Friday, 6 November 2015

ரயில் டிக்கெட் ரத்து

ரயில் டிக்கெட் ரத்து செய்தால் 2 மடங்கு கட்டணம்: நவம்பர் 12ல் அமலுக்கு வருகிறது புதிய முறை

ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது இரண்டு மடங்கு அபராதத் தொகையை செலுத்தும் வகையில் புதிய முறை அமலுக்கு வரவிருக்கிறது.
ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்வதில் புதிய விதிகளை மத்திய ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது.
அதன்படி, ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது ரயில்வேயால் பிடிக்கப்படும் அபராதத் தொகை இரட்டிப்பாக்கப்பட உள்ளது.
நவம்பர் 12ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள இந்த புதிய விதிமுறையின்படி,  ரயில் புறப்பட்ட பிறகு, அந்த ரயிலுக்கான டிக்கெட்டுகளை ரத்து செய்ய முடியாது.
ஒரு வேளை பயணிகள் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் காத்திருப்போர் அல்லது ஆர்ஏசியில் இருந்து, ரயில் புறப்பட அரை மணி நேரம் இருக்கும் நிலையில் டிக்கெட் ரத்து செய்யப்படும் போது குறைந்த ரயில் கட்டணம் பயணிகளுக்கு திரும்ப வழங்கப்படும்.
ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் நடைமுறையை குறைக்கவே இந்த விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
48 மணி நேரத்துக்கு முன்பு ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் போது, ஏசி முதல் வகுப்பு / எக்ஸ்ளூசிஸ் பெட்டிகளுக்கான டிக்கெட் என்றால் ரூ.240ம், ஏசி இரண்டு இருக்கை/முதல் வகுப்பு என்றால் ரூ.200ம், ஏசி மூன்று இருக்கை என்றால் ரூ.180ம், படுக்கை வசதி என்றால் ரூ.120ம், இரண்டாம் வகுப்பு என்றால் ரூ.60ம் அபராதமாகப் பிடிக்கப்படும்.