Monday, 4 January 2016

தமிழ் இலக்கணம்தமிழ் இலக்கணம்

எழுத்து இலக்கணம்


தமிழ் எழுத்துகளின் எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ப்பு, எனும் பன்னிரு பகுதிகளையும் விளக்கிக் கூறுவது எழுத்து இலக்கணம் ஆகும்.

தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து என்ற சொல் மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் “அ“ என்ற எழுத்து ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் குறித்து நிற்கின்றது.
  1. முதலெழுத்துகள்
    1. உயிரெழுத்துகள்
    2. மெய்யெழுத்துகள்
  2. சார்பெழுத்துகள்
    1. உயிர்மெய் எழுத்து
    2. ஆய்த எழுத்து
    3. உயிரளபெடை
    4. ஒற்றளபெடை
    5. குற்றியலுகரம்
      1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்
      2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
      3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
      4. வன் தொடர்க் குற்றியலுகரம்
      5. மென் தொடர்க் குற்றியலுகரம்
      6. இடைத் தொடர்க் குற்றியலுகரம்
    6. குற்றியலிகரம்
    7. ஐகாரக் குறுக்கம்
    8. ஔகாரக் குறுக்கம்
    9. மகரக்குறுக்கம்
    10. ஆய்தக்குறுக்கம்