Wednesday, 2 March 2016

தேசிய திறனறி தேர்வு ரிசல்ட் வெளியீடு

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில், மத்திய அரசு சார்பில் நடத்தப்படும், தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டுக்கான திறனறித் தேர்வில், மாநில அளவிலான முதல் கட்ட தேர்வு, நவம்பரில் நடந்தது. இதற்கான முடிவுகள்  வெளியாயின.

தேர்வு முடிவுகளை, www.tndge.in என்ற இணையதளத்தில், பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். 

இரண்டாம் கட்ட தேசிய தேர்வு, மே, 8ம் தேதி நடக்கிறது. '