Saturday, 5 March 2016

முக்கிய மருந்துகளின் விலை 40% குறைகிறது

முக்கியமான 530 மருந்துகளின் விற்பனை விலைக்கு உச்ச வரம்பினை மத்திய அரசு நிர்ணயம் செய்திருக்கிறது. 

இதன் காரணமாக 126 முக்கியமான மருந்துகளின் விலை 40 சதவீதம் வரை சரிந்திருக்கிறது. மத்திய உரத்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் இந்தத் தகவலை மாநிலங்களவையில் தெரிவித்தார்.

இந்த 530 மருந்துகளின் உச்சவரம்பு விலை நிர்ணயம் செய்யப்பட்டதால்,126 மருந்துகளின் விலை 40 சதவீதத்துக்கு அதிகமாக குறைந்திருக்கிறது. அதேபோல 34 மருந்துகளின் விலை 35 முதல் 40 சதவீதம் வரை சரிந்திருக்கிறது. 26 மருந்துகளின் விலை 30 முதல் 35 சதவீதமும், 49 மருந்துகளின் விலை 25 முதல் 30 சதவீதமும், 65 மருந்துகளின் விலை 20-25 சதவீதமும், 43 மருந்துகளின் விலை 15 முதல் 20 சதவீதமும் குறைந்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். 

57 மருந்துகளின் விலை 10-15 சதவீதமும், 50 மருந்துகளின் விலை 5-10 சதவீதமும், 80 மருந்துகளின் விலை அதிகபட்சம் 5 சதவீதம் வரை குறைந்திருக்கின்றன.