வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பள்ளி ஆசிரியர்களுக்கான உளவியல் ஆலோசனை பயிற்சி 12 மற்றும் 13.01.2016 ஆகிய இருநாட்களும் அண்ணாமலைப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள அண்ணாமலை பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
பயிற்சியினை கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.ர.பாலமுரளி அவர்கள் துவக்கி வைத்தார். பயிற்சிக்கு வடலூர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் டாக்டர்.திரு.சி.செல்வராசு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பயிற்சியில் உளவியல் நிபுணர் டாக்டர்.திரு.செந்தில்நாதன் அவர்களும், மாநில ஆசிரியர் கல்வியியல் பயிற்சி இயக்கத்தின் பேராசிரியர் திரு.சக்தி அவர்களும் கலந்து கொண்டுஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார்கள்.
உளவியல் ஆலோசனை பயிற்சி குறித்த தங்களுடைய கருத்துகளை ஜெயா தொலைக்காட்சி நேரலையில் பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியர் திருமதி.பிரேமலதா அவர்களும், எடச்சித்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு.அக்பர் அவர்களும், இறையூர் அருணா மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியர் திருமதி.உமா அவர்களும் பகிர்ந்து கொண்டார்கள்.