Monday 30 November 2015

அணையா விளக்குகள்



எவ்வித எரிபொருளும் இல்லாமலே தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன! உடனே இது இக்கால அறிவியல் கண்டுபிடிப்பு என்று எண்ணிவிடாதீர்கள்! ஐந்தாம் நூற்றாண்டு காலகட்டத்திலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
இவை எங்கு பயன்படுத்தப்பட்டது தெரியுமா? இறந்தவர்களின் கல்லறையில் தான். அவர்கள் இறந்தபின்பு மோட்சத்திற்கான வழி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த விளக்கினையும் அவர்களுடன் சேர்த்து அடக்கம் செய்துள்ளனர். இதில் பெரும்பாலான விளக்குகள் சேர்த்து புதைக்கப்பட்டிருந்தாலும், ஒரு சில விளக்குகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவை இன்னும் எரிந்துகொண்டே இருக்கின்றன என்பதுதான். மூட நம்பிக்கை உடையவர்கள் இறந்தவர்கள் பாவம் செய்தவர்கள் போன்ற பல காரணங்களைக் கூறினாலும் அறிவியல் வழியாகப் பார்க்கும்போது இது ஒரு விந்தையான செயலே.
ஹீப்ரு சமுகத்தினர் இதில் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். அவர்கள் எதைக் கண்டறிந்து பாதுகாத்து வந்தனரோ அதைத்தான் நாம் தற்போது மின்சாரம் என்று பயன்படுத்தி வருகின்றோம். யூதச் சட்டங்களைப் படித்தவரான ஜெச்சில்லி கண்டறிந்த விளக்கானது எந்தவித தூண்டுதலும் இல்லாமலே, ஏன் எரிபொருளும், திரியும் கூட இல்லாமலே எரியத் தொடங்குமாம் என்ற கதைகளும் உள்ளன.
இன்றைய காலகட்டத்தில் கூட இது போன்ற அணையா விளக்குகள் கண்டுபிடிக்க முடியாமல் போன நிலையில் அந்தக் காலத்திலேயே எப்படி கண்டறிந்திருப்பார்கள்?