தண்ணீர்
வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள். (திருக்குர்ஆண் 23 :18 )
பூமியின் மேற்ப்பரப்பில் தண்ணீர் இருப்பது போல் பூமியின் கீழ்ப் பரப்பிலும் பெரிய ஆறுகளும், ஏராளமான தண்ணீரும் உள்ளன.
இந்த நிலத்தடி நீர் கடல் வழியாக பூமிக்கு வருவதாகத் தான் முதலில் நம்பினார்கள். உண்மையில் ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை ஆங்காங்கே பூமியால் உறிஞ்சப்பட்டு அந்த நீர் தான் பூமிக்கு அடியில் நிலத்தடி நீராக சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று கி.பி 1580 தான் கண்டறிந்தனர்.

சமீப காலத்தில் தான் மழை நீரை நிலத்தடியில் சேமிப்பதற்கான பலவிதமான நடவடிக்கைகளையும் அரசுகள் எடுத்து வருகின்றன.
இந்தப் பேருண்மைகளை திருக்குர்ஆன் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவுபடுத்தி விட்டது.
பெய்கின்ற மழை நீரை உறிஞ்சுவதற்கு ஏற்ப ஊர்களையும், நகரங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற மறைமுகமான வழி காட்டுதலும் இந்த வசனத்திற்குள் அடங்கியிருக்கிறது.