Tuesday, 3 November 2015

சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம் )

சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம் )


சுகன்ய சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Accounts ) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியால் ஜனவரி 22 தேதி 2015ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்சமான தொகையாக ரூபாய் 1000 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூபாய் 1000 இக்கணக்கில் செலுத்தப்படவேண்டும். மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும்வரை பணம் செலுத்த வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 150000 ரூபாய் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம். ஆண்டுக்கு 9.1 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. இக்கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமானவரிவிலக்கு அளிக்கப்படுகிறது. முதிர்வு தொகையை 21ஆம் ஆண்டு இறுதியில் பெறலாம். மேலும் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற்றுக்கொள்ளலாம்.
  • ஒரு நிதியாண்டில் குறைந்த பட்சம் 1000 ரூபாயும் அதிகபட்சமாக 1.5 லட்ச ரூபாயும் முதலிடு செய்யலாம்.
  • குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டபூர்வமான பாதுகாப்பாளர் இக்கனகினை தொடங்கலாம் .
  • குழந்தைக்கு 10 வயது வரை இந்த கணக்கினை தொடங்கலாம் .

வங்கிகளின் பட்டியல்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தொடங்க அனுமதிபெற்ற இந்திய வங்கிகளின் பட்டியலை கீழே காணலாம். 
  1. பாரத ஸ்டேட் வங்கி (SBI)
  2. ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா (SBP)
  3. ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானர் & ஜெய்ப்பூர் (SBBJ)
  4. ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் (SBT)
  5. ஸ்டேட் பாங்க் ஆஃப் ஐதராபாத் (SBH)
  6. ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் (SBM)
  7. அலகாபாத் வங்கி
  8. ஆந்திரா வங்கி
  9. ஆக்சிஸ் வங்கி
  10. பேங்க் ஆப் பரோடா (BoB)
  11. பேங்க் ஆப் இந்தியா (BoI)
  12. பேங்க் ஆப் மகாராஷ்டிரா (BoM)
  13. கனரா வங்கி
  14. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (CBI)
  15. கார்ப்பரேஷன் வங்கி
  16. தேனா வங்கி
  17. ஐசிஐசிஐ வங்கி
  18. ஐடிபிஐ வங்கி
  19. இந்தியன் வங்கி
  20. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)
  21. ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் (OBC)
  22. பஞ்சாப் தேசிய வங்கி (PNB)
  23. பஞ்சாப் & சிந்து வங்கி (PSB)
  24. சிண்டிகேட் வங்கி
  25. யூகோ வங்கி
  26. இந்திய யூனியன் வங்கி
  27. யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா
  28. விஜயா வங்கி
இவ்வங்கிகள் மட்டுமின்றி இந்திய அஞ்சலகத்தின் அனைத்து கிளைகளிலும் இத்திட்டத்தை தொடங்கலாம்