வகுப்பை கலாய்த்த புத்திசாலி மாணவர்கள்
அந்தச் சிறுவன் அப்போது தமிழ் மீடியதிலிருந்து ஆங்கில மீடியப் பள்ளியில் சேர்ந்தான். அவனுக்கு இப்பள்ளியின் புதிய சூழல் முற்றிலும் புதிதாய் இருந்தது.
ஆங்கில வகுப்பு நடந்துக் கொண்டிருந்தது. சிறுவனின் பின்புலம் அறிந்த ஆசிரியர் அவனிடம் ஒரு கேள்வி கேட்டார்.
' I ' என்றால் என்ன? ' YOU ' என்றால் என்ன?
சிறுவன் உடனே சொன்னான். 'I' என்றால் நீங்கள் . 'YOU' என்றால் நான்!.
வகுப்பறையில் இருந்த அத்தனை மாணவர்களும் சிரித்தார்கள். ஆசிரியர் அவனை கோபமாக பார்த்தார். ஆங்கிலப் பள்ளியில் படித்துக்கொண்டு இது கூட தெரியாமல் இருப்பதா?
முட்டாள் 'I' என்றால் நான் என்று அர்த்தம். 'YOU' என்றால் நீ என்று அர்த்தம். இது கூட தெரியாமல் இந்தப் பள்ளியில் படித்து என்ன செய்யப் போகிறாய். உன்னால் இந்தப் பள்ளிக்குத்தான் அவமானம் என்றார்.
சிறுவன் அழவில்லை. அவமானமாக உணரவில்லை. சில நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு ஆசிரியரைப் பார்த்துப் பேசினான்.
ஐயா ஒரு நிமிடம். நான் சொன்னது சரி என்று இப்போதும் கூறுகிறேன். 'I' என்றால் நான் என்று தானே அர்த்தம். 'I' என்று உங்களைத்தானே காண்பித்துக் கொண்டீர்கள், அதனால் நீங்கள் என்று அதற்கு அர்த்தம் சொன்னேன். 'YOU' என்றால் நீ என்று தானே அர்த்தம். அதை நீங்கள் கேட்டதால் நான் என்று சொன்னேன்.
வகுப்பறை சில நிமிடம் மெளனமாக இருந்தது. பிறகு, ஆரவாரம் தான்.
ஆசிரியர் சொன்னார். உனக்கு தெரியும் நீ தவறாகவே சொல்லியிருக்கிறாய் என்று, ஆனால் நீ பின்வாங்க தயாராகவில்லை. நீ சொன்னதை சரியென்றும் கூறலாம். அப்படி ஒரு சந்தர்ப்பம் இருப்பதை தெரிந்துக்கொண்டு சரியாகப் பயன்படுதினாய் அல்லவா? அதற்குத்தான் இந்தப் பாராட்டு. தோல்வி என்று உணராமல் அதற்காக தலை குனியாமல் தைரியமாகப் போராடினாய். அதற்குப் பாராட்டுக்கள் .