சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏழு மண்டல வானிலை ஆய்வு மையங்களில் ஒன்று. தென்னிந்திய தீபகற்பத்தைச் சேர்ந்த ஆந்திரப் பிரதேசம், கருநாடகம், கேரளம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களிலும், இலட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும்வானிலை சம்மந்தப்பட்ட செயற்பாடுகளை இது கவனித்து கொள்கிறது.
மற்ற மண்டலமையங்களின்தலைமையகம் கொல்கத்தா, குவஹாத்தி, மும்பை, நாக்பூர்,மச்சிலிப்பட்டணம் மற்றும் புது தில்லியில் உள்ளன.
18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட சென்னை வானிலை ஆய்வு மையம் கிழக்கில் உள்ள முக்கியமான மையமாக கருதப்படுகிறது.