கனமழை பெய்ததாலும், மழை வெள்ளத்தாலும் சென்னை முடங்கிப் போனது. ஆவின் பால் விநியோகிக்கும் வாகனங்கள் குறிப்பிட்ட டிப்போக்கள், உரிய இடங்களுக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

ஆவின் பால் விநியோகத்துக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிகம் சிரமப்பட்டனர். இந்நிலையில், தமிழக அரசு ஆவின் பால் விநியோகம் விரைவில் சீராகும் என்று அறிவித்தது.

தற்போதைய நிலையை அறியும் நோக்கத்துடன் ஆவின் நிறுவன அதிகாரியை தொடர்பு கொண்டு பேசினோம்.

இது தொடர்பாக ஆவின் நிறுவன அதிகாரி கூறுகையில், ''அண்ணா நகர், விருகம்பாக்கம், நந்தனம், எழிலகம், அடையாறு, குறளகம், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆவின் பால் வட்டார அலுவலகங்களில் பால் பாக்கெட்டுகள் எம்.ஆர்.பி. விலைக்கு வழங்கப்பட்டு வருகின்றன'' என்றார்.

மேலும், சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும் இடங்களையும் பட்டியலிட்டார். அவை

*அண்ணா சாலை: 151, அகர்சந்த் மேன்ஷன், குயின்மேரீஸ் கல்லூரிக்கு எதிர்ப்புறம்.
* அயனாவரம்: 359, கொன்னூர் நெடுஞ்சாலை.
* மயிலாப்பூர்: வீட்டு வசதி வாரிய அலுவலகம், மந்தைவெளி.
* ஆழ்வார் பேட்டை: 77, சி.பி. ராமசாமி சாலை, வணிக வளாகம்.
* பெரம்பூர்: 88,89 பெரம்பூர் நெடுங்சாலை, பெரம்பூர் ரயில் நிலையம் எதிரில்.
* தி நகர்: முத்துராமலிங்கம் சாலை, 21, லாயிட்ஸ் காலனி.
* வண்ணாரப் பேட்டை: 243, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார் பேட்டை.
* தாம்பரம்: 224 A, வேளச்சேரி மெயின் ரோடு, சேலையூர்.
* பல்லாவரம்: 6, சாவடித்தெரு,
* வேளச்சேரி: தண்டீஸ்வரம் மெயின்ரோடு