Saturday, 5 March 2016

போலிக் கல்வி சான்றிதழ் விவகாரம்: பாகிஸ்தான் சாப்ட்வேர் நிறுவனம் 1,376 கோடி ரூபாய் மோசடி

பாகிஸ்தானை சேர்ந்த சாப்ட் வேர் நிறுவனம், பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,40,000 மாணவர் களுக்கு போலி கல்வி சான்றிதழ் கள் வழங்கியிருப்பது தெரியவந் துள்ளது. அமெரிக்க பல்கலைக் கழகங்களின் பெயரில் போலி் கல்வி சான்றிதழ் வழங்கியதன் மூலம் 1,376 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது.
அக்ஸாக்ட் (Axact) என்ற சாப்ட்வேர் நிறுவனம் கராச்சி யில் இயங்கி வருகிறது. இந் நிறுவனம் போலியான பல்கலைக் கழகங்கள் பெயரில் ஆன்லைன் மூலம் பல்வேறு வகுப்புகளை நடத்தியுள்ளது. இந் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சோயப் அகமது சாயிக் மற்றும் நிர்வாகிகள்18 பேர் மீது பெடரல் விசாரணை அமைப்பு (எஃப்ஐஏ) செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
அக்ஸாக்ட் நிறுவனம் 2010-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2,40,000 மாணவர்களுக்கு போலி கல்வி சான்றிதழ்கள் வழங்கியுள்ளது. இதன் மூலம் இந் நிறுவனம் 1,376 கோடி வருமானம் ஈட்டியிருக்கிறது என்று எஃப்ஐஏ கூறியுள்ளது.
கராச்சியில் உள்ள எஃப்ஐஏ கார்ப்பரேட் கிரைம் சர்க்கிள் பல் வேறு பிரிவுகளில் நிறுவனத்தின் மீதும் நிர்வாகிகள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது