பும் ரத்தாகிறது.

இந்த வழக்கு காரணமாக கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.