Wednesday, 30 September 2015
REAL STORY TIME
ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து,
ஒவ்வொருவரையும்,வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும்
அதில் எழுதச் சொன்னார்.
ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது இடைவெளியுடன் !
மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் -
“ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள்காணும் – உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம் ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”
மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.
வாரக்கடைசி – டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும்ஒரு தாள் தயார் செய்து, அதில்
ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது இடைவெளியுடன் !
மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் -
“ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள்காணும் – உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம் ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”
மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.
வாரக்கடைசி – டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும்ஒரு தாள் தயார் செய்து, அதில்
மற்ற மாணவர்கள் அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி கீழே தன் கையெழுத்தையும் போட்டு, மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார். மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று அமர்ந்து படிக்கிறார்கள்.
10 நிமிடங்கள் – வகுப்பறையே சந்தோஷக்கடலில் மிதக்கிறது.
“நான் இவ்வளவு சிறப்பானவனா..?
என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல
அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?” –
அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் !
அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள குணாதிசயங்களை மேலும் மேலும்வளர்த்துக்
கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும்,சக மாணவர்கள்
தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும்,சக மாணவர்கள்
மேல் அன்பு அதிகரிக்கிறது.பல வருடங்கள் கழிகின்றன.
அந்த வகுப்பில் படித்த மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில் சேர்கிறான்.
அந்த வகுப்பில் படித்த மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில் சேர்கிறான்.
பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து, மரணம் அடைகிறான்.
அவன் உடல் ராணுவ மரியாதையுடன் சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது.
இறுதிச் சடங்கில், கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்.
மிடுக்கான ராணுவ உடையில் - நாட்டின் தேசியக்கொடு போர்த்தப்பட்டு,சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்.
ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதைசெலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார். பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார்.
உடலைத் தாங்கி வந்த, ராணுவ சக வீரர்கள் அருகிலேயே நின்றிருந்தனர்.
ஒரு வீரர் கேட்கிறார் -”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு டீச்சரா ?” என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.
பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் - எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்”
சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத் தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர்.
அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்.
அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம் கூறுகிறார் -
“டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்.
இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது
பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.
அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக -
பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள்.
ஆமாம் – பல வருடங்களுக்கு
முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல
குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !
கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் -
“ரொம்ப நன்றி டீச்சர் – உங்கள் கடிதத்தை அவன்
உயிரையும்விட மேலாக விரும்பினான்.
இத்தனை வருடங்களும்
அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான்.
அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும்,
பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது.”
டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து
கதறி அழுகின்றனர்..,
ஆம்,என் இனிய நண்பர்களே.,
இந்த வாழ்க்கைப் பாதை கரடு முரடானது.
எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -எப்போது,
எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.
இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை
அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.
நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.
ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,
நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,
அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.
ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை -
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத்
தவறி விடுகிறோம்.
கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத்
தெரிவதில்லை.
சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக
மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல்
நன்றாக இருக்கும்போது – பாராட்டுவது இல்லை !
பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !
இந்த உலகில் அனைத்து உயிர்களுமே,
பாராட்டுதலை எதிர்பார்க்கிறது.
கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !
நீங்களோ, நானோ -
யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.
வெளிப்படையான பாராட்டுதல் -
அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்.
நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும்.
தோழமை உணர்வு அதிகப்பட உதவும்.
அவன் உடல் ராணுவ மரியாதையுடன் சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது.
இறுதிச் சடங்கில், கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்.
மிடுக்கான ராணுவ உடையில் - நாட்டின் தேசியக்கொடு போர்த்தப்பட்டு,சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்.
ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதைசெலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார். பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார்.
உடலைத் தாங்கி வந்த, ராணுவ சக வீரர்கள் அருகிலேயே நின்றிருந்தனர்.
ஒரு வீரர் கேட்கிறார் -”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு டீச்சரா ?” என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.
பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் - எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்”
சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத் தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர்.
அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்.
அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம் கூறுகிறார் -
“டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்.
இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது
பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.
அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக -
பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள்.
ஆமாம் – பல வருடங்களுக்கு
முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல
குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !
கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் -
“ரொம்ப நன்றி டீச்சர் – உங்கள் கடிதத்தை அவன்
உயிரையும்விட மேலாக விரும்பினான்.
இத்தனை வருடங்களும்
அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான்.
அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும்,
பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது.”
டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து
கதறி அழுகின்றனர்..,
ஆம்,என் இனிய நண்பர்களே.,
இந்த வாழ்க்கைப் பாதை கரடு முரடானது.
எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -எப்போது,
எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.
இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை
அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.
நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.
ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,
நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,
அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.
ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை -
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத்
தவறி விடுகிறோம்.
கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத்
தெரிவதில்லை.
சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக
மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல்
நன்றாக இருக்கும்போது – பாராட்டுவது இல்லை !
பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !
இந்த உலகில் அனைத்து உயிர்களுமே,
பாராட்டுதலை எதிர்பார்க்கிறது.
கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !
நீங்களோ, நானோ -
யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.
வெளிப்படையான பாராட்டுதல் -
அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்.
நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும்.
தோழமை உணர்வு அதிகப்பட உதவும்.
உலக இருதய தினம்
உலக இருதய தினம்; 29.09.2015
அக்கறை இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்
உலகிலேயே இருதய நோய்களால் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இருதய நோய்கள் குறித்தும், இருதயத்தை பாதுகாப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்வதேச இருதய கூட்டமைப்பு சார்பில் செப்., 29ல் உலக இருதய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
'நைட் ஷிப்ட்', முறையற்ற உணவு பழக்கம், அதிக நேர பணி, இதனால் குடும்பத்தில் ஏற்படும் நிம்மதியின்மை போன்றவை இருதய நோய் சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது. அதே போல் உலகில் மாரடைப்பால் மரணம் அடைபவர்களில் 20 சதவீதம் பேர் புகை பிடிப்பவர்கள். மற்றவர்களை விட, புகைபிடிப்பவர்களுக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். புகை பிடிப்பதால் இருதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. 80 சதவீத மாரடைப்புகள், தடுக்கப்படக்கூடியவை.
புகை பிடிப்பவர்கள், வெளியிடும் புகையினால் அருகில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமன், சர்க்கரை நோய் ஆகியவற்றால் இருதய நோய் ஏற்படலாம். சர்க்கரை நோயால் இருதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் சேதமடைந்து மாரடைப்பு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளில் 75 சதவீதம் பேருக்கு இக்குறைபாடு இருக்கிறது.
எப்படி தவிர்ப்பது:
* புகை பிடிப்பதற்கு 'நோ' சொல்லுங்கள்.
*உப்பு அதிகம் பயன்படுத்துவதால் ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும். இதன் மூலம் இருதய நோய் வாய்ப்பு அதிகரிக்கிறது.
* ரத்தத்ததில் கொலஸ்ட்ரால், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக வைத்திருக்க வேண்டும்.
l*யோகா மற்றும் தியானம் செய்வது நல்லது. உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், தினமும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். முறையான உடற்பயிற்சி, சரியான உணவு பழக்கம், உரிய முறையில் மருத்துவம் எடுத்துக்கொள்வது இருதய நோயில் இருந்து பாதுகாக்கும்.
*'எஸ்கலேட்டர்', 'லிப்ட்' ஆகியவற்றை பயன்படுத்தாமல், மாடிப்படிகளை பயன்படுத்த வேண்டும். ஒரு நாளுக்கு சராசரியாக 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும்.
*காய்கறிகள், அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மதுப்பழக்கத்தை விட வேண்டும். கொழுப்பு இல்லாத இறைச்சி, மீன், பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணெய், மக்காச்சோளம், சூரியகாந்தி எண்ணெய் ஆகியன, ஓய்வின்றி உழைக்கும் இருதயத்துக்கு பாதுகாப்பளிக்கின்றன.
*சிரிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது, இருதய நோயில் இருந்து விடுபட சிறந்த மருந்து.
இருதயத்தசை பலவீனத்தை தடுப்பது எப்படி:- டாக்டர் ஜி.துரைராஜ், மதுரை 98421 05000:
இருதயம் ஒரு தானியங்கி தசையாகும். ஒருவரது மடித்த உள்ளங்கை அளவே உள்ள இருதயம் தானாக சுருங்கி விரியும் தன்மை கொண்டது. ஒவ்வொரு முறை சுருங்கி விரியும் போதும் 55 சதவீதத்திற்கு மேல் ரத்தத்தை உடல் உறுப்புக்களுக்கு அனுப்பி வைக்கும்.இருதயம் சுருங்கி விரிய தேவையான சத்து, இருதயத்திற்கு மேல் கிரீடம் சூட்டியது போல் அமைந்துள்ளது. கொரானரி தமனிகளில் வரும் ரத்தத்தின் மூலம் கிடைக்கிறது. இந்த கொரானரி தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு இருதயத்திற்கு தேவையான சத்து கிடைக்காத போது இருதயத் தசை பலவீனம் அடைகிறது. இதனால் இருதய வீக்கம் ஏற்பட்டு நடக்கும் போதும், படுக்கும் போதும் மூச்சிரைப்பும், பலவீனமும் ஏற்படுகிறது. இருதயத் தசை பலவீனம் முற்றிய நிலையில் கால்களில் வீக்கம் ஏற்படும். கொரானரி தமனிகளில் ஏற்படும் அடைப்பை ஸ்டென்ட் சிகிச்சை, பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்தால் இருதயத் தசை பலவீனம் அடைவதைத் தடுக்க முடியும். கொரானரி தமனிகளில் அடைப்பு இல்லாதவர்களுக்கும் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, உடல் பருமன், பரம்பரை மற்றும் நுண் கிருமிகளால் இருதயத் தசை பலவீனம் அடையலாம். இந்த வியாதி பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும். இருதயத் தசை பலவீனம் அடைந்தவர்களில், 5 ஆண்டுகளில் 50 சதவீதம் வரை மரணம் அடைய வாய்ப்பு உண்டு.இதில் பெரும்பாலோர் திடீர் மரணம் அடைவார்கள். இருதயத் துடிப்பைச் சரி செய்யும் கருவியை மார்பில் நிரந்தரமாகப் பொருத்துவதன் மூலம் திடீர் மரணத்தைத் தடுக்கலாம். அத்துடன் மருந்துகளையும் தவறாமல் எடுக்க வேண்டும்.
செயற்கை உணவை தவிர்ப்போம்- - டாக்டர்கள் ரமேஷ், ேஹமநாத், மதுரை
82200 44606, 82200 44610:
இந்தாண்டு 'ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தி இருதய நோயை தவிர்ப்போம்' என்ற தலைப்பில் உலக இருதய தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்போம் என உறுதி எடுப்போம். செயற்கை உணவை தவிர்த்து இயற்கையான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உண்போம். குழந்தைகளுக்கும் இதே உணவு முறைகளை ஊக்குவிப்போம். கற்பிப்போம்.புகையிலையை (பீடி, சிகரெட், குட்கா) முற்றிலும் தவிர்ப்போம். இதன் மூலம் குழந்தைகளையும் நண்பர்களையும் புகையிலை பாதிப்பில் இருந்து விடுவிப்போம். தினந்தோறும் உடற்பயிற்சி, விளையாட்டில் குறைந்தது அரைமணி நேரமாவது செலவழிப்போம். இருதய நோய் காரணிகளான சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு, உடல் பருமன் ஆகியவற்றை கண்டறிந்து முறையாக மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெறுவோம்.
திடீர் மாரடைப்பு ஏன்
சாதாரண மாரடைப்பு என்பது இருதயத்திற்கு செல்லக்கூடிய ௩ ரத்தக் குழாய்களில் ஏதேனும் ஒன்றில் அல்லது மூன்றிலும் அடைப்பு ஏற்பட்டு, இருதயத்திற்கு செல்லும் ரத்தத்தில் இருக்கக்கூடிய ஆக்ஸிஜன் குறைந்து, சதைகள் கெட்டுப்போவதால் ஏற்படுகிறது. ஆனால், திடீர் மாரடைப்பு என்பது இருதயத்திற்கு செல்லக்கூடிய எலக்ட்ரிக்கல் சிஸ்டம் கெட்டுப்போவதால் மிக வேகமாக அளவிட முடியாத துடிப்பு ஏற்பட்டு, மூளைக்கு செல்லக்கூடிய ரத்த அளவு குறைந்து சுய நினைவை இழந்து மயக்கமடைதலாகும். சாதாரண மாரடைப்பை நாம் சுலபமாகக் கண்டுபிடித்து காப்பாற்றிவிடலாம். ஆனால், திடீர் மாரடைப்பை உடனடியாக கவனிக்காமல் விட்டால் உயிரிழப்பு ஏற்படும்.
இதற்கு முக்கிய காரணங்கள்- டாக்டர். பாஸ்கரன், மதுரை:அதிகமான கொழுப்புச் சத்து நிறைந்த உணவு உட்கொள்ளுதல், சிகரெட் மற்றும் மதுப்பழக்கம், அளவுக்கதிகமான டென்ஷன், வேலைப்பளு, சரியான நேரத்தில் உணவு உண்ணாமை, உடற்பயிற்சியின்மை, ஈரலில் அதிக கொழுப்புச்சத்து சேர்த்தல், ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் எந்தவிதமான உணவு மற்றும் மருந்துக்கட்டுப்பாடு இல்லாதிருத்தல்.மேலே குறிப்பிட்ட 9 காலங்களை உணர்ந்து செயல்பட வேண்டும்.35 வயதிற்குமேல் கட்டாயமாக ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து உடலிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டால் திடீர் மாரடைப்பு ஏற்படாது தடுக்க இயலும்.
மாரடைப்பு அறிகுறிகள்-- டாக்டர். பி.எஸ்.நாகேந்திரன், மதுரை. 97901 11411: புகைப்பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், உடலின் எடை, உடற் பயிற்சி செய்யாமை, சர்க்கரை வியாதி போன்றவற்றால் மாரடைப்பு வரும். இது கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள்.வயது, பரம்பரையாக வரும் மரபணுத் தன்மை, இது தவிர ரத்தக் குழாயில் எவ்வித அடைப்பின்றியும் மாரடைப்பு வரலாம். இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இருதயத்தின் ரத்தக் குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இது கட்டுப்படுத்த முடியாத காரணங்களாகும். நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம், வியர்த்தல், குமட்டல், மயக்கம் வருவது போல உணர்தல், மார்பின் முன் பகுதியிலோ அல்லது நெஞ்சுக் கூட்டின் பின்புறமாக வலி இருக்கலாம். இங்கிருந்து வலி கழுத்து அல்லது இடது கைக்கு பரவலாம். வாந்தி, இருமல், படபடப்பு மற்றும் 20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் வலி, தீவிர நிலையில் ரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பு ஏற்படுகிறது.மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம்.
ருமாட்டிக் இருதய நோய்கள்:- டாக்டர், கே.ஜி.புவனேஷ்பாபு,மதுரை.
94866 42430:
ருமாட்டிக் நோயினால் மைட்ரல் மற்றும் அயோட்டிக் வால்வுகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. இதில் மைட்ரல் வால்வு சுருக்கம் ௧௫ முதல் ௩௦ வயது ஆண் மற்றும் பெண்களை தாக்குகிறது. பெண்களுக்கு அவர்கள் கர்ப்ப காலத்தில் இந்த நோயினால் பிரசவத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ருமாட்டிக் இருதய நோய் வரக்காரணமானது ருமாட்டிக் காய்ச்சல். இது 'ஜிபிஎஸ்' என்ற நுண்கிருமியினால் (பாக்டீரியா) ஏற்படுகிறது. ௫ முதல் ௧௫ வயது குழந்தைகளை இது தாக்குகிறது. ஆரம்பத்தில் இது தொண்டை அலர்ஜி போல் காணப்படுகிறது. அதற்கான சரியான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ருமாட்டிக் காய்ச்சலாக காணப்படுகிறது. இதில் குழந்தைகளுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் பெரிய முட்டிகள் ஆகியவை பாதிக்கப்பட்டு வீக்கம், வலி மற்றும் நடக்க முடியாத நிலைமைக்கு கொண்டு செல்கிறது. ௨ முதல் ௪ வாரங்களில் இந்த பிரச்னைகள் தானாக மாறி விடுகின்றன. ஆனால், ௫௦ சதவீத குழந்தைகளுக்கு இருதயம் பாதிக்கப்படுகிறது.இருதய நோய் முற்றிய பிறகே ருமாட்டிக் காய்ச்சல் வந்ததாக சில சமயம் கணிக்க வேண்டியுள்ளது. இந்த காய்ச்சல் வந்த குழந்தைகளுக்கு 'எக்கோ கார்டியோ கிராம்' இருதய ஸ்கேன் எடுத்து, வால்வுகளை சரியாக இருக்கின்றனவா என அறிய வேண்டும். இருதய ஸ்கேனில் இருதய வால்வு பாதிப்பு இருந்தால் மருத்துவர் ஆலோசனை பேரில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். பெனிசிலின், எரித்திரிரோமைசின் மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டி வரும்.
Thanks to: Teachers Friendly Blog, Tamilnadu.
Tuesday, 29 September 2015
கணங்கள்
9-ஆம் வகுப்பு கணக்கு, கணங்கள் பாடப்பகுதி செயல்பாடு.
இரத்தின புகழேந்தி , அரசு உயர்நிலைப்பள்ளி, மன்னம்பாடி.
கணங்கள் என்ற பாடப்பகுதி மாணவர்கள் 9 ஆம் வகுப்பில் புதிதாகப் படிப்பதால் சற்று கடினமாக உணருவார்கள். எனவே சிறு சிறு செயல்பாடுகள் கொடுத்து செயல்வழியாக செய்து பார்ப்பதன்மூலம் அதனை எளிதாக்கலாம்.
A’∩B, A∩B மற்றும் A∩B’ ஆகியவற்றை வென் படத்தில் குறித்து, இவற்றின் சேர்ப்புகணத்தைக்காண்பதற்கான செயல்பாட்டினை படத்தில் உள்ளதுபோல் செய்யலாம்.
வென்படம் வரைவது மாணவர்களுக்கு கடினமாக உள்ளது. அதனை சற்று எளிமைப் படுத்த இச்செயல்பாடு உதவும். A, B என இரு வட்டங்கள் உள்ளன. அவற்றுள் எந்த வட்டத்தில் வண்ணம் தீட்டினால் அது A’ என்பதைக்குறிக்கும் என்று விளக்கிட கையிலுள்ள வட்ட வடிவ வட்டினை A என்ற வட்டத்தின் மீது வைத்து மறைத்துவிட்டு இப்போது எஞ்சியுள்ள B என்ற வட்டத்தினுள் வண்ணம் தீட்ட வேண்டும். இதுவே A’∩B என்பதற்கான வென்படம் என்பதை மாணவர்களுக்கு விளக்க வேண்டும். இதுபோலவே மற்ற இரு கணங்களுக்கும் வென் படங்களை வரையச்செய்து அதன் பிறகு மூன்றின் சேர்ப்புக்கணத்திற்கான வென் படத்தை ( A’∩B) U ( A∩B) U ( A∩B’ ) என்று வரையும்படி கூறவேண்டும். அவர்களின் படங்களின் தன்மைக்கேற்ப மதிப்பீடு அளிக்கலாம்.
9
A’∩B, A∩B மற்றும் A∩B’ ஆகியவற்றை வென் படத்தில் குறித்து, இவற்றின் சேர்ப்புகணத்தைக்காண்பதற்கான செயல்பாட்டினை படத்தில் உள்ளதுபோல் செய்யலாம்.
வென்படம் வரைவது மாணவர்களுக்கு கடினமாக உள்ளது. அதனை சற்று எளிமைப் படுத்த இச்செயல்பாடு உதவும். A, B என இரு வட்டங்கள் உள்ளன. அவற்றுள் எந்த வட்டத்தில் வண்ணம் தீட்டினால் அது A’ என்பதைக்குறிக்கும் என்று விளக்கிட கையிலுள்ள வட்ட வடிவ வட்டினை A என்ற வட்டத்தின் மீது வைத்து மறைத்துவிட்டு இப்போது எஞ்சியுள்ள B என்ற வட்டத்தினுள் வண்ணம் தீட்ட வேண்டும். இதுவே A’∩B என்பதற்கான வென்படம் என்பதை மாணவர்களுக்கு விளக்க வேண்டும். இதுபோலவே மற்ற இரு கணங்களுக்கும் வென் படங்களை வரையச்செய்து அதன் பிறகு மூன்றின் சேர்ப்புக்கணத்திற்கான வென் படத்தை ( A’∩B) U ( A∩B) U ( A∩B’ ) என்று வரையும்படி கூறவேண்டும். அவர்களின் படங்களின் தன்மைக்கேற்ப மதிப்பீடு அளிக்கலாம்.
9
VIDEOS
VIDEOS
WONDERFUL MILITARY PARADE VIDEO- DON'T MISS
PACKED SNACKS ARE DANGEROUS TO EAT CHILDREN-MUST WATCH
Monday, 28 September 2015
CONGRATULATIONS
CONGRATULATIONS
பன்னாட்டு லயன்ஸ் சங்கத்தின் 324-A3 மாவட்டத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்டு 2015-ஆம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது பெற்றுள்ள மன்னம்பாடி, அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் முனைவர்.திரு.இரத்தின.புகழேந்தி அவர்களுக்கு எடச்சித்தூர், அரசு உயர்நிலைப் பள்ளியின் வாழ்த்துகளை உரித்தாக்குகின்றோம். அவரின் சாதனைகள் தொடரவும் இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம்.
Sunday, 27 September 2015
வாழ்த்துகின்றோம்
வாழ்த்துகின்றோம்
விருத்தாசலம் கல்வி மாவட்டத்தின் புதிய மாவட்டக்கல்வி அலுவலராக பதவி உயர்வின் மூலம் பணியேற்றுள்ள திருமதி.க.கோமதி அவர்களுக்கு எடச்சித்தூர், அரசு உயர்நிலைப் பள்ளி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், அன்னாரின் பணி சிறக்கவும், சாதனைகளுக்காகவும் வாழ்த்துகின்றோம்.
வாழ்த்தி மகிழும்....
தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள்
பழந்தமிழரின் அளவை முறைகள்
பழந்தமிழரின் அளவை முறைகள்
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.
இரெண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.
முகத்தல்
அளவைகள்
ஒரு ஆழாக்கு = நூற்றி
அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
முன்னூற்று அறுபது நெல் = ஒரு
சோடு.
நிறுத்தல் அளவைகள்
மூன்றே முக்கால் குன்றி மணி எடை
= ஒரு பணவெடை.
ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது
மில்லி கிராம்.
கால அளவுகள்
இருபத்தி நான்கு நிமிடங்கள் =
ஒரு நாளிகை.
THANKS TO: K.MURUGAN, XI-A, T.M.H.S.S, DEVIYAKURICHI
Saturday, 26 September 2015
பாரம்பரிய நெல்
பாரம்பரிய நெல்
செய்தியும்,படமும்: திரு.பெ.வடிவேலு, மாவட்டக்கல்வி அலுவலர் [ஓய்வு], மழவந்தாங்கல், விழுப்புரம் மாவட்டம்.
பாரம்பரிய நெல் விதைகள் பழைமையான நெல் விதை ரகங்களைக் குறிக்கும். இந்தியாவில் 200000 மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளதாக அறியப்படுகிறது. இந்தியாவில் பசுமைப்புரட்சியின் விளைவாக பல பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்து பட்டன.
1959 ஆம் ஆண்டு இந்தியாவின் கட்டக் பகுதியில் அமைந்திருந்த மைய அரிசி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் ஆர்.எச். ரிச்சாரியா, இந்தியாவிற்கு அதிக விளைச்சல் தரும் பாரம்பரிய விதை நெல் வகைகளை சேகரித்து அவற்றை பயன்படுத்துவதே உகந்தது என்றும் நவீன ஐ.ஆர்.ஆர் ரக வீரிய நெல் விதைகள் நோய் பரப்பக்கூடியவை என்றும் எடுத்துக்கூறி நவீன ரகத்திற்கு அனுமதி மறுத்து அதன் விளைவாக மாற்றம் செய்யப்பட்டு,பிற்காலத்தில் நோயுற்று வறுமையில் வாடி இறந்தார்.
பின்னர் அப்பதவிக்கு வந்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் மற்றும் மற்ற இயக்குநர்களாலும் டாக்டர் ஆர்.எச். ரிச்சாரியா சேகரித்திருந்த பாரம்பரிய ரக விதைநெல்கள் காணாமல் போனதைப்பற்றிக் கூற இயலவில்லை.டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் காலத்தில் சிறப்பு பெற்ற பசுமைப்புரட்சியில் அதிக விளைச்சல் தரும் நவீன ரகங்கள் முக்கியத்துவம் தரப்பட்டு, பாரம்பரிய நெல் விதைகள் இந்தியாவில் மறையத்தொடங்கின.
விவசாயிகளிடையே பாரம்பரிய நெல் விதைகளை விற்பனைக்கு அரசு கொணர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
பசுமைப் புரட்சியின் விளைவாக நெல் உற்பத்தி பெருகியபொழுதும் பல ஆண்டுகளுக்குப் பின்னரே ரசாயன உரத்தால் ஏற்பட்ட பின்விளைவுகள் பயன்படுத்துவோரிடம் ஏற்படுவது உணரப்பட்டது.இதனால் இயற்கை விவசாயத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை தந்து உடல்நலம் பேணும் செயலில் பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாக்க முயற்சிகள் செய்யப்படுகின்றன. இந்தியாவெங்கும் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கும் முயற்சி தனிநபர்கள் அல்லது அமைப்புகள் மூலம் செய்யப்படுகின்றது
பாதுகாக்கும் முன்னெடுப்புகள், அமைப்புகள், நடவடிக்கைகள்
- நமது நெல்லைக் காப்போம் அமைப்பு பாரம்பரிய நெல் வகைகள் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 2006 லிருந்து ஆண்டு தோறும் மே கடைசி வாரத்தில் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 18 ஆயிரம் விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் வகைகளை விநியோகித்துள்ளார்கள் என அறியப்படுகிறது
- நட்வர் சாரங்கி (77 வயது) எனும் ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தின் நரிசு கிராமத்தின் ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியர் சுமார் 400 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு, பாதுகாத்துள்ளார்.இவை விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.தமிழ்நாடு மற்றும் கேரளா விவசாயிகள் இவரிடம் இருந்து மருத்துவ குணம் கொண்ட நெல் ரகங்களைப்பெறுகின்றனர்.
- உளுந்தூர்பேட்டை, ஸ்ரீசாரதா ஆசிரமம், ‘அக்ஷய க்ருஷி கேந்திரா’ (வேளாண்மை மையம்) பாரம்பரிய நெல் வகைகளில் 150 வகைகளை சேகரித்து, விழுப்புரம் மாவட்டத்து விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைநெல் இலவசமாக வழங்கிப் பயிரிட ஊக்குவிப்பதன் மூலமாகவும் பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாத்து வருகின்றது. இதன் மூலம் பாரம்பரிய நெற்பயிரை 120 கிராமங்களைச் சேர்ந்த 1,500 பெண்விவசாயிகள் பயிரிட்டு பலனடைந்துள்ளனர்
- கர்நாடகத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ஸ்ரீனிவாசமூர்த்தி, இயற்கை விவசாய முறையின் உதவியுடன் பாரம்பரியமான 200 நெல் வகைகளைப் புதுப்பித்துள்ளார்.
- புதுக்கோட்டைப் பகுதியில் வறட்சி மற்றும் நோய்த்தாக்குதலைத் தாக்குபிடிக்கும் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் பணியில் புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் 24 வகையான பாரம்பரியமான நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளனர்.
- காஞ்சிபுரம் மாவட்டம் செங்கற்பட்டு பகுதியைச் சேர்ந்த முகுந்தன், அரியன்னூர் ஜெயச்சந்திரன், திருவண்ணாமலை கலசப்பாக்கம் மீனாட்சி சுந்தரம் முதலானோர் கிச்சலிச்சம்பா, பெருங்கார் சீரகச்சம்பா ஆகிய பாரம்பரிய நெல் வகைகளைக் காப்பாற்றியுள்ளனர்
- இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம் தொண்டு நிறுவனம் நூற்றுக்கணக்கான அரிய பாரம்பரிய விதை நெல் கொண்ட விதை வங்கியை சீர்காழியில் அமைத்துள்ளது
- ஒடியாவில் இருந்து பெற்ற நெல் விதை உதவியோடு தஞ்சையில் விதை வங்கியை மாரியம்மன் கோயில் கோ.சித்தர் அமைத்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண் பல்கழைக்கழகம்
பாரம்பரிய நெற்பயிர்களில் எந்த பயிர் எந்த பகுதியில் செழித்து வளரும் என்பது போன்ற தகவல்களை தமிழ்நாடு வேளாண் பல்கழைக் கழகம் தருகின்றது
சிறப்புகள்
மருத்துவ குணங்கள்
பாரம்பரிய நெல் ரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவக் குணம் கொண்டவையாகவும், பொதுவாக அனைத்துமே எளிதில் சீரணமாகக்கூடியவையாகவும் மலச்சிக்கலை நீக்கும் தன்மை மற்றும் நரம்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டவையாகவும் அறியப்படுகின்றன
பன்னோக்கு பயன்
நவீன ரக நெற்பயிர்கள் குறைவான உயரமே வளரக்கூடிய குட்டை ரகத்தைச் சேர்ந்தவை. ஆனால் பாரம்பரிய நெல் ரகங்கள் நீளமாக வளரக்கூடியவை. மாட்டுக்கு வைக்கோல், மண்ணுக்குத் தழைச்சத்து, விவசாயிக்கு நெல் என பன்னோக்கில் பயன் தரக்கூடியவையாக பாரம்பரிய நெல் ரகங்கள் அமைகின்றன.
வைக்கோல்
நவீன ரக நெற்பயிரின் வைக்கோலில் சத்து இல்லாததால் வைக்கோலை உண்ணும் பசுக்களுக்கு பால் அதிகம் சுரப்பதில்லை. இந்தக் குறைபாடுகள் பாரம்பரிய நெற்பயிரின் வைக்கோலை ஏற்படாது.
இலங்கையில்
இலங்கையில் மிகக் குறைந்த அளவில் பாரம்பரிய நெல் வருக்கங்கள் இன்னும் பயிர்செய்யப்படுகின்றன. இவற்றில் சீனட்டி நெல் முக்கியமானது. இது சிவப்பு, வெள்ளை இரு வலையிலும் காணப்படுகின்றது. மறைந்த பாரம்பரிய வருக்கங்களாக முருங்கக்காயன், பச்சைப் பெருமாள், இளங்கலையன்,முல்லை நெல், மணல்வாரி முதலானவற்றைக் கூறலாம். இலங்கை குருநாகல் மாவட்டத்தில் பாரம்பரிய நெற்பயிர்களை பயிரிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
பாரம்பரிய நெல் வகைகள்
- அன்னமழகி
- அறுபதாங்குறுவை
- பூங்கார்
- கேரளா ரகம்
- குழியடிச்சான் (குழி வெடிச்சான்)
- குள்ளங்கார்
- மைசூர்மல்லி
- குடவாழை
- காட்டுயானம்
- காட்டுப்பொன்னி
- வெள்ளைக்கார்
- மஞ்சள் பொன்னி
- கருப்புச் சீரகச்சம்பா
- கட்டிச்சம்பா
- குருவிக்கார்
- வரப்புக் குடைஞ்சான்
- குறுவைக் களஞ்சியம்
- கம்பஞ்சம்பா
- பொம்மி
- காலா நமக்
- திருப்பதிசாரம்
- அனந்தனூர் சன்னம்
- பிசினி
- வெள்ளைக் குருவிக்கார்
- விஷ்ணுபோகம்
- மொழிக்கருப்புச் சம்பா
- காட்டுச் சம்பா
- கருங்குறுவை
- தேங்காய்ப்பூச்சம்பா
- காட்டுக் குத்தாளம்
- சேலம் சம்பா
- பாசுமதி
- புழுதிச் சம்பா
- பால் குடவாழை
- வாசனை சீரகச்சம்பா
- கொசுவக் குத்தாளை
- இலுப்பைப்பூச்சம்பா
- துளசிவாச சீரகச்சம்பா
- சின்னப்பொன்னி
- வெள்ளைப்பொன்னி
- சிகப்புக் கவுனி
- கொட்டாரச் சம்பா
- சீரகச்சம்பா
- கைவிரச்சம்பா
- கந்தசாலா
- பனங்காட்டுக் குடவாழை
- சன்னச் சம்பா
- இறவைப் பாண்டி
- செம்பிளிச் சம்பா
- நவரா
- கருத்தக்கார்
- கிச்சிலிச் சம்பா
- கைவரச் சம்பா
- சேலம் சன்னா
- தூயமல்லி
- வாழைப்பூச் சம்பா
- ஆற்காடு கிச்சலி
- தங்கச்சம்பா
- நீலச்சம்பா
- மணல்வாரி
- கருடன் சம்பா
- கட்டைச் சம்பா
- ஆத்தூர் கிச்சிலி
- குந்தாவி
- சிகப்புக் குருவிக்கார்
- கூம்பாளை
- வல்லரகன்
- கௌனி
- பூவன் சம்பா
- முற்றின சன்னம்
- சண்டிக்கார் (சண்டிகார்)
- கருப்புக் கவுனி
- மாப்பிள்ளைச் சம்பா
- மடுமுழுங்கி
- ஒட்டடம்
- வாடன் சம்பா
- சம்பா மோசனம்
- கண்டவாரிச் சம்பா
- வெள்ளை மிளகுச் சம்பா
- காடைக் கழுத்தான்
- நீலஞ்சம்பா
- ஜவ்வாதுமலை நெல்
- வைகுண்டா
- கப்பக்கார்
- கலியன் சம்பா
- அடுக்கு நெல்
- செங்கார்
- ராஜமன்னார்
- முருகன் கார்
- சொர்ணவாரி
- சூரக்குறுவை
- வெள்ளைக் குடவாழை
- சூலக்குணுவை
- நொறுங்கன்
- பெருங்கார்
- பூம்பாளை
- வாலான்
- கொத்தமல்லிச் சம்பா
- சொர்ணமசூரி
- பயகுண்டா
- பச்சைப் பெருமாள்
- வசரமுண்டான்
- கோணக்குறுவை
- புழுதிக்கார்
- கருப்புப் பாசுமதி
- வீதிவடங்கான்
- கண்டசாலி
- அம்யோ மோகர்
- கொள்ளிக்கார்
- ராஜபோகம்
- செம்பினிப் பொன்னி
- பெரும் கூம்பாழை
- டெல்லி போகலு
- கச்சக் கூம்பாழை
- மதிமுனி
- கல்லுருண்டையான் (கல்லுருண்டை)
- ரசகடம்
- கம்பம் சம்பா
- கொச்சின் சம்பா
- செம்பாளை
- வெளியான்
- ராஜமுடி
- அறுபதாம் சம்பா
- காட்டு வாணிபம்
- சடைக்கார்
- சம்யா
- மரநெல்
- கல்லுண்டை
- செம்பினிப் பிரியன்
- காஷ்மீர் டால்
- கார் நெல்
- மொட்டக்கூர்
- ராமகல்லி
- ஜீரா
- சுடர்ஹால்
- பதரியா
- சுதர்
- திமாரி கமோடு
- ஜல்ஜிரா
- மல் காமோடு
- ரட்னசுடி
- ஹாலு உப்பலு
- சித்த சன்னா
- வரேடப்பன சேன்
- சிட்டிகா நெல்
- கரிகஜவலி
- கரிஜாடி
- சன்னக்கி நெல்
- கட்கா
- சிங்கினிகார்
- செம்பாலை
- மிளகி
- வால் சிவப்பு
உணவை வீணாக்காதீர்கள்
சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது அழுகுரல் ஒன்று கேட்டது, உற்று கவனித்தேன்..!
இலைக்கு வெளியே இரண்டு சோற்றுப் பருக்கைகள் இறைந்து கிடந்தன, அவைதாம்
அழுதுகொண்டிருந் தன."எதுக்கு இப்படி அழறீங்க" என்று கேட்டேன்?. அதில் ஒன்று கண்ணீரோடு தன் கதையைச் சொன்னது.
அழுதுகொண்டிருந் தன."எதுக்கு இப்படி அழறீங்க" என்று கேட்டேன்?. அதில் ஒன்று கண்ணீரோடு தன் கதையைச் சொன்னது.
"ஒரு ஏழை விவசாயி... கடனை உடனை வாங்கி விதை நெல் போட்டு, வயலை உழுது,
நாற்று நட்டு, களை பறித்து,பயிர் செய்து, நீர் பாய்ச்சி ரொம்ப கஷ்டப்பட்டு எங்களை வளர வைத்தார்.. நாங்களும் நல்லா வளர்ந்தோம், என்னோட சகோதர மணிகளில் சிலதை எலிகள் நாசம் செய்தன.. பறவைகள் கொத்தித் தின்றன.. தப்பிப் பிழைத்த நாங்கள் அறுவடைக்குத் தயாரானோம்.
நாற்று நட்டு, களை பறித்து,பயிர் செய்து, நீர் பாய்ச்சி ரொம்ப கஷ்டப்பட்டு எங்களை வளர வைத்தார்.. நாங்களும் நல்லா வளர்ந்தோம், என்னோட சகோதர மணிகளில் சிலதை எலிகள் நாசம் செய்தன.. பறவைகள் கொத்தித் தின்றன.. தப்பிப் பிழைத்த நாங்கள் அறுவடைக்குத் தயாரானோம்.
அறுத்து, களத்துக்கு கொண்டு வந்து, தூற்றி அதிலும் வீணாகிப்போன சகோதரமணிகள் தவிர்த்து பெரிய பெரிய பைகளில் எங்களை அடைத்து வைத்தார்கள்.
அப்புறம் நெல் மணிகளிலிருந்து உமி நீக்கி எங்களை அரிசியாக்கும் போது காணாமல் போன சகோதரமணிகள் நிறைய பேர். விற்பனைக்கு கடையில் வைத்திருக்கும் போது மூட்டைகளில் விழுந்த ஓட்டைகளில் சிலரும், எடை போட்ட போது கொஞ்சம் பேரும் வீட்டுக்கு நீங்கள் வாங்கி வந்த போது, அரிசி களைந்து சமைக்கும் போது என்று எல்லாவற்றிலும் தப்பிப் பிழைத்து உங்களுக்கு உணவாகி உங்கள் தட்டிற்கு வந்து சேர்ந்தேன். இத்தனை பேர் உழைப்பில் விளைந்த என்னை.. பல இடர்ப்பாடுகளை கடந்து வந்த என்னை.. இப்படி வீணாக்கினால் அழாமல் என்ன செய்ய?" என்றது.
உணவை வீணாக்காதீர்கள், தேவையில்லாத உணவுகளை வீனடிக்காமல் ஏழை எளிய மக்களுக்கு கொடுங்கள் அது கூட இல்லாமல் சிலர் இருக்கின்றனர்.
COURTESY: R.VASANTHAKUMAR, BT ASSISTANT [E], GHS, EDACHITHUR
Friday, 25 September 2015
அறிவோம் நம் மொழியை: ஒரு பொறி பெருந்தீ
நீர், ஒரு துளியிலிருந்து ஆரம்பித்து, தாரை, ஓடை, காட்டாறு, ஆறு, ஏரி, கடல் என்று வெவ்வேறு வடிவங்கள் எடுப்பதுபோல தீயும் வெவ்வேறு வடிவங்கள் எடுக்கின்றன. சொல்லப்போனால், பெருவெடிப்பு (பிக் பேங்) என்று அழைக்கப்படும் பிரபஞ்சத் தோற்றத்துக்குக் காரணமான நிகழ்வே தீயை அடிப்படையாகக் கொண்டதுதான். பிரபஞ்ச முடிவின்போது ஏற்படும் தீ எல்லாவற்றையும் அழித்துவிடும் என்பது புராணங்கள் அடிப்படையிலான நம்பிக்கை. அதற்கு ஊழித்தீ என்று பெயர்.
தீயின் மிகச் சிறு அவதாரம் பொறி. கரடுமுரடான இரண்டு பொருட்களுக்கிடையில் உராய்வு ஏற்படும்போது பொறி உண்டாகி, அந்தப் பொறி காட்டுத்தீ அளவுக்குப் பெருகுவதை ஆதி மனிதர்கள் கண்டார்கள். சிக்கிமுக்கிக் கல்லைக் கொண்டு பொறி உண்டாக்கி, தீ வளர்க்கும் வித்தையை அவர்கள் கண்டறிந்தார்கள். இதன் அடுத்தகட்ட வளர்ச்சி, ‘தீக்கடைதல்’, மத்தைக் கொண்டு தயிரைக் கடைவதுபோல் சிறு கோலைக் கொண்டு சிறு குழிக்குள் கடைந்து தீயை உண்டாக்குவதற்குப் பெயர்தான் தீக்கடைதல். இதற்குப் பயன்படும் கோலுக்கு ‘தீக்கடைக்கோல்’என்று பெயர். இதற்கு ‘அரணிக்கட்டை’ என்றொரு பெயரும் இருக்கிறது. தீக்கடைவதற்குப் பழந்தமிழில் ‘ஞெலிதல்’ என்றொரு சொல்லும் இருக்கிறது. இந்தச் சொல்லிலிருந்து உருவான ‘ஞெலிகோல்’, தீக்கடைக்கோலைக் குறிக்கும். ஞெகிழி, தீத்தருகோல் போன்ற சொற்களும் தீக்கடைக்கோலைக் குறிப்பவை. பெரும்பாலும், அரச மரம், வன்னி மரம் போன்றவற்றின் சிறு கட்டைகளே தீக்கடைவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இப்படியாக, ஒரு பொறியிலிருந்து தீ உருவாவதைப் போலச் சட்டென்று ஒரு புதிய எண்ணம், உத்தி போன்றவை தோன்று வதைக் குறிக்கும் மரபுத் தொடர்தான் ‘பொறி தட்டுதல்’ (அவரை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்துக்கொண்டிருந்தபோது எனக்குப் பொறிதட்டியது; ஆம், நான் படித்த பள்ளியின் வேதியியல் ஆசிரியர் அவர்.) சூடாக விவாதித்துக்கொண்டிருப்பதைப் ‘பொறி பறக்கப் பேசிக்கொண்டிருந்தார்கள்’ என்றும் சொல்வதுண்டு.
பொறிக்கு அடுத்தது ‘அக்னிக் குஞ்சு’. இந்தச் சொல்லை பாரதியாருக்கு முன்னும் பின்னும் பொதுவழக்காக யாரும் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. தற்காலத்தில் அந்தச் சொல்லைப் பயன்படுத்தும்போது பாரதியாரோடு (மறைமுகமாகவேனும்) தொடர்புபடுத்தியே பயன்படுத்துகிறோம்.
சுடர், சுவாலை, தீநாக்கு, பிழம்பு, தழல், கங்கு, கொள்ளி, காட்டுத்தீ என்று தான் பற்றிய பொருட்கள், தீவிரம் போன்றவற்றைச் சார்ந்து தீ பல வடிவங்களும் பெயர்களும் பெறுகிறது.
வட்டாரச் சொல் அறிவோம்
கடற்கரையைக் குறிக்கும் ‘அலைவாய்க்கரை’ என்ற சொல் தென் தமிழகத்தின் கடலோர மக்களிடையே வழக்கில் உள்ளது. இந்தச் சொல் இலங்கைத் தமிழிலும் இருப்பதாக அறிகிறோம். பேச்சு வழக்கில் ‘அலவாக்கரை’ என்பார்கள். முருகனின் அறுபடை வீடுகளில் கடலோரத்தில் இருக்கும் திருச்செந்தூருக்கு ‘திருச்சீரலைவாய்’ என்றொரு பெயரும் இருப்பது குறிப்பிடத் தக்கது.
Subscribe to:
Posts (Atom)