Monday, 19 October 2015

தமிழ் வளர்த்த சான்றோர்!

தமிழ் வளர்த்த சான்றோர்!


கம்பராமாயணம்


நூல் குறிப்பு:

  • கம்பர் தாம் இயற்றிய இந்நூலுக்கு இராமாவதாரம் என்றே பெயரிட்டார். அதுவே கம்பராமாயணம் என்று வழங்கப்படுகிறது.
  • இராம காதைக்கு ஆதிகாவியம் என்றும் அக்காதையை வடமொழியில் இயற்றிய வான்மீகிக்கு ஆதிகவி என்றும் பெயர் உண்டு.
  • கம்பராமாயணம் வழி நூல் எனப்படுகிறது.
  • கம்பரின் இராமாயணத்தைக் கம்ப நாடகம் எனவும் கம்பசித்திரம் எனவும் அழைப்பர்.
  • கம்பரின் யாப்பு வண்ணங்கள் நூல் முழுவதும் மிளிர்கிறது. “வரமிகு கம்பன் சொன்ன வண்ணமும் தொண்ணுற்றாறே” என்று ஒரு கணக்கீடும் உள்ளது.
  • தமிழ் இலக்கியத்தில் தொடங்கிய காப்பிய வளர்ச்சி கம்பர் படைப்பில் உச்ச நிலையை அடைந்தது.
  • கம்பராமாயணம் 6 காண்டங்களை உடையது. அவை பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆரண்யகாண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தரகாண்டம், யுத்தகாண்டம்.
  • ஏழாவது காண்டமாகிய உத்தர காண்டம் ஒட்டக்க்கூத்தர் எழுதினார்.

சுந்தரகாண்டம்:

  • இக்காண்டாமே “காப்பியத்தின் மணிமகுடமாக” விளங்குகிறது.
  • சிறிய திருவடி = அனுமன்
  • அனுமனுக்கு “சுந்தரன்” என்னும் பெயரும் உண்டு.
  • இராமனின் அடையாளமாக சீதையிடம் அனுமன் கொடுத்தது = கணையாழி
  • சீதை அனுமனிடம் கொடுத்தது = சூடாமணி

சொற்பொருள்:

கழல் – திருவடிமுளரி – தாமரை
தையல் – திருமகளாகிய சீதாப்பிராட்டிஇறைஞ்சி – வணங்கி
திண்டிறல் – பேராற்றல் மிக்க இராமன்ஓதி – கூந்தல்
மற்று – மேலும்துறத்தி – கைவிடுக
திரை – அலைமருகி – மருமகள்
தனயை – மகள்தடந்தோள் – அகன்ற தோள்
உம்பி – உன் தம்பிவேலை – கடல்
கனகம் – பொன்சாலை – பர்ணசாலை
அலங்கல் – மாலைகோரல் – கொல்லுதல்
திருக்கம் – வஞ்சனைமுறிவு – வேறுபாடு
வீங்கினள் – பூரித்தாள்ஆழி – மோதிரம்
தோகை – மயில்மாமணிக்கரசு – சூடாமணி

இலக்கணக்குறிப்பு:

மொய்கழல் – வினைத்தொகைகழல் – தானியாகு பெயர்
தழீஇ – சொல்லிசை அளபெடைதெண்டிரை – பண்புத்தொகை
அலைகடல் – வினைத்தொகைதுறத்தி – ஏவல் வினைமுற்று
தடந்தோள் – உரிச்சொற்றொடர்பெருந்தவம் – பண்புத்தொகை
இற்பிறப்பு – ஏழாம் வேற்றுமைத்தொகைகளிநடம் – வினைத்தொகை
கண்ணின் நீர்க்கடல் – உருவகம்கோறல் – தொழிற்பெயர்
ஆருயிர் – பண்புத்தொகைபொன்னடி – உவமத்தொகை
பேர்அடையாளம் – உம்மைத்தொகைமலரடி – உவமத்தொகை
மாமணி – உரிச்சொற்றொடர்கைத்தலம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை

தேம்பாவணி

நூல் குறிப்பு;

  • வீரமாமுனிவர் இயற்றியது தேம்பாவணி.
  • இந்நூலில் மூன்று காண்டங்கள், முப்பத்தாறு படலங்கள், 3615 பாடல்கள் உள்ளன.
  • தேம்பா + அணி = தேம்பாவணி. வாடாத மாலை எனப் பொருள்.
  • தேன் + பா + அணி = தேம்பாவணி. தேன் போன்ற பாக்களை அணியாக உடைய நூல் எனப் பொருள் கொள்வர்.
  • நூலின் தலைவன் = இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தை சூசை மாமுனிவர்.
  • இந்நூலை “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” என்பர்.

வீரமாமுனிவர்:

  • இயற் பெயர் = கொன்ஸ்டான் ஜோசப்பெஸ்கி
  • கொன்ஸ்டான் என்னும் இத்தாலி மொழி சொல்லுக்கு அஞ்சாமை எனப் பொருள்.
  • இவர் தம் பெயரை “தைரியநாதசாமி” என மாற்றிக்கொண்டார்.
  • தமிழ்ச் சான்றோர் இவரை “வீரமாமுனிவர்” என அழைத்தனர்.
  • 1710ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த இப்பெரியார் 37 ஆண்டுகள் சமயப் பணியும் தமிழ்ப்பணியும் புரிந்து 1747ஆம் ஆண்டில் அம்பலக்காடு என்னும் இடத்தில இயற்கை எய்தினார்.
  • படைப்புகள் = திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, வேதியர் ஒழுக்கம், பரமார்ர்த்த குரு கதை, செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.
  • திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.

வளன் செனித்த படலம்:

  • காப்பியத் தலைவனான வளன் என்னும் சூசை மாமுனிவர் தாவீது மன்னனின் அரச மரபில் தோன்றிய வரலாற்றை கூறுவதே வளன் செனித்த படலம் ஆகும்.
  • யோசேப்பு என்றும் சூசை என்றும் ஒலிபெயர்க்கப்பட்ட ஜோசப் என்னும் பெயரை வீரமாமுனிவர் வளன் என்று தமிழ்ப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • வளங்களை வளரச் செய்பவன் என்னும் பொருளுடைய எபிரேய மொழியில் சூசை என்னும் பெயர் வழங்கி வருகிறது.
  • அதன் நேரிய மொழி பெயர்பே தமிழில் வளன் ஆகும்.

கதை சுருக்கம்:

  • யூதேயா நாட்டு மன்னன் சவுல்.
  • பிலித்தையர் என்பார் திருமறையை பழித்தும் கடுவுளை இகழ்ந்தும் வந்தனர்.
  • அரக்கன் கோலியாத் இச்ரேயால் மக்களை இகழ்ந்து, அவர்களுள் ஒருவனை போருக்கு அழைத்தான்.
  • தாவீதன் என்னும் சிறுவன் அவனிடம் போர் புரிந்து அவனை கொன்றான்.

சொற்பொருள்:

மாலி – சூரியன்ஆலி – மலை நீர்
கரிந்து – கருகிபுடை – இடையின் ஒருபக்கம்
வியன்வட்டம் – அகன்ற கேடயம்கீண்டு – கிழித்து
கிளர்ப – நிறையதொழும்பர் – அடிமைகள்
ஓகையால் – களிப்பினால்வெருவி – அஞ்சி
கதத்த – சினமிக்ககல்நெடுங்குவடு – மலைச்சிகரம்
நிரூபன் – அரசன்விளி – சாவு
கைவயம் – தோள்வலிமைமெய்வயம் – உடல் வலிமை
ஐஞ்சிலை – ஐந்து கற்கள்ஓதை – ஓசை
மருகி – சுழன்றுமிடல் – வலிமை
செல் – மேகம்நுதல் – நெற்றி
உருமு – இடிமருங்கு – இடுப்பு
சிரம் – தலைஅசனி – இடி

இலக்கணக்குறிப்பு:

கதுவிடா – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்அகல்முகில் – வினைத்தொகை
கருமுகில் – பண்புத்தொகைகூடினர் – வினையாலணையும் பெயர்
கதத்த – குறிப்பு பெயரெச்சம்கேட்டனர் – வினையாலணையும் பெயர்
தொடர்ந்தனன் நகைப்பான் – முற்றெச்சம்அஞ்சினர் - வினையாலணையும் பெயர்
கேட்ட வாசகம் – பெயரெச்சம்கைவயம் – ஆறாம் வேற்றுமைத் தொகை
அறிய ஆண்மை – குறிப்புப் பெயரெச்சம்இருந்த பாலன் – பெயரெச்சம்
கருமுகில் – பண்புத்தொகைவைவேல் – உரிச்சொற்றொடர்
காண்கிலர் – எதிர்மறை வினைமுற்றுநாமவேல் – உரிச்சொற்றொடர்
                            

பாண்டியன் பரிசு

ஆசிரியர் குறிப்பு:

  • பாவேந்தர் பாரதிதாசன் புதுவையில் பிறந்தவர்.
  • இயற்பெயர் = சுப்புரத்தினம்
  • பெற்றோர் = கனகசபை, இலக்குமியம்மாள்
  • தமிழாசிரியராக பணிபுரிந்தவர்.
  • இவர் புரட்சிக் கவிஞர் என்றும், தமிழ்நாட்டு இரசூல் கம்சதேவ் என்றும் அழைக்கப்படுபவர்.
  • இவரின் பிசிராந்தையார் நாடகம் சாகித்ய அகாடமி பரிசு பெற்றது.
  • இவரின் “வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே” என்னும் பாடல் தற்பொழுது புதுவை அரசின் தமிழ் தாய் வாழ்த்தாக உள்ளது.

கதை:

  • கதிர் நாட்டு மன்னன் கதிரைவேலன்.
  • அவன் மனைவி கண்ணுக்கிணியாள், இவர்களின் ஒரே மகள் அன்னம்.
  • கண்ணுக்கிணியாள் அண்ணனும் படைத்தளபதியும் ஆன நரிக்கண்ணன் சூழ்ச்சியால் நிகழ்ந்த வேழ நாட்டு படையெடுப்பில் அரசனும் அரசியும் இறந்தனர்.
  • பாண்டிய மன்னன் பரிசாக வழங்கிய உடைவாளும் மணிமுடியும் கொள்ளை அடிக்க விரும்பினான் நரிக்கண்ணன்.
  • பேழையை தவறுதலாக வீரப்பனிடம் கொடுத்துவிடுகிறான் நரிக்கண்ணன்.
  • பேழையை கொண்டு வந்து தருபவர்களுக்கு அன்னம் மாலையிடுவாள் என் அறிவிக்கப்பட்டது.
  • அரசியின் தோழி ஆத்தாக்கிழவி. இவள் அன்னத்தின் செவிலித்தாய்.
  • ஆத்தாக்கிழவியின் மகன் வேலன்.
  • ஆத்தாக்கிழவியின் கணவன் வீரப்பன்.
  • அன்னத்தின் தோழி நீலி

சொற்பொருள்:

  • மின் – மின்னல்
  • குறடு – அரண்மனை முற்றம்
  • பதடி – பதர்
  • பேழை – பெட்டி

இலக்கணக்குறிப்பு:

  • என்மகள் – நான்காம் வேற்றுமைத்தொகை
  • காத்தார் – வினையாலணையும் பெயர்
  • விலகாத – எதிர்மறை பெயரெச்சம்
  • ஈன்ற தந்தை – பெயரெச்சம்
  • இழந்த பரிசு – பெயரெச்சம்

சிற்றிலக்கியங்கள்

சிற்றிலக்கியம்:

  • பிரபந்தம் என்ற வடசொல்லுக்கு “நன்கு கட்டப்பட்டது” என்பது பொருள்.
  • சிற்றிலக்கியங்களின் இலக்கணம் கூறுவது பாட்டியல் நூல்கள்.
  • பாட்டியல் நூல்களுள் வச்சணந்திமாலை குறிப்பிட்ட நூலாகும்.
  • வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியில் பிரபந்தம் 96 வகை எனக் கூறப்பட்டுள்ளது.

இராசராச சோழன் உலா

உலா:

  • உலா என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
  • உலா என்பதற்கு “பவனி வருதல்” என்பது பொருள்.
  • தலைவன் வீதியில் உலா வர அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் ஏழு வகைப் பருவ மகளிரும் காதல் கொள்வதாக அமைத்து பாடுவது உலா ஆகும்.
  • இது கலிவென்பாவால் இயற்றப்படும்.
  • இதில் பாட்டுடைத் தலைவனின் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழத் தன் ஊர்தியில் ஏறி வரல் ஆகியவற்றை உலாவின் முன்னிலை என்பர்.
  • உலாவரும் தலைவனைக் கண்டு காதல் கொண்ட ஏழு பருவ மகளிர் தனித்தனியாக கூறுவன உலாவின் பின்னிலை எனப்படும்.
  • ஏழு பருவப் பெண்களின் வயது = பேதை(5-7), பெதும்பை(8-11), மங்கை(12-13), மடந்தை(14-19), அரிவை(20-25), தெரிவை(26-32), பேரிளம்பெண்(33-40).

ஒட்டக்கூத்தர்:

  • இராசராசசோழன் உலாவை பாடியவர் ஒட்டக்கூத்தர்.
  • இவர், “கவிச்சக்ரவர்த்தி, கவிராட்சசன்” என்றெல்லாம் புகழப்படுவார்.
  • இவர், விக்ரமசோழன், இரண்டாம் குலோத்துங்கச் சோழன், இரண்டாம் ராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு இருந்தவர்.
  • இம்மூவரைப் பற்றி ஒட்டக்க்கூத்தர் பாடியதே, “மூவருலா”
  • இவரின் இயற் பெயர் = கூத்தர்
  • ஓட்டம்(பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் ஆதலால் இவர் ஒட்டக்க்கூத்தர் எனப்பட்டார்.

சொற்பொருள்:

சூளிகை – நிலாமுற்றம்சாளரம் – பலகணி
தெற்றி – திண்ணைபாங்கரும் – பக்கத்தில் உள்ள இடங்கள்
பிணங்கி – நெருங்கிமறுகு – தெரு
கோடி – வளைந்துசதகோடி – நூறுகோடி
மகோததி – கடல்உதியர் – சேரர்
சரதம் – வாய்மைபவித்ரம் – தூய்மை
மூவெழுகால் – 21 தலைமுறைஅவனி – நாடு
பெருமாள் – அரசர்கூடல் – காவிரிப்பூம்பட்டினம்

இலக்கணக்குறிப்பு:

வாயிலும் மாளிகையும் – எண்ணும்மைஎம்மருங்கும் – முற்றும்மை
மாடமும் ஆடரங்கும் – எண்ணும்மைசெய்குன்று – வினைத்தொகை
ஆடரங்கு – வினைத்தொகைசுற்றிய பாங்கர் – பெயரெச்சம்
மயங்கி, வணங்கி – வினையெச்சம்செற்ற சிலை – பெயரெச்சம்
காணீர் – ஏவல் வினைமுற்றுவிட்டவள் – பெயரெச்சம்
மதயெறிது - இரண்டாம் வேற்றுமைத்தொகைமுத்து முரசம் – பண்புத்தொகை
ஓங்கியுயர் – ஒருபொருட்பன்மொழிஉயரண்டம் – வினைத்தொகை

திருவேங்கடத்தந்தாதி

அந்தாதி:

  • அந்தாதி 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • அந்தம் = இறுதி, ஆதி = முதல்
  • ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசையா, சீரோ அடியோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும்.
  • இதனை “சொற்றொடர்நிலை” எனவும் கூறுவர்.

பிள்ளை பெருமாள் ஐயங்கார்:

  • இவர், “அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி” எனவும் அழைக்கப்படுவார்.
  • இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை “அஷ்டப்பிரபந்தம்” என்று அழைப்பர்.
  • “அஷ்டப்பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்” என்னும் பழமொழி இந்நூலின் உயர்வைப் வெளிப்படுத்தும்.
  • இவர் 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தார்.

சொற்பொருள்:

  • கழல் – திருவடி
  • பத்தி – ஊர்
  • குஞ்சி – தலைமயிர்
  • போதன் – பிரமன்
  • வாசவன் – இந்திரன்
  • அந்தி – மாலை
  • வேலை – கடல்
  • இருக்கு ஆரணம் – இருக்கு வேதம்
  • கஞ்சம் – தாமரை மலர்
  • அணங்கு – திருமகள்
  • பொழில் – சோலை

இலக்கணக்குறிப்பு:

  • சிற்றன்னை – பண்புத்தொகை
  • தாழ்பிறப்பு – வினைத்தொகை
  • மால் கழல் – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • கழல் – தானியாகு பெயர்
  • அந்தி காளை – உம்மைத்தொகை
  • வேங்கடம் – வினைத்தொகை
  • மதிவிளக்கு – உருவகம்
  • சேவடி – பண்புத்தொகை
  • இருக்கு ஆரணம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  • நற்றாய் – பண்புத்தொகை

மதுரைக் கலம்பகம்

கலம்பகம்:

  • பலவகை உறுப்பும் பலவகைப் பாவும் பாவினங்களும் பலவகைப் பொருளும் கலந்து செய்யப்பெறும் சிற்றிலக்கிய வகையை கலம்பகம் என்பர்.
  • கதம்பம் என்பது கலம்பகம் எனத் திரிந்ததாக உ.வே.சா கூறுவார்.
  • கலம்பகம் 18 உறுப்புகளை உடையது.
  • தமிழின் முதல் கலம்பகம் = நந்திக் கலம்பகம்

குமரகுருபரர்:

  • இவரின் காலம் பதினேழாம் நூற்றாண்டு.
  • பிறந்தது முதல் ஐந்தாண்டு வரை பேசாத குழந்தையாக இருந்த இவர் பின்னர் திருச்செந்தூர் முருகப் பெருமானின் அருளால் பேசினார்.
  • படைப்புகள் = மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், கந்தர்கலிவெண்பா, காசிக்கலம்பகம், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் போன்ற பல நூல்களை இயற்றி உள்ளார்.
  • இவரது செய்யுட்களின் தனிச்சிறப்பு அவற்றின் “இன்னோசை” ஆகும்.

சொற்பொருள்:

  • ஏமவெற்பு – மேருமலை
  • ஏமம் – பொன்
  • மலயாசலம் – பொதிகை மலை

இலக்கணக்குறிப்பு:

  • கயிலாய வெற்பு – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  • அசலம் – காரணப்பெயர்
  • முச்சங்கம் – பண்புத்தொகை
  • வளர்கூடல் – வினைத்தொகை
  • மதிப்பிஞ்சு – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • இரைதேர் – இரண்டாம் வேற்றுமைத்தொகை

முக்கூடற்பள்ளு

பள்ளு:

  • “பள்” என்பது பள்ளமான நன்செய் நிலங்களையும் அங்குச் செய்யப்படும் உழவினையும் குறிக்கும்.
  • பள்ளு 96 வகை சிற்றிலக்கிய வகையுள் ஒன்று.
  • தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகைப்பிரிவில் ஒன்றான “புலன்” என்னும் இலக்கிய வகை “பள்ளு வகை” இலக்கியத்திற்கு பொருந்தும்.

முக்கூடற்பள்ளு:

  • திருநெல்வேலிக்குச் சிறிது வடகிழக்கில் தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல்.
  • அங்குள்ள இறைவனாகிய அழகர் மீது பாடப்பட்டது இந்நூல்.
  • சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூல், “முக்கூடற்பள்ளு” ஆகும்.
  • இந்நூலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை.
  • இது சிந்தும் விருத்தமும் பரவிவர பாடப்பெறும்.

இலக்கணக்குறிப்பு:

  • வெண்தயிர் – பண்புத்தொகை
  • காய, மாய – பெயரெச்சம்
  • நாழிகை வாரம் – உம்மைத்தொகை
  • தாபதர் உள்ளம் – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • செந்நெல் – பண்புத்தொகை
  • சுழி வெள்ளம் – வினைத்தொகை

மறுமலர்ச்சிப் பாடல்கள் - மாலைக்கால வருணனை

z

நூல் குறிப்பு:

  • வடமொழியில், வியாசர் இயற்றிய மகாபாரததக் கதையில் வரும் பாஞ்சாலி, துரியோதனன் சபையில் செய்த சூளுரையை மையமாகக் கொண்டு, பாரதியார் இக்குறுங்காவியத்தைப் படைத்தார்.
  • பாஞ்சாலிசபதம் என்னும் இந்நூலில் அழைப்புச் சருக்கம் ,சூதாட்டச் சருக்கம், அடிமைச் சுருக்கம், துகிலுரிதற்சருக்கம், சபதச் சருக்கம் ஆகிய ஐந்து சருக்கங்கள் உள்ளன.

பாரதியார்:

  • இவர் 1882ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார்.
  • பெற்றோர் = சின்னசாமி, இலக்குமி அம்மையார்.
  • இளமையிலேய கலைமகள் என்னும் பொருள் தரும்,”பாரதி” என்னும் பட்டதை பெற்றார்.
  • இவர் இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
  • இவரின் முப்பெரும் படைப்புகள் = கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு.

சொற்பொருள்:

  • பரிதி – சூரியன்
  • வண்ணம் – அழகு
  • முகில் – மேகம்
  • பொய்கை – நீர்நிலை
  • இருட்கடல் – நீலக்கடல்
  • களஞ்சியம் – தொகுப்பு

இலக்கணக்குறிப்பு;

  • படர்முகில் – வினைத்தொகை
  • செழும்பொன் – பண்புத்தொகை
  • தங்கத்தீவு – உருவகம்
  • பொற்கரை – உருவகம்
  • சுடரொளி – வினைத்தொகை

புத்தக சாலை

ஆசிரியர் குறிப்பு:

  • பாரதிதாசன் புதுவையில் 1891ஆம் ஆண்டு பிறந்தார்.
  • பெற்றோர் = கனகசபை, இலக்குமி அம்மாள்
  • இயற்பெயர் = சுப்புரத்தினம்
  • படைப்புகள் = குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, இசையமுது, அழகின் சிரிப்பு, கண்ணகி புரட்சிக் காப்பியம், பிசிராந்தையார் போன்ற பல நூல்களை படைத்துள்ளார்.

சொற்பொருள்:

  • மனோபாவம் – உளப்பாங்கு
  • சகமக்கள் – உடன் வாழும் மக்கள்
  • ஒன்று – ஓரினம்
  • இலகுவது – விளங்குவது
  • சுவடி – நூல்
  • சுவடிச்சாலை – நூலகம்
  • சர்வகலாசாலை – பல்கலைக்கழகம்

இலக்கணக்குறிப்பு;

  • அன்புநெறி – இருபெயரொட்டு பண்புத்தொகை
  • உயர்எண்ணம் – வினைத்தொகை
  • செந்தமிழ் – பண்புத்தொகை
  • தருதல், வைத்தல் – தொழிற்பெயர்

காடு

ஆசிரியர் குறிப்பு;

  • வாணிதாசன் புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்தவர்.
  • பெற்றோர் = அரங்க திருக்காமு, துளசியம்மாள்
  • இயற்பெயர் = அரங்கசாமி என்ற எத்திராசலு
  • இவர் பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக்கல்வி பயின்றவர்.
  • இவரின் பாடல்கள் சாகித்திய அகாதெமி வெளியிட்ட “தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்ற நூலிலும், தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட “புதுதமிழ்க் கவிமலர்கள்” என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
  • இவர், “தமிழ்-பிரெஞ்ச் கையகர முதலி” என்ற நூலை வெளியிட்டார்.
  • பிரெஞ்ச் குடியரசு தலைவர் இவருக்கு “செவாலியர்” என்ற விருதினை வழங்கி உள்ளார்.
  • இவர், “கவிஞரேறு, பாவலர் மணி, தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த்” என்று அழைக்கப்படுவார்.

சொற்பொருள்:

  • வெய்யோன் – கதிரவன்
  • புரையோடி – உள்ளுக்குள் அரிக்கப்பட்டு
  • முதல் – வேர்
  • செல் – ஒருவகை கரையான்
  • சோங்கி – வாட்டமுற்று

சிக்கனம்

ஆசிரியர் குறிப்பு;

  • இவமை கவிஞர் எனப்போற்றப்படுபவர் கவிஞர் சுரதா
  • இவர் திருவாரூர் மாவட்டம் பழையனூரில் பிறந்தவர்.
  • இயற்பெயர் = இராசகோபாலன்
  • படைப்புகள் = தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும்.
  • இவர் தமிழக இயலிசை நாடகமன்றம் வழங்கிய கலைமாமணி பட்டம் பெற்றவர்.
  • இவருடைய “தேன்மழை” நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்றுள்ளது.
  • பாவேந்தர் நினைவு பரிசினை பெற்ற முதல் கவிஞர் இவரே.

சொற்பொருள்;

  • பகட்டு வாழ்க்கை – ஆடம்பரமான வாழ்க்கை
  • செட்டு – சிக்கனம்

இலக்கணக்குறிப்பு:

  • சட்டதிட்டம் – உம்மைத்தொகை
  • நீதிநூல் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • நீரூற்று – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • தீராத – எதிர்மறைப் பெயரெச்சம்

மனித நேயம்

ஆசிரியர் குறிப்பு;

  • கவிஞர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் 01.06.1942 இல் சென்னையை அடுத்த ஆலந்தூரில் பிறந்தவர்.
  • பெற்றோர் = கோபால், மீனாம்பாள்
  • இவரின்”இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்பு நூல் தமிழக அரசின் பரிசினை பெற்றுள்ளது.

சொற்பொருள்:

  • சிந்தை – உள்ளம்
  • குன்றி – குறைந்து
  • சாந்தி – தெருக்கள் கூடுமிடம்
  • சிறுமை – இழிவு

இலக்கணக்குறிப்பு:

  • சிந்தித்தேன் – தன்மை ஒருமை வினைமுற்று
  • கன்றுகுரல் – ஆறாம் வேற்றுமைத் தொகை
  • தலைகுனிந்து – இரண்டாம் வேற்றுமைத் தொகை

வேலைகளல்ல வேல்விகளே!

ஆசிரியர் குறிப்பு:

  • கவிஞர் தாராபாரதி 26.02.1947இல் திருவண்ணாமலை மாவட்டம் குவளை என்னும் ஊரில் பிறந்தார்.
  • பெற்றோர் = துரைசாமி, புஷ்பம் அம்மாள்
  • இவர் 34 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி, நல்லாசிரியருக்கான டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ளார்.
  • படைப்புகள் = புதிய விடியல்கள், விரல்நுனி வெளிச்சங்கள், பூமியைத் திறக்கும் பொன்சாவி, இன்னொரு சிகரம்.

சொற்பொருள்:

  • மூடத்தனம் – அறியாமை
  • மூலதனம் – முதலீடு

இலக்கணக்குறிப்பு;

  • வெறுங்கை – பண்புத்தொகை
  • விரல்கள் பத்தும் – முற்றும்மை
  • பாறையும் – உயர்வு சிறப்பும்மை
  • மலர்ச்சோலை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
  • கங்கையும் சிந்துவும் – எண்ணும்மை
  • தெற்கு வடக்காய் – முரண்தொடை
  • மாவிலி – உரிச்சொற்றொடர்

தீக்குச்சிகள்

ஆசிரியர் குறிப்பு:

  • கவிஞர் அப்துல் ரகுமான் 1937இல் மதுரையில் பிறந்தவர்.
  • இவர், “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” எனப் பாராட்டப்படுபவர்.
  • படைப்புகள் = பால்வீதி, நேயர் விருப்பம், சொந்தச் சிறைகள், கரைகளே நதியாவதில்லை, விலங்குகள் இல்லாத கவிதை.
  • தமிழக அரசின் “பாரதிதாசன் விருது”, தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கிய, “தமிழ் அன்னை விருது” போன்ற பல பரிசினை பெற்றுள்ளார்.

இலக்கணக்குறிப்பு:

  • புல்நுனி – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • கண்ணீர் வெள்ளம், பசிக்கயிறு – உருவகம்
  • மெல்லிய காம்பு – உருவகம்

    வழிப்பாட்டுப் பாடல்கள் - சிவபெருமான்

    சுந்தரர்:

    • சுந்தரர் தேவாரம் பன்னிருதிருமுறை வைப்பில் ஏழாந் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
    • சுந்தரர் திருமுனைப்பாடி நாட்டில் பிறந்தவர்.
    • பெற்றோர் = சடையனார், இசை ஞானியார்.
    • இயற்பெயர் = நம்பிஆரூரர்
    • இவர் திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்க முனையரையர் என்ற சிற்றரசர் மகன்மை கொண்டு வளர்க்கப்பட்டார்.
    • சிவபெருமான் இவரைத் தம் தோழராகத் கொண்டமையால் “தம்பிரான் தோழர்” என அழைக்கப்பட்டார்.
    • இவர் எழுதிய திருதொண்டதொகை என்னும் நூலையே முதனூலாக கொண்டு சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம் எழுந்தது.

    சொற்பொருள்:

    • காமகோபன் – காமனைக் காய்ந்தவன்
    • ஆவணம் – அடிமையோலை

    இலக்கணக்குறிப்பு:

    • கண்ணுதல் – இலக்கணப் போலி
    • பழ ஆவணம் – பண்புத்தொகை
    • சொற்பதம் – ஒருபொருட் பன்மொழி

    திருமால்

    குலசேகர ஆழ்வார்:

    • ஆழ்வார் என்னும் சொல்லுக்கு ஆழ்ந்தறியும் அறிவைக் கருவியாக உடையவர் என்றும் எம்பெருமானுடைய மங்கலக் குணங்களில் ஆழங்காற்பட்டவர் என்றும் பொருள் கூறுவர்.
    • குலசேகர ஆழ்வார் சேரநாட்டுத் திருவஞ்சிக் களத்தில் தோன்றியவர்.
    • இவர் எழுதிய பாடல்கள் பெருமாள் திருமொழி எனப்படும்.
    • அவை மொத்தம் 105 பாடல்கள் ஆகும்.
    • ஆழ்வார்களின் அருளிச் செயலுக்குப் பெரிய வாச்சான் பிள்ளை என்பார் உரை எழுதியுள்ளார்.
    • திருவாய்மொழிக்கு வடக்குத் திருவீதிப் பிள்ளை என்பார் எழுதிய ஈடு என்னும் பேருரை ஆழமும் அகலமும் உடையதாகும்.

    சொற்பொருள்:

    • ஆனாத – குறைவு படாத
    • அரம்பையர்கள் – தேவமாதர்கள்

    புத்தர் பிரான்

    ஆசிரியர் குறிப்பு:

    • மணிமேகலை நூலின் ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் ஆவார்.
    • இவரைத்  “தண்டமிழ் ஆசான்” எனப் புகழ்வர்.
    • இவரின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
    • மணிமேகலை புத்த சமய காப்பியம்.
    • இந்நூலுக்கு “மணிமேகலைத் துறவு” என்னும் வேறு பெயரும் உண்டு.
    • இந்நூல் இந்திர விழவூரெடுத்த காதை முதலாகப் பவதிரம் அறுகெனப்பாவை நோற்ற காதை ஈறாக முப்பது காதைகளை உடையது.

    சொற்பொருள்:

    • தீர்த்தன் – தூயன்
    • புராணன் – மிகப்பழையன்
    • ஏமம் – பாதுகாப்பு
    • ஆரம் – சக்கரக்கால்
    • கடிந்தேன் – துறந்தேன்

    இலக்கணக்குறிப்பு:

    • தீநெறி – பண்புத்தொகை
    • கடும்பகை – பண்புத்தொகை
    • உணர்ந்த முதல்வன் – பெயரெச்சம்

    அருகன்

    நூல் குறிப்பு:

    • அருகதேவனை பற்றி கூறியுள்ள இந்நூல் நீலகேசியாகும்.
    • சீவக சிந்தாமணிக்கு  நிகராக கவிதைச் சுவைமிக்க இந்நூலை எழுதியவர் விவரம் தெரியவில்லை.
    • இந்நூல் “நீலகேசித் தெருட்டு” என்றும் அழைக்கப்படும்.

    சொற்பொருள்:

    • சாமரை – சாமரம் ஆகிய வெண்கவரி
    • புடைபுடை – இருமருங்கினும்
    • இயக்கர் – கந்தருவர்
    • இரட்ட – அசைக்க
    • சிங்காசனம் – அரியணை
    • ஆசனம் – இருக்கை
    • ஒளிமண்டிலம் – ஆலோகம்
    • நிழற்ற – ஒளிர
    • சந்திராதித்தம் – முத்துக்குடை
    • சகலபாசனம் – பொற்குடை
    • நித்தவிநோதம் – மணிக்குடை

    இயேசு பெருமான்

    ஆசிரியர் குறிப்பு:

    • இரட்சணியம் என்பதற்கு ஆன்ம ஈடேற்றம் என்பது பொருளாம்.
    • ஆன்ம ஈடேற்றம் விரும்புவார் செல்லும் சிந்தனை யாத்திரை என்பதுவே இரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள்.
    • ஜான் பனியன் என்பார் எழுதிய பில்க்ரிம்ஸ் பிராகிரஸ் என்ற நூலினையே இரட்சணிய யாத்திரிகம் என படைத்துள்ளார்.
    • எச்.ஏ.கிருடினப்பிள்ளை திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு என்னும் ஊரினர்.
    • பெற்றோர் = சங்கர நாராயணபிள்ளை, தெய்வநாயகி அம்மை
    • படைப்புகள் = இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், போற்றித் திருவகவல்.
    • இவரை “கிறித்துவ கம்பர்” என்பர்.

    சொற்பொருள்:

    • கண்ணி – மரியன்னை
    • காசினி – உலகம்
    • வான்கதி – துறக்கம்
    • மருவ – அடைய

    இலக்கணக்குறிப்பு:

    • கண்ணிபாலன் – நான்காம் வேற்றுமைத்தொகை

    நபிகள் நாயகம்

    உமறுப்புலவர்:

    • உமறுப்புலவர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்னும் ஊரினர்.
    • தந்தை = செய்கு முகமது அலியார் என்னும் சேகு முதலியார்
    • கடிகை முத்துப் புலவரின் மாணவர் இவர்.
    • இவரின் காலம் பதினேழாம் நூற்றாண்டு.
    • சீறாப்புராணம் வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க எழுதினார்.
    • நூல் நூற்றும் முன்னரே சீதக்காதி இறந்ததால் அபுல் காசிம் என்பார் உதவியுடன் எழுதி முடிக்கப்பட்டது.
    • பானு அஹமது மரைக்காயர் என்பவரே நூலை முழுவதும் எழுதி முடித்தார். அது “சின்னச் சீறா” எனப்பட்டது.
    • உமறுப்புலவர் முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி நாடகம் முதலிய நூல்களையும் எழுதியுள்ளார்.

    சொற்பொருள்:

    • பொறி – ஒளிப்பிழம்பு
    • வடிவார் – வடிவினையுடையார்
    • நவியார் – நபிகள் நாயகம்

    இலக்கணக்குறிப்பு:

    • மெய்ப்பொருள் – இருபெயரொட்டு பண்புத்தொகை
    • சுவர்க்கபதி - இருபெயரொட்டு பண்புத்தொகை