இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்-2016
இயற்கைதனிலே பூமி சுழல
காலம் அறிந்துகடிகாரம் சுழலும்
அது செயற்கை !!
காலையில் சூரியன் எழுந்து
மாலையில் மறையும்
இது இயற்கை !!
ஒவ்வொரு நாளும்பெருமை மிக்கது
அதிலும் இந்நாள் நாள்
அருமை மிக்கது !!
உழைத்தவன் அறிவான்
உழைப்பின் அருமை
அது தான் அவன்
உயர்வுக்குபெருமை !!
நல்லதை நினைப்போம் !!
உதவிகள் செய்வோம் !!
மானுடம் வாழ
மனித நேயம் காப்போம் !!
பொல்லா காலம்
போனதென்றே நினைத்து
நல்ல காலம்
பிறந்ததேன்றே வாழுவோம் !!
முயற்சி விதைகளை தூவி
நம்பிக்கை பயிர்களை
முளைக்க செய்வோம் !!
நம்பிக்கை வைக்கும்
நண்பர்களுக்கு
நட்பே துணை !!
அன்பே கடவுள் !!
புதிதாய் பிறந்த
புத்தாண்டு குழந்தையை
அன்பாய் வளர்த்து
அர்த்தமுள்ளதாக்குவோம் !!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....
தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள்,
அரசு உயர்நிலைப் பள்ளி, எடச்சித்தூர்-606 104