Saturday, 26 September 2015

பாரம்பரிய நெல்

பாரம்பரிய நெல்


செய்தியும்,படமும்: திரு.பெ.வடிவேலு, மாவட்டக்கல்வி அலுவலர் [ஓய்வு], மழவந்தாங்கல், விழுப்புரம் மாவட்டம்.

பாரம்பரிய நெல் விதைகள் பழைமையான நெல் விதை ரகங்களைக் குறிக்கும். இந்தியாவில் 200000 மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளதாக அறியப்படுகிறது. இந்தியாவில் பசுமைப்புரட்சியின் விளைவாக பல பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்து பட்டன.
1959 ஆம் ஆண்டு இந்தியாவின் கட்டக் பகுதியில் அமைந்திருந்த மைய அரிசி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் ஆர்.எச். ரிச்சாரியா, இந்தியாவிற்கு அதிக விளைச்சல் தரும் பாரம்பரிய விதை நெல் வகைகளை சேகரித்து அவற்றை பயன்படுத்துவதே உகந்தது என்றும் நவீன ஐ.ஆர்.ஆர் ரக வீரிய நெல் விதைகள் நோய் பரப்பக்கூடியவை என்றும் எடுத்துக்கூறி நவீன ரகத்திற்கு அனுமதி மறுத்து அதன் விளைவாக மாற்றம் செய்யப்பட்டு,பிற்காலத்தில் நோயுற்று வறுமையில் வாடி இறந்தார்.
பின்னர் அப்பதவிக்கு வந்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் மற்றும் மற்ற இயக்குநர்களாலும் டாக்டர் ஆர்.எச். ரிச்சாரியா சேகரித்திருந்த பாரம்பரிய ரக விதைநெல்கள் காணாமல் போனதைப்பற்றிக் கூற இயலவில்லை.டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் காலத்தில் சிறப்பு பெற்ற பசுமைப்புரட்சியில் அதிக விளைச்சல் தரும் நவீன ரகங்கள் முக்கியத்துவம் தரப்பட்டு, பாரம்பரிய நெல் விதைகள் இந்தியாவில் மறையத்தொடங்கின.
விவசாயிகளிடையே பாரம்பரிய நெல் விதைகளை விற்பனைக்கு அரசு கொணர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
பசுமைப் புரட்சியின் விளைவாக நெல் உற்பத்தி பெருகியபொழுதும் பல ஆண்டுகளுக்குப் பின்னரே ரசாயன உரத்தால் ஏற்பட்ட பின்விளைவுகள் பயன்படுத்துவோரிடம் ஏற்படுவது உணரப்பட்டது.இதனால் இயற்கை விவசாயத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை தந்து உடல்நலம் பேணும் செயலில் பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாக்க முயற்சிகள் செய்யப்படுகின்றன. இந்தியாவெங்கும் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கும் முயற்சி தனிநபர்கள் அல்லது அமைப்புகள் மூலம் செய்யப்படுகின்றது

பாதுகாக்கும் முன்னெடுப்புகள், அமைப்புகள், நடவடிக்கைகள்



  • நமது நெல்லைக் காப்போம் அமைப்பு பாரம்பரிய நெல் வகைகள் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 2006 லிருந்து ஆண்டு தோறும் மே கடைசி வாரத்தில் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 18 ஆயிரம் விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் வகைகளை விநியோகித்துள்ளார்கள் என அறியப்படுகிறது
  • நட்வர் சாரங்கி (77 வயது) எனும் ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தின் நரிசு கிராமத்தின் ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியர் சுமார் 400 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு, பாதுகாத்துள்ளார்.இவை விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.தமிழ்நாடு மற்றும் கேரளா விவசாயிகள் இவரிடம் இருந்து மருத்துவ குணம் கொண்ட நெல் ரகங்களைப்பெறுகின்றனர்.
  • உளுந்தூர்பேட்டை, ஸ்ரீசாரதா ஆசிரமம், ‘அக்ஷய க்ருஷி கேந்திரா’ (வேளாண்மை மையம்) பாரம்பரிய நெல் வகைகளில் 150 வகைகளை சேகரித்து, விழுப்புரம் மாவட்டத்து விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைநெல் இலவசமாக வழங்கிப் பயிரிட ஊக்குவிப்பதன் மூலமாகவும் பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாத்து வருகின்றது. இதன் மூலம் பாரம்பரிய நெற்பயிரை 120 கிராமங்களைச் சேர்ந்த 1,500 பெண்விவசாயிகள் பயிரிட்டு பலனடைந்துள்ளனர்
  • கர்நாடகத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ஸ்ரீனிவாசமூர்த்தி, இயற்கை விவசாய முறையின் உதவியுடன் பாரம்பரியமான 200 நெல் வகைகளைப் புதுப்பித்துள்ளார்.
  • புதுக்கோட்டைப் பகுதியில் வறட்சி மற்றும் நோய்த்தாக்குதலைத் தாக்குபிடிக்கும் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் பணியில் புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் 24 வகையான பாரம்பரியமான நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளனர்.
  • காஞ்சிபுரம் மாவட்டம் செங்கற்பட்டு பகுதியைச் சேர்ந்த முகுந்தன், அரியன்னூர் ஜெயச்சந்திரன், திருவண்ணாமலை கலசப்பாக்கம் மீனாட்சி சுந்தரம் முதலானோர் கிச்சலிச்சம்பா, பெருங்கார் சீரகச்சம்பா ஆகிய பாரம்பரிய நெல் வகைகளைக் காப்பாற்றியுள்ளனர்
  • இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம் தொண்டு நிறுவனம் நூற்றுக்கணக்கான அரிய பாரம்பரிய விதை நெல் கொண்ட விதை வங்கியை சீர்காழியில் அமைத்துள்ளது
  • ஒடியாவில் இருந்து பெற்ற நெல் விதை உதவியோடு தஞ்சையில் விதை வங்கியை மாரியம்மன் கோயில் கோ.சித்தர் அமைத்துள்ளார்.

தமிழ்நாடு வேளாண் பல்கழைக்கழகம்

பாரம்பரிய நெற்பயிர்களில் எந்த பயிர் எந்த பகுதியில் செழித்து வளரும் என்பது போன்ற தகவல்களை தமிழ்நாடு வேளாண் பல்கழைக் கழகம் தருகின்றது

சிறப்புகள்

மருத்துவ குணங்கள்

பாரம்பரிய நெல் ரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவக் குணம் கொண்டவையாகவும், பொதுவாக அனைத்துமே எளிதில் சீரணமாகக்கூடியவையாகவும் மலச்சிக்கலை நீக்கும் தன்மை மற்றும் நரம்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டவையாகவும் அறியப்படுகின்றன

பன்னோக்கு பயன்

நவீன ரக நெற்பயிர்கள் குறைவான உயரமே வளரக்கூடிய குட்டை ரகத்தைச் சேர்ந்தவை. ஆனால் பாரம்பரிய நெல் ரகங்கள் நீளமாக வளரக்கூடியவை. மாட்டுக்கு வைக்கோல், மண்ணுக்குத் தழைச்சத்து, விவசாயிக்கு நெல் என பன்னோக்கில் பயன் தரக்கூடியவையாக பாரம்பரிய நெல் ரகங்கள் அமைகின்றன.

வைக்கோல்

நவீன ரக நெற்பயிரின் வைக்கோலில் சத்து இல்லாததால் வைக்கோலை உண்ணும் பசுக்களுக்கு பால் அதிகம் சுரப்பதில்லை. இந்தக் குறைபாடுகள் பாரம்பரிய நெற்பயிரின் வைக்கோலை ஏற்படாது.

இலங்கையில்

இலங்கையில் மிகக் குறைந்த அளவில் பாரம்பரிய நெல் வருக்கங்கள் இன்னும் பயிர்செய்யப்படுகின்றன. இவற்றில் சீனட்டி நெல் முக்கியமானது. இது சிவப்பு, வெள்ளை இரு வலையிலும் காணப்படுகின்றது. மறைந்த பாரம்பரிய வருக்கங்களாக முருங்கக்காயன், பச்சைப் பெருமாள், இளங்கலையன்,முல்லை நெல், மணல்வாரி முதலானவற்றைக் கூறலாம்இலங்கை குருநாகல் மாவட்டத்தில் பாரம்பரிய நெற்பயிர்களை பயிரிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

பாரம்பரிய நெல் வகைகள்

  1. அன்னமழகி
  2. அறுபதாங்குறுவை
  3. பூங்கார்
  4. கேரளா ரகம்
  5. குழியடிச்சான் (குழி வெடிச்சான்)
  6. குள்ளங்கார்
  7. மைசூர்மல்லி
  8. குடவாழை
  9. காட்டுயானம்
  10. காட்டுப்பொன்னி
  11. வெள்ளைக்கார்
  12. மஞ்சள் பொன்னி
  13. கருப்புச் சீரகச்சம்பா
  14. கட்டிச்சம்பா
  15. குருவிக்கார்
  16. வரப்புக் குடைஞ்சான்
  17. குறுவைக் களஞ்சியம்
  18. கம்பஞ்சம்பா
  19. பொம்மி
  20. காலா நமக்
  21. திருப்பதிசாரம்
  22. அனந்தனூர் சன்னம்
  23. பிசினி
  24. வெள்ளைக் குருவிக்கார்
  25. விஷ்ணுபோகம்
  26. மொழிக்கருப்புச் சம்பா
  27. காட்டுச் சம்பா
  28. கருங்குறுவை
  29. தேங்காய்ப்பூச்சம்பா
  30. காட்டுக் குத்தாளம்
  31. சேலம் சம்பா
  32. பாசுமதி
  33. புழுதிச் சம்பா
  34. பால் குடவாழை
  35. வாசனை சீரகச்சம்பா
  36. கொசுவக் குத்தாளை
  37. இலுப்பைப்பூச்சம்பா
  38. துளசிவாச சீரகச்சம்பா
  39. சின்னப்பொன்னி
  40. வெள்ளைப்பொன்னி
  41. சிகப்புக் கவுனி
  42. கொட்டாரச் சம்பா
  43. சீரகச்சம்பா
  44. கைவிரச்சம்பா
  45. கந்தசாலா
  46. பனங்காட்டுக் குடவாழை
  47. சன்னச் சம்பா
  48. இறவைப் பாண்டி
  49. செம்பிளிச் சம்பா
  50. நவரா
  51. கருத்தக்கார்
  52. கிச்சிலிச் சம்பா
  53. கைவரச் சம்பா
  54. சேலம் சன்னா
  55. தூயமல்லி
  56. வாழைப்பூச் சம்பா
  57. ஆற்காடு கிச்சலி
  58. தங்கச்சம்பா
  59. நீலச்சம்பா
  60. மணல்வாரி
  61. கருடன் சம்பா
  62. கட்டைச் சம்பா
  63. ஆத்தூர் கிச்சிலி
  64. குந்தாவி
  65. சிகப்புக் குருவிக்கார்
  66. கூம்பாளை
  67. வல்லரகன்
  68. கௌனி
  69. பூவன் சம்பா
  70. முற்றின சன்னம்
  71. சண்டிக்கார் (சண்டிகார்)
  72. கருப்புக் கவுனி
  73. மாப்பிள்ளைச் சம்பா
  74. மடுமுழுங்கி
  75. ஒட்டடம்
  76. வாடன் சம்பா
  77. சம்பா மோசனம்
  78. கண்டவாரிச் சம்பா
  79. வெள்ளை மிளகுச் சம்பா
  80. காடைக் கழுத்தான்
  81. நீலஞ்சம்பா
  82. ஜவ்வாதுமலை நெல்
  83. வைகுண்டா
  84. கப்பக்கார்
  85. கலியன் சம்பா
  86. அடுக்கு நெல்
  87. செங்கார்
  88. ராஜமன்னார்
  89. முருகன் கார்
  90. சொர்ணவாரி
  91. சூரக்குறுவை
  92. வெள்ளைக் குடவாழை
  93. சூலக்குணுவை
  94. நொறுங்கன்
  95. பெருங்கார்
  96. பூம்பாளை
  97. வாலான்
  98. கொத்தமல்லிச் சம்பா
  99. சொர்ணமசூரி
  100. பயகுண்டா
  101. பச்சைப் பெருமாள்
  102. வசரமுண்டான்
  103. கோணக்குறுவை
  104. புழுதிக்கார்
  105. கருப்புப் பாசுமதி
  106. வீதிவடங்கான்
  107. கண்டசாலி
  108. அம்யோ மோகர்
  109. கொள்ளிக்கார்
  110. ராஜபோகம்
  111. செம்பினிப் பொன்னி
  112. பெரும் கூம்பாழை
  113. டெல்லி போகலு
  114. கச்சக் கூம்பாழை
  115. மதிமுனி
  116. கல்லுருண்டையான் (கல்லுருண்டை)
  117. ரசகடம்
  118. கம்பம் சம்பா
  119. கொச்சின் சம்பா
  120. செம்பாளை
  121. வெளியான்
  122. ராஜமுடி
  123. அறுபதாம் சம்பா
  124. காட்டு வாணிபம்
  125. சடைக்கார்
  126. சம்யா
  127. மரநெல்
  128. கல்லுண்டை
  129. செம்பினிப் பிரியன்
  130. காஷ்மீர் டால்
  131. கார் நெல்
  132. மொட்டக்கூர்
  133. ராமகல்லி
  134. ஜீரா
  135. சுடர்ஹால்
  136. பதரியா
  137. சுதர்
  138. திமாரி கமோடு
  139. ஜல்ஜிரா
  140. மல் காமோடு
  141. ரட்னசுடி
  142. ஹாலு உப்பலு
  143. சித்த சன்னா
  144. வரேடப்பன சேன்
  145. சிட்டிகா நெல்
  146. கரிகஜவலி
  147. கரிஜாடி
  148. சன்னக்கி நெல்
  149. கட்கா
  150. சிங்கினிகார்
  151. செம்பாலை
  152. மிளகி
  153. வால் சிவப்பு