மே 17 ல் பிளஸ் 2 - மே 25 ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்த மறுநாளான வரும் மே 17 ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசு தேர்வுத்துறை இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் நடப்பதால் தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 1ல் , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 13ம் தேதியும் முடிவடைந்தன. பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்து 39 ஆயிரம் பேர், பத்தாம் வகுப்பு தேர்வை 10. 72 லட்சம் பேர் எழுதினர்.
ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தும் தேர்வு முடிவுகள் வெளியாவதில் இழு பறி ஏற்பட்டு வந்தது. முடிவுகள் எப்போது வரும் என மாணவ, மாணவிகள் தேதி தெரியாமல் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று தேதி அறிவிக்கப்பட்டு விட்டது.
பிளஸ் 2 தேர்வு முடிவு மே 17 ம் தேதி காலை 10.30 முதல் 11 மணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 25ம் தேதி காலை 9.31 முதல் 10 மணிக்கு வெளியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முடிவுகள் அரசு தேர்வு துறை www.tnresults.nic.in இணையத்தில் வெளியாகும்