Tuesday 29 September 2015

கணங்கள்

9-ஆம் வகுப்பு கணக்கு, கணங்கள் பாடப்பகுதி செயல்பாடு.

இரத்தின புகழேந்தி , அரசு உயர்நிலைப்பள்ளி, மன்னம்பாடி.
கணங்கள் என்ற பாடப்பகுதி மாணவர்கள் 9 ஆம் வகுப்பில் புதிதாகப் படிப்பதால் சற்று கடினமாக உணருவார்கள். எனவே சிறு சிறு செயல்பாடுகள் கொடுத்து செயல்வழியாக செய்து பார்ப்பதன்மூலம் அதனை எளிதாக்கலாம்.
A’∩B, A∩B மற்றும் A∩B’ ஆகியவற்றை வென் படத்தில் குறித்து, இவற்றின் சேர்ப்புகணத்தைக்காண்பதற்கான செயல்பாட்டினை படத்தில் உள்ளதுபோல் செய்யலாம்.
வென்படம் வரைவது மாணவர்களுக்கு கடினமாக உள்ளது. அதனை சற்று எளிமைப் படுத்த இச்செயல்பாடு உதவும். A, B என இரு வட்டங்கள் உள்ளன. அவற்றுள் எந்த வட்டத்தில் வண்ணம் தீட்டினால் அது A’ என்பதைக்குறிக்கும் என்று விளக்கிட கையிலுள்ள வட்ட வடிவ வட்டினை A என்ற வட்டத்தின் மீது வைத்து மறைத்துவிட்டு இப்போது எஞ்சியுள்ள B என்ற வட்டத்தினுள் வண்ணம் தீட்ட வேண்டும். இதுவே A’∩B என்பதற்கான வென்படம் என்பதை மாணவர்களுக்கு விளக்க வேண்டும். இதுபோலவே மற்ற இரு கணங்களுக்கும் வென் படங்களை வரையச்செய்து அதன் பிறகு மூன்றின் சேர்ப்புக்கணத்திற்கான வென் படத்தை ( A’∩B) U ( A∩B) U ( A∩B’ ) என்று வரையும்படி கூறவேண்டும். அவர்களின் படங்களின் தன்மைக்கேற்ப மதிப்பீடு அளிக்கலாம்.

9 SET P1050333