Thursday, 24 September 2015

விலங்கியல்

விலங்கியல்

வகைப்பாட்டியல்


   அவசியம்
  1. அறிவியல் அறிஞர்களுக்கு தாவர,விலங்குகளைப் பற்றி முறையாக அறிவதற்கு வகைப்பாட்டியல் உதவுகிறது
  2. விலங்கினங்களைக் குழப்பமில்லாமல் இனம் கண்டறிவதற்கு உதவுகிறது
  3. வெவ்வேறு வகை விலகினங்களுடைய  ஒற்றுமை,வேற்றுமைகள்,தொடர்புகள் மற்றும் புவியியல் பரவல் பற்றி நாம் அறிவதற்கு உதவுகிறது 
  4. குறிப்பிட்ட விலங்குகளின் செயல்பாடு பற்றி உயிரியல் அறிஞர்கள் அறிந்து கொள்ள பயன்படுகிறது
  5. பொருளாதார,மருத்துவ முக்கியதுவம் வாய்ந்த உயிரினங்கள் பற்றி அறிய உதவுகின்றது
  6. உயிரிகளின் தோற்றம் பற்றிய தகவல்களை அறியவும் பரிணாமம் பற்றி புரிந்துகொள்வதற்கும் வகைபாட்டியல் பயன்படுகிறது         
வகைபாட்டியலின் முறைகள்

                  வகைப்பாட்டியலை மிகச்சரியாகவோ மிகப் புதியதாகவோ அமைக்க நம்மால் இயலாது. எனெனில் ஒவ்வொரு நாளும் புதிய உயிரினங்கள் தோன்றியக் கொண்டேயுள்ளன. லின்னேயஸ் நாமறிந்த உயிரினங்ளை வகைப்படுத்தி அதன் நிலையில் வைக்க ஆரம்ப ,நடுத்தர முறைகளை அமைத்தார்.ஆரம்ப முறைகளாவது உலகம்,தொகுதி,வகை,வரிசை,குடும்பம்,பேரினம்,சிற்றினம் ஆகும்.நாடுத்தர நிலைகளாவன துணைத் தொகுதி, துணைவகை,துணைவரிசை,துணைகுடும்பம் போன்றவையாகும். இது குறிப்பிட்ட தேவைகளுக்காகவே பின்பற்றபடுகிறது.வகைபாட்டியல் என்பது உயிரியின் நிலையினை இறங்கு வரிசையில் கீழ்கண்டவாறு பயன்படுத்துவதாகும்

                       உலகம்
                          தொகுதி
                                வகை
                                   வரிசை
                                       குடும்பம்
                                          பேரினம்
                                               சிற்றினம்
                                                                                                               
                                                                                  ஒரு சிற்றினம் என்பது ஒரு குறிபிட்ட விலங்குக் குழு தமது உட்புற,வெளிப்புறத் தோற்றத்தில் ஒத்தும்,தமக்குள் இனப்பெருக்கம் செய்யக்கூடினவாகவும் காணப்படுகிறது.இவை ஒரே எண்ணிக்கையுடைய குரோமோசோம்களைப் பெற்றுள்ளன.சிற்றினத்தின் பெயரைஎழுதும் பொழுது முதலெழுத்து சிறிய எழுத்தாக அமைதல் அவசியமாகும்
பேரினம் என்பது ஒரே மாதிரியான தோற்றமுள்ள , தொடர்புடைய பண்புகளையும் கொண்ட உயிரினங்கள் ஆகும்  

பெயரிடுதல் முறையும் விதிகளும் 

 
உயிரினங்கள் ஒரு குறிபிட்ட பகுதியில் மட்டுமல்லாமல்உலகம் முழுவதும் பரவியிருக்கின்றனஉலகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு மொழிகளை பேசுகின்றனர்விலங்கினை உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு  பெயர்களில் அழைக்கின்றனர்.இக்குழப்பங்களை தவிர்க்க விலங்குகளை ஒரு பொதுவான பெயரிட அவசியம் உண்டானது.  
  
ஒவ்வொறு உயிரினமும் லத்தீன் மொழியில் இரு பெயர்களை கொண்டதாக அமைந்துள்ளதுஇதில் முதல் பெயர் பேரினத்தையும்,இரண்டாவது பெயர் சிற்றினத்தையும் குறிப்பிடுவதாகும்.

          இருபெயரிடுமுறை என்பது பேரினத்தை முதற்பெயராகவும் , 

சிற்றினத்தை இரண்டாவது பெயராகவும் கொண்டு ஒரு 

விலங்கினையோ அல்லது ஒரு தாவரத்தையோ அழைக்கப்படும் 

முறையாகும்.இருபெயரிடு முறையில் அனைத்து 

உயிரினங்களையும் அழைக்கும் முறை கார்ல் லின்னேயஸ் என்ற 

ஆய்வாளரால் ஜெனிரா பிளாண்டேரம் , ஸ்பீசிஸ் பிளாண்டேரம் 

என்ற நூல்களில் முதன் முதலில் செயல்படுத்தப்பட்டது.

(எ.கா) 

வீட்டு ஈ –இதன் விலங்கியல் பெயர் மஸ்கா டொமஸ்டிகா. 

இதில் மஸ்கா என்பது பேரினத்தையும், டொமஸ்டிகா 

என்பது சிற்றினத்தையும் குறிக்கிறது
 
 
சில பொதுவான விலங்குகளின் விலங்கியல் பெயர்கள்

வ.எண்
பொதுப்பெயர்
விலங்கியல் பெயர்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
மலேரிய ஒட்டுண்ணி
செருப்புயிரி
ஜெல்லி மீன்
கல்லீரல் புழு
மண் புழு
அட்டை
கடல் இறல்
கொசு
நட்சத்திர மீன்
சுறா மீன்
தேரை
பல்லி
நாகப்பாம்பு
புறா
மயில்
குரங்கு
இந்திய யானை
இந்திய சிங்கம்
இந்திய புலி
வீட்டு பூனை
திமிங்கலம்
மனிதன்
பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
பரமேசியம் காடேட்டம்
ஆரிலியா ஆரிட்டா
ஃபேசியோலா ஹிபாடிகா
ஃப்ரெட்டிமா போஸ்துமா
ஹிருடினேரியா க்ரேனுலோசா
பீனேயஸ் இன்டிகஸ்
அனோஃபீலஸ் குலிசிபேரஸ்
ஆஸ்டிரியாஸ் ரூபன்ஸ்
ஸ்கோலியோடான்
பஃபோ மெலனாஸ்டிகஸ்
ஹெமிடாக்டைலஸ் புரூக்கி
நாஜாநாஜா
கொலம்பா லிவியா
பாவோ கிரிஸ்டேடஸ்
பிரிஸ்பைடிஸ் என்டெலஸ்
எலிபஸ் மேக்ஸிமஸ்
பாந்திரா லியோ
பாந்திரா டைக்ரிஸ்
ஃபெலிஸ் டொமஸ்டிகா
பேலனோப்டிராமஸ்குலஸ்
ஹோமோசேப்பியன்ஸ்


தொகுப்பு: திருமதி. திலகவதி செல்வராஜ், 
பட்டதாரியாசிரியர், 
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பரவளூர்