இந்தியாவின் பால்காரருக்கு இன்று பிறந்தநாள்
கூட்டுறவு பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தை நவீனப்படுத்தி இந்தியாவின் வெண்மை புரட்சிக்கு வழி நடத்தினார். இதன் மூலம் உலகிலேயே கூடுதலாக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை முன்னேற்றினார்.
பால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்று திகழ வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்த நாளை கூகுள் தனது முகப்புப் பக்கத்தில் அழகான டூடுளாக வெளியிட்டுள்ளது.
கூட்டுறவு பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தை நவீனப்படுத்தி இந்தியாவின் வெண்மை புரட்சிக்கு வழி நடத்தினார். இதன் மூலம் உலகிலேயே கூடுதலாக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை முன்னேற்றினார்.
இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் வர்கீஸ் குரியன் இந்தியாவின் பால்காரர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
இந்த நிலையில் இன்று (26.11.15)வர்கீஸ் குரியனின் 94வது பிறந்தநாளை முன்னிட்டு தனது முகப்புப் பக்கத்தில் அழகான டூடுளாக வெளியிட்டுள்ளது கூகுள்.
இவரை கவுரவுக்கும் வகையில் கூகுள் நிறுவனம் அழகான பால் கேன்கள், பசு ஒன்றுடன் வர்கீஸ் குரியன் அமர்ந்திருப்பது போன்ற டூடுள் வெளியிட்டுள்ளது . இந்தியாவின் பால்காரர் என்று அழைக்கப்படும் வர்கீஸ் குரியன் கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தனது 90வது வயதில் மறைந்தார்.