Tuesday 15 September 2015

கணித புதிர்

கணித புதிர்

வணக்கம் நண்பர்களே,

கணிதத்தை போன்று நம் சிந்தனையை தூண்டும், அறிவு வளர்ச்சியை பெருக்கும் எளிய தூண்டுகோல் வேறெதுவும் இல்லை. ஒரு சிறிய கணிதப் புதிர்...

...B A S E
+ B A L L
------------
G A M E S
------------

இதில் உள்ள ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் ஒரு எண்ணை குறிக்கிறது. ஒரே எண்ணை இரண்டு எழுத்துகளுக்கு பொருத்தக் கூடாது. அனைத்தும் ஒற்றை இலக்க எண்களே ( 0 முதல் 9 வரை ). A, B, E, G, M, S, L மதிப்புகளை காண்க? 

உதாரணத்திற்கு ஒரு சிறிய புதிரையும் விடையையும் இணைத்துள்ளேன், இதனை வைத்து மேலே உள்ள புதிரை முயற்சித்துப் பாருங்கள்.

...A B
+ C D
------
E C C
------ இதற்கான விடை A=9, B=6, C=3, D=7, E=1.

...9 6
+ 3 7
------
1 3 3
------