Sunday, 29 May 2016

இஸ்ரோவின் புதிய எல்லைகள்!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மறுபயன்பாட்டு ஏவு விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ), வெற்றிகரமாக ஏவி சோதித்துப் பார்த்ததன் மூலம், தனது முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது. முழுக்க முழுக்க இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஏவு விண்கலம்
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து திங்கள் கிழமை காலை விண்ணில் ஏவப்பட்டது. 

ஒலியைவிட ஐந்து மடங்கு வேகத்தில் சென்ற ஏவு வாகனம் 770 விநாடிகள் பறந்து, பிறகு வங்காள விரிகுடாவில் விழுந்தது. 65 கி.மீ. உயரத்தை எட்டிய இக்கலம், அதன் பிறகு பூமியின் வளிமண்டலத்தில் ஒலியின் வேகத்தைப் போல ஐந்து மடங்கு வேகத்தில் நுழைந்திருக்கிறது. செயற்கைக் கோள்களை விண்வெளியின் சுற்றுவட்டப் பாதையில் கொண்டுபோய் நிறுத்துவதற்காக, பல முறை இந்த ஏவு விண்கலங்களைப் பயன்படுத்துவதற்கான சோதனை இது.
இந்த ஏவுகலம் பறக்கும்போது வளிமண்டலம் உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களில் நிலவும் மாறுபட்ட தட்ப-வெப்ப நிலையைத் தாங்கும் இதன் தன்மையும், எங்கு தரையிறங்க வேண்டும் - எப்படி இறங்க வேண்டும் என்ற கட்டளைகளை ஏற்று இது எப்படிச் செயல்படுகிறது என்பதும் சரிபார்க்கப்பட்டிருக்கிறது. 

விண்ணில் செலுத்த வேண்டிய செயற்கைக் கோள்கள் போன்றவை பொருத்தப்படும் பகுதியைச் சுற்றி வெப்பம் தாக்காத வகையில் வெப்பந்தாங்கி ஓடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இன்னும் பலமுறை சோதனை செய்த பிறகே இதை வணிகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடியும். இதற்குச் சுமார் 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை ஆகலாம்.

முழுமையாகவும் விரைவாகவும் விண்வெளிக்குச் சென்று சேதமில்லாமல் திரும்பும் ஏவு வாகனத்தைப் பயன்படுத்த முடிந்தால், செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு ஆகும் செலவில் 80% குறைந்துவிடும். உலகின் பிற விண்வெளி நிறுவனங்களைவிட, இஸ்ரோ மிகக் குறைந்த செலவில் செயற்கைக் கோள்களை விண்ணுக்கு எடுத்துச் செல்கிறது என்ற நற்பெயர் கிடைத்திருக்கிறது. இப்போது விண்வெளிப் பயணங்களுக்கு ஆகும் செலவில் பெரும்பகுதியை ராக்கெட்டுகள்தான் எடுத்துக்கொள்கின்றன. ராக்கெட்டுகள் உந்துவிசையோடு, விண்ணுக்கு எடுத்துச் செல்ல விரும்பும் பொருட்களைக் கொண்டுசெல்கின்றன. அப்படிச் செல்லும்போது எரிபொருளை எரித்து அதில் கிடைக்கும் ஆற்றல் மூலம் உயரத்தை எட்டுகின்றன. இப்படிக் குறிப்பிட்ட பணியைச் செய்து முடித்த பிறகு புவியின் வளிமண்டலத்துக்குத் திரும்பும்போது எரிந்து அழிகின்றன.

இந்த ஆய்வில் அமெரிக்காவின் விண்வெளி நிறுவனம் நாசா செய்த தவறுகளைத் தவிர்க்க இஸ்ரோ விரும்புகிறது. அமெரிக்காவின் ‘ஸ்பேஸ்-எக்ஸ்’ நிறுவனம் அனுப்பிய ‘பால்கன்’ஏவு விண்கலத்தைப் போல் அல்லாது முழுமையாக மறுபயன்பாட்டுக்கு உட்படுத்தக்கூடிய ஏவு விண்கலத்தைத் தயாரிக்கவே இஸ்ரோ முயற்சி செய்வதாக விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் திட்ட இயக்குநர் டாக்டர் கே.சிவன் தெரிவித்திருக்கிறார். 

அமெரிக்கத் தயாரிப்பு மாதிரியானது, குறைந்த எடையில் செயற்கைக் கோள்களை அல்லது விண்வெளி வீரர்களைத்தான் விண்ணில் அனுப்பவல்லது. அதாவது, செயற்கைக் கோள்களின் எடையோ, விண்வெளி வீரர்களின் எண்ணிக்கையோ அதிகமானால் எரிபொருள் அளவையும் அதற்குப் பொருத்தமாகக் கூட்ட வேண்டும். இதனால் செலவு அதிகரிக்கும். தனது சோதனையைத் தொடர்ந்தால் 25 அல்லது 30 சோதனை முயற்சிகளுக்குப் பிறகு இஸ்ரோவுக்கு வெற்றி கிட்டும். இஸ்ரோ இதில் முழுமையான வெற்றி பெற வாழ்த்துவோம்!
மத்திய அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத் துறையின் கீழ், எஸ்.சி., -- எஸ்.டி., பிரிவினருக்கான வேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில், ஆண்டுதோறும் இலவச பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பயிற்சி, ஜூலை, 1ல்துவங்குகிறது.

11 மாதம் நடக்கும் பயிற்சி முகாமில், ஆங்கிலம், பொது அறிவு, அடிப்படை கணினி பயிற்சி, சுருக்கெழுத்து, தட்டெழுத்து உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.பயிற்சி பெறுவோருக்கு, ஒவ்வொரு மாதமும், 500 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும். ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள், 27 வயதிற்கு மிகாமலும், பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு மேல் படித்திருக்க வேண்டும். விண்ணப்பங்கள், ஜூன், 26 வரை, சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கட்டட வளாக அலுவலகத்தில் வழங்கப்படும்.


விண்ணப்பத்துடன் கல்லுாரி, கல்வி சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு பதிவு சான்றிதழ், இரண்டு புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூன், 26க்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஜூன், 27, 28ம் தேதி, எழுத்து, நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு, பயிற்சிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
EDUCATION-ADMISSION


2. அரசு தொழிற்பயிற்சி நிலையமான, .டி..,க்களில் சேர, ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர், இதில் சேர முடியும். 

இதற்குஇணையதளம் வாயிலாகவே விண்ணப்பிக்க  முடியும்.  விண்ணப்பங்களை, www.skilltraining.tn.gov.in  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, ஜூன் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

'மாவட்டம் வாரியாக கலந்தாய்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகம்அறிவித்துள்ளது.

EMPLOYMENT NEWS

சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் அதிகாரி பணியில் 150 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வயது 23 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருப்பதுடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து அது தொடர்பான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.ஏதேனும் ஒரு வணிக வங்கியில் கடன் வழங்கும் பிரிவில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் அவசியம். இப்பணிக்கு ஜூன் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில்(www.unionbankofindia.co.in
)விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு புதிய பாஸ் 

பள்ளி மாணவர்களுக்கு புதிய பாஸ் வழங்கும் வரையில் தற்போதுள்ள பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம். நடத்துநர்கள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1-ம் தேதி பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. 

மாணவர்களின் விவரங்கள், புகைப்படம் உள்ளிட்டவை பள்ளிகளில் பெறப்பட்டு புதிய பஸ் பாஸ் வழங்கப்படவுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட ஓரிரு வாரத்துக்குள் புதிய பஸ் பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அது வரையில் பழைய பஸ் பாஸை பயன்படுத்த அனுமதிக்கலாம் என போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகங்களின் உயர்அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘ஆண்டுதோறும் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டும் விரைவில் அளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் உயர் அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். பள்ளிகள் தொடங்கி 10 நாட்களுக்குள் அனைத்து மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

கடந்த ஆண்டில் சுமார் 30 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் தேவைக்கு ஏற்றவாறு வழங்கவுள்ளோம். புதிய பஸ் பாஸ் வழங்கும் வரையில் பழைய பஸ் பாஸை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். குறிப்பாக, பள்ளிச் சீருடையில் வரும் மாணவர்களிடம் டிக்கெட் கேட்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளோம்’’ என்றனர்.