Sunday 6 December 2015

நாளை முதல் வழக்கம் போல் ரயில் சேவை
சென்னை: நாளை ( 07ம் தேதி)முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து ரயில் சேவை வழக்கம் போல் துவங்கும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஸ்ட ஜோஹிரி கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக தாம்பரம் - விழுப்புரம் வரை 85 கிலோ மீட்டர் தூரம் ரயில் பாதை பாதிப்பு அடைந்துள்ளது. மேலும் சென்னை ரயில் பாதை பல இடங்களில் மழை நீர் தேங்கி இருந்தது. குரோம்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் ரயில் பாதை தண்ணீரில் பாதிக்கப்பட்டுள்ளது . இதனை சீரமைக்க பல்வேறு மண்டலங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து சீரமைக்கும் பணி நடந்து வருகிறது மின் மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்படுகிறது . பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில் மூலம் 40 ஆயிரம் பயணிகள் பயன் அடைந்தனர் .

கனமழையின் காரணமாக பாதுகாப்பு கருதி 571 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் பயணம் முன்பதிவு செய்தவர்களில் 5. 71 லட்சம் பேருக்கு 25 கோடி ரூபாய் டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது . 

சென்னை புறநகர் ரயில்கள் 45 நிமிடத்திற்கு ஒன்று இயங்கும் இவ்வாறு ஜோஹிரி தெரிவித்தார்