சென்னையில் 3 நாள் மழை நீடிக்கும்:
வானிலை மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலைகள் காரணமாக கடற்கரையோர மாவட்டங்களான திருவள்ளூர்,கடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள டெல்டா மாவட்டங்களிலும், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் தரைக்காற்று வேகமாக வீசக் கூடும். மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மேலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும். சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும். அவ்வப்போது மிகக் கனமழை பெய்யும். தமிழகத்தில் பரவலாக அடுத்த 3 நாட்கள் முதல் 4 நாட்கள் வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறையும் என்கிறது நார்வே வானிலை இலாகா!
சென்னை: நார்வே அரசின் வானிலை இலாகா வெப்சைட்டில், அனிமேஷனுடன் கூடிய வானிலை அறிக்கை இடம் பெற்றுள்ளது.
அதில் நாளை முதல் சென்னையில் மழை குறைய தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.