கடலூர் மாவட்டம் RMSA சார்பில் 16.12.2015 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற 'மாற்றுத்திறனாளி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி' மாவட்டக்கல்வி அலுவர் திருமதி.கோமதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இப் பேரணியினைத் தொடர்ந்து 'SMDC' உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. இப் பயிற்சி RMSA திட்ட ADPC திரு.சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.ராஜேந்திரன் மற்றும் RMSA திட்ட விருத்தாசலம் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ராஜசேகர் ஆகியோர் செய்திருந்தனர். இப் பயிற்சியில் விருத்தாசலம், கம்மாபுரம், நல்லூர் மற்றும் மங்களூர் வட்டார உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்றனர்.