கணித மேதை
வடிவியலின் தந்தை – யூக்ளிட்
கிரேக்க நாட்டின் அலெக்சாந்திரியாவைச்சேர்ந்த யூக்ளிட் (Euclid, Εὐκλείδης) என்பார் கி.மு. 325 முதல் கி.மு. 265 வரை வாழ்ந்தவர் என அறிஞர்கள் கருதுகின்றனர். இவருடைய வடிவவியல் நூலாகிய எலிமென்ட்ஸ் (Elements) என்பது 2200 ஆண்டுகளுக்கும் மேலாக மாந்த இனத்தை பெருமளவு சிந்திக்க வைத்த பெரும் நூலாகும். இதில் 13 பெரும் பாகங்கள் (உள் நூல்கள்) உள்ளன. இவருடைய வடிவவியல் நூலின் வழி முதற்கோளாக(axiom) சில கருத்துக்களைக் கொண்டு முறைப்படி நிறுவும் (prove) கணிதவியலை தோற்றுவித்தார் என்று சொல்லலாம். இவருடைய எலிமென்ட்ஸ் என்னும் நூலில் வடிவவியல் மட்டும் இன்றி எண்கணிதத்திலும் பல அருமையான முடிவுகளை கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக நூல் 10ல் 20ஆவது முன் வைப்பில் பகா எண்கள் எண்ணிக்கையில் அடங்காதவை என்று நிறுவியுள்ளார்.
Source: Wikipedia