Tuesday, 1 September 2015

10-ஆம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு: மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் விநியோகம்


பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான 
மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் விநியோகம் 
செய்யப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.  
இதுதொடர்பாக அந்த இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:



பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள்
 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ஜூலை 24 முதல் 
இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் 
என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மாணவர்கள் தங்களுக்கான மதிப்பெண் 
சான்றிதழ்களை செப்டம்பர் 2 முதல் 9-ஆம் தேதி வரை தேர்வு 
மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

அதன் பிறகு, அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் 
அலுவலகங்களில் இந்தச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள 
வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.