தொகுப்பு: இரா.மணிகண்டன், பட்டதாரி ஆசிரியர்
எண் | வினா | விடை |
1. | மலேரியாவைப் பரப்பும் உயிரினம் எது? | அனோபிலஸ் பெண் கொசு |
2. | பைலோரியாசஸ் பரப்பும் வைரஸ் எது? | ஊச்சரேரியா பிரங்கிராப்டி |
3. | நோய் பரப்பிகள் உயிரியல் வழி எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன? | கம்பூசியா மீன்களை வளர்ப்பதன் மூலமாக |
4. | பன்றிக் காய்ச்சலை உருவாக்கும் தீங்குயிரி எது? | H1 N1 வைரஸ் |
5. | திண்மப் பொருள் திரவப் பொருளுடன் எவ்வாறு வேறுபடுகிறது? | பாயும் தன்மை இருப்பதால் |
6. | உமியோடு மண்புழுக்கள் சேர்த்து தயாரிக்கப்படும் உரம் எது? | வெர்மி கம்போஸ்ட் |
7. | நெல் பயிரிடும் நிலத்திலிருந்து வெளியாகும் வாயு எது? | மீத்தேன் |
8. | புரதச்சத்துள்ள உணவுப் பொருளுக்கு எடுத்துக்காட்டு? | பருப்பு |
9. | பாஸ்டியர் முறையில் பால் எந்த வெப்ப நிலையில் காய்ச்சப்படுகிறது? | 60 டிகிரி செல்சியஸ் |
10. | உணவுப் பொருள்களை நுண்ணுயிரியின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப் பயன்படும் இயற்கையான பதப்படுத்தி எது? | சாதாரண உப்பு |
11. | மனித உடலில் உள்ள எலும்புகளில் மிகச் சிறியது எது? | ஸ்டேபஸ் |
12. | சிறு மூளையின் வேலை எது? | உடல் சம நிலைமை கட்டுப்படுத்துதல் |
13. | உயிர் முடிச்சு என அழைக்கப்படுவது எது? | முகுளம் |
14. | கண் பார்வைக்குத் தேவையானது எது? | வைட்டமின் ஏ |
15. | மண்டை ஓட்டில் உள்ள அசையா மூட்டுகளின் எண்ணிக்கை? | 8 |
16. | காற்றின் வாயிலாக விதை பரவுதலுக்கு எடுத்துக்காட்டு? | எருக்கு |
17. | வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சியை வரிசைப்படுத்துக? | முட்டை, புழு, கூட்டுப்புழு, வண்ணத்துப்பூச்சி |
18. | நுண்ணுயிரியின் தந்தை என்று அழைக்கப்படுபவர்? | லூயி பாஸ்டியர் |
19. | மூன்றாம் வகை நெம்புகோலுக்கு எடுத்துக்காட்டு தருக? | ஆய்வகத்தில் பயன்படும் இடுக்கி |
20. | உணவில் இருப்பது எவ்வகை ஆற்றல்? | வேதி ஆற்றல் |