Sunday, 13 September 2015

அறிவியல்

அறிவியல் செய்திகள்

1.பூமியைப் போன்று புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது


கெப்ளர் விண் தொலைநோக்கி மூலம் பூமியைப் போன்று புதிய கோளை கண்டறிந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்புதிய கோளுக்கு ‘கெப்ளர் 452பி’ என நாசா விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது 6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியுள்ளது மற்றும் சூரியனை விட 1.5 ஆண்டுகள் பழமையானது. மேலும், பூமியின் சுற்றளவை விட 60% பெரியது. பூமியிலிருந்து 1,400 ஒளி ஆண்டுகள் தொலைவில் சிக்னஸ்(Cygnus) நட்சத்திரக் கூட்டத்தில் இது அமைந்துள்ளது. இதுவரை இந்த தொலைநோக்கி மொத்தம் 1030 புதிய கிரகங்களை கண்டறிந்து உறுதிபடுத்தியுள்ளது. கெப்ளர் 452பி பூமியை விட 5% பெரியதாகும், அதனால் அது சுற்றுப்பாதையில் சுற்றிவர 385 நாட்கள் ஆகும். இக்கிரகத்தில் பூமியின் வெப்பநிலையே நிலவுகிறது, மேலும் பூமியை விட 20% வெளிச்சம் கொண்டது மற்றும் அதன் விட்டம் 10% பெரியதாகும். பூமியைப் போலவே இந்த கெப்ளர் 452பி இல் பாறைகள் மற்றும் தண்ணீர் உள்ளது.

2.கேன்சரை குணப்படுத்தும் மருந்து

லண்டன்: அமெரிக்காவின் ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், ஐந்து கண்டங்களில் (வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா) உள்ள கடற்கரை, மழைக்காடுகள் மற்றும் பாலைவனங்களில் சேகரிக்கப்பட்ட 185 மண் மாதிரிகளை வைத்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வில், இதுவரை அறியப்படாத ஆன்டிபயாடிக் மற்றும் கேன்சரை குணப்படுத்தும் மருந்துகளை மண்ணிலிருக்கும் நுண்ணுயிரிகளிலிருந்தே கண்டுபிடிக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து குகைகள், வெப்ப நீரூற்றுகள், தீவுகள் மற்றும் நகர பூங்காக்கள் போன்ற தனித்த சுற்றுச்சூழலில் உள்ள மாதிரிகளையும் சேகரிக்க விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். சுற்றுச்சூழலிருந்து கிடைத்த பாக்டீரியாக்கள் திகைப்பூட்டும் பல புதிய மூலக்கூறுகளை உலகிற்கு வழங்கியது. அதில் பல மூலக்கூறுகள் புதிய மருந்துகள் உருவாக காரணமாக அமைந்தது. இந்த நம்பமுடியாத பன்முகத்தன்மையே நுண்ணுயிரிகள் மூலம் ரசாயன உற்பத்தி செய்யும் நமது கனவுக்கான முதல் படி என்று ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தின் சீன் பிராடி கூறினார்.