Tuesday 29 December 2015

தமிழக மாநகராட்சிகள்

தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 12 மாநகராட்சிகள் இருக்கின்றன. இந்த மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாமன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். மாநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 12 மாநகராட்சிகள் உள்ளன.
தரம்மாநகர்மக்கள்தொகை
கணக்கெடுப்பு
2010
மாநகராட்சி
ஆக்கப்பட்ட
ஆண்டு
1.சென்னை மாநகராட்சி8,696,0101688
2.மதுரை மாநகராட்சி1,462,4201971
3.கோவை மாநகராட்சி
(கோயம்புத்தூர்)
2,151,4661981
4.திருச்சி மாநகராட்சி
(திருச்சிராப்பள்ளி)
1,021,7171994
5.சேலம் மாநகராட்சி795,3881994
6.நெல்லை மாநகராட்சி
(திருநெல்வேலி)
474,8381994
7.திருப்பூர் மாநகராட்சி466,9982008
8.ஈரோடு மாநகராட்சி444,7822008
9.வேலூர் மாநகராட்சி421,3272008
10.தூத்துக்குடி மாநகராட்சி356,0942008
11.திண்டுக்கல் மாநகராட்சி2014
12..தஞ்சாவூர் மாநகராட்சி2014