‘கச்சா எண்ணெய் விலை 55 டாலரை தொடும்’
11 வருடங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை சரிந்தது. தற்போது 34 டாலரில் வர்த்தகமாகும் கச்சா எண்ணெய் அடுத்த 12 மாதங்களில் 55 டால ராக உயரும் என்று கணிக்கப் பட்டிருக்கிறது. நடப்பு ஆண்டின் இரண்டாம் பாதிக்கு மேல் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு இருக்கிறது என்று யூபிஎஸ் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
இருந்தாலும் பலவீனமான நிலையில் இருந்து கச்சா எண்ணெய் இன்னும் மீண்டு வர வில்லை. குறுகிய காலத்தில் தற்போதைய விலையைவிட இன்னும் கூட சரியலாம். கடந்த வருடத்தை விட தற்போது கச்சா எண்ணெயின் உற்பத்தி 2.7 சதவீதம் அதிகமாக இருக்கிறது.
2016-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி ஒரு நாளைக்கு 70 லட்சம் பேரல்கள் குறையும். அதே சமயத்தில் தேவையும் அதிகரிக்கும். இதன் காரணமாக 2016-ம் ஆண்டின் இறுதியில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 55 டாலர் அளவில் இருக்கும்.