Monday, 7 December 2015

சென்னைவாசிகள் இலவசமாக மாற்று பாஸ்போர்ட் பெற ஏற்பாடு: வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு

சுஷ்மா ஸ்வராஜ். | கோப்புப்படம்: பிடிஐ.

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் தங்கள் பாஸ்போர்ட் ஆவணத்தை இழந்தவர்களுக்கு இலவசமாக மாற்று பாஸ்போர்ட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்கள் பாஸ்போர்ட் காணாமல் போயிருந்தாலோ அல்லது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலோ சென்னையில் உள்ள 3 பாஸ்போர்ட் சேவா மையங்களில் ஏதேனும் ஒன்றை அணுகி மாற்று பாஸ்போர்ட்டை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
அதற்கான உரிய ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது.
மேலும், வெளியுறவு இணை அமைச்சர் வி,கே,சிங்கிடம் பாஸ்போர்ட் தொடர்பான பிரச்சினைகளை கவனித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.